திங்கள், பிப்ரவரி 16, 2026

சிகை கொற்றனும் முடி நாகனும்



முன்பு...

எகிப்தின் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிகேவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பானை ஓரி கொற்றன்" (Panaiori Korran) என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

இதைப்போன்றே..

எகிப்தின் மன்னர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளது. இந்த உலக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டாண்டு காலமாக, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்டு வரும் இந்த இடத்தில், தமிழி கல்வெட்டுக்கள் இருப்பது, யாருடைய கவனத்திற்கும் வராது போனது எப்படி?  என்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். 

இக்கல்லறை தமிழி கல்வெட்டுகளில் பெரிதும் கவனம் ஈர்த்த பெயர் 

𑀘𑀻 𑀓𑁃 𑀓𑁆 𑀓𑁄 𑀶𑁆 𑀶 𑀷𑁆

சிகை கொற்றன்.

அக்காலத்தில் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சுவர்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லறைகளைப் பார்வையிட்ட தமிழன் ஒருவன் தனது பெயரை பொறித்திருக்கக்கூடும் என்கிறது ஆய்வு உலகம். 

வரலாற்று ஆய்வாளர்கள் அனைவராலும் வைக்கப்படுகின்ற ஒரே கேள்வி..

யார் இந்த சிகை கொற்றவன்? 

சிகை என்பதற்கு, முடி, மணிமுடி, கிரீடம் என்றெல்லாம் பொருள். கொற்றன் என்றால் வெற்றி வீரன் அல்லது தலைவன் என்று பொருள் பெறுகிறது.

இந்திய தேசத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள், தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் நாகர்கள், முடிநாகர்  அல்லது சூட்டு நாகர் என்று அழைக்கப்பட்டனர். 

தென்னிந்திய முடி நாகர் சேர நாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பிற சங்க இலக்கியங்கள், முடி நாகர் சேர நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை சுட்டிக்காட்டுகின்றன.

சேர மன்னர்களும் நாக வழிபாட்டாளராகவோ அல்லது நாகர்களின் வம்சாவளியினராகவோ அறியப்பட்டனர். 

சங்க இலக்கியத்தில் கொற்றன் என்ற சொல்லின் பெருமை இருக்கிறது. சேரர் பெயர்களில் பிட்டாங்கொற்றன் என்று அது ஒலிக்கிறது. 

சேர நாட்டின் வழிபாட்டுக்குரியவர்களாக காணப்படுகின்ற இந்த முடி நாகர்களைப் போலவே, தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் இன்னொரு இன குழுவினரும் இருக்கின்றனர். 

அவர்கள்...

எகிப்தியர்கள்.

சேர நாட்டில்...
கடலை நோக்கி பார்த்தவாறு ஆதிசேஷன் மீது சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி எதை பார்க்கின்றார்? 

எகிப்தை தானே..!

எகிப்தியர்கள் முடி நாகர்களா..?

கடையெழுவளர்களில் ஒருவன் ஆய் அண்டிரன். இவன் வழிவந்த ஆய் மன்னர்களை போன்றே, ஆய் எனும் பெயரில் எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.

மோசி என்றால் தமிழில் மகன் அல்லது தலைப் பிள்ளை என்று அர்த்தம். நம்மூரில் முடமோசி எனும்  சங்ககாலப் அவரைப் போன்றே, 

தத் மோசி, ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்று மோசி எனும் பெயரில் நிறைய எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.

நைல் நதியில் ஒரு குழந்தையை கண்டெடுத்த மன்னனின்  மகள் அக்குழந்தைக்கு மோசி என்று பெயரிட்டு வளர்த்தாள்.

அந்த மோசிதான் பின்னாளில்  யூதர்களை வழி நடத்திச் சென்ற மோசஸ் என்கிறது குறிப்புகள். 

இந்தியாவில் பல அகத்தியர்கள், பல வசிட்டர்கள் இருந்தது போல,  பல விக்ரமாதித்தன்கள் இருந்தது போல, 

எகிப்து நாட்டில் ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் குறைந்தது பதினோரு மன்னர்கள் இருந்து  இருக்கின்றனர். 

ராமசெஸ்..?
பழக்கப்பட்ட பெயர் தான்.

சேஷன் என்றால் பாம்பு. ஆதி சேஷன் போல, ராம சேஷன் என்ற பெயர் எகிப்துக்கு சென்று ராமசெஸ் என்றாகி பின்னாளில் ரமேஷ் என்று ஃபாரின் ரிட்டர்ன் ஆகியிருக்கின்றது. 

இப்படி...

துண்டு துண்டாக அறுந்து  கிடைக்கின்ற வரலாற்றுச் சங்கிலிகளை சரியாக கோர்த்து பாருங்கள். 

சிகை கொற்றனும் முடி நாகனும் மட்டுமல்ல, எகிப்தியனும் கூட வேறு இல்லை என்கின்ற விவரம் புரியும்.

சமரன் 

#Egypt #tamil #pyramids #brami #கல்வெட்டு #தமிழ் #BreakingNews #epigraphy

செவ்வாய், பிப்ரவரி 03, 2026

களப்பிறர் ஆட்சி




பண்டைய தமிழகம்
கிபி மூன்றாம் நூற்றாண்டு
-----------------------------------

பிராமணர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இந்த அதிகார திமிர்த்தனங்களை, ஆதிக்க வெறியாட்டங்களை கண்டு கொதித்து எழுந்த அந்த அடித்தட்டு மக்களின் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக வெடித்தது.

பிராமணியத்தின் அட்டூழியங்களுக்கு இசைவளித்து, அவர்களின் அதிகார அடியாளாக மாறி போய் கிடந்த மூவேந்தர்களின் கொட்டத்தை அடக்கிய, பூர்வீக குடி மக்களின் புரட்சியால் ஏற்பட்ட அரசியல் மாற்றமே களப்பிறர் ஆட்சி.

பிரமதேயம், சதுர்வேதி மங்களம்  உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருந்த நிலங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அரசர்களிடம் இருந்தும், அப்பாவி மக்களிடம் இருந்தும் பொருட்குவைகளை கபடமாகப் பறிக்கும் பிராமணர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. அவர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

ஏற்றத்தாழ்வுகளுக்கு போக்கு காட்டிய பிராமணிய வால் தனங்கள் ஒட்ட நறுக்கப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்துதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் அடக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன.

களப்பிறர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த பெரும் சமூக மாற்றம்.

இது போதாதா..

பின்பு ஒரு காலத்தில்..

பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுத்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?

மேன்மை மிக்க தமிழ்  நீச பாசை என்றானது போல, மேலான பறையன் கீழானவன் என்றானது போல, களப்பிறர்களின் பொற்காலத்தை. இருண்ட காலம் என்று தலைகீழ் மாற்றம் செய்தனர்.

வட இந்தியாவிலுள்ள பேரரசுகள்கூட கால்வைக்க முடியாதுபோன தமிழகத்தில் கன்னடர்கள் வந்து மூவேந்தர்களை வென்று இங்கு முன்னூறு ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தார்கள் என்று கதை கட்டினர். களப்பிறர்கள்  கன்னடர்கள் என்று கதை கட்டினர்.

அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில் தான்.

விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

இறையனார் களவியல், பிராமியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் பரிணாமம் பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள்  மடங்கிக் கிடந்த தமிழ்ப் தமிழ்பாக்கள் தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகளாக செழுமை பெற்றதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த  பூச்சியபாதரின் மாணவரான வச்சிர நந்தி மதுரையில் திராவிட சங்கம் நிறுவியதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பலவும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும்  மேன்மை பெற்றதும் புத்தமும், சமணமும் ஏற்றம் பெற்றிருந்ததும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

அதுமட்டுமல்லாது...

சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்தது,

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

வள்ளுவ பாட்டன் வகுத்தளித்த திருக்குறள் அரங்கேறியதும் இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

அரும்பெரும் மரபின் பெரும் பெயர் பெற்ற களப்பிரர்களின் பொற்கால ஆட்சியில் தான், பிராமண வேளாள அதிகார திமுத்தனங்களால் ஆதிக்க வெறியாட்டங்களால் தூக்கி எறியப்பட்டு இருந்த தமிழ் மீண்டும் அரியணை அரியணை ஏறி ஆட்சி புரிந்தது.

களத்தில் பிறந்த ஆட்சியாதலால் அதற்கு களப்பிறர் என்று பெயர் வந்தது. அந்த களப்பிறர் வேறு யாருமில்லை, களப்பறையர் தான்.

மூவேந்தர்களை அடக்கி ஒடுக்கி முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிறர்களின் அறநெறிகளின் வழிவந்த அறிவூட்டும் தலைமகன்

எங்கள் மக்கள் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் தலைமையில் களப்பிறர்கள் எனும் மக்கள் புரட்சி மீண்டும் ஒரு நாள் வெடிக்கும்.

அன்று..!

சனாதனத்தை வேரறுப்போம்! புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!

சமரன்

Thol.Thirumavalavan 

#களப்பிறர்
#களப்பிறர்_பொற்காலம்
#இருண்டகாலமல்ல
#மக்கள்புரட்சி
#அடித்தட்டு_வரலாறு
#பண்டையதமிழகம்

ஞாயிறு, நவம்பர் 09, 2025

இளமுறியா

தனுஷ்கோடியில் இருந்து
வேகமெடுத்து உத்திரகோசமங்கை
நோக்கி பறந்து கார். 

உத்திரகோசமங்கை!

புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த உலகின் முதல் சிவ ஆலயம்,  இங்குள்ள மூலவர்  மூவாயிரம் வருடங்களுக்கும் முந்தைய சுயம்பானவர். உலகிலேயே மிகப் பெரிய மரகத நடராஜர் சிலை இங்குள்ளது என்பது போன்ற தகவல்கள் நமக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, ரைட் எடுத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் வேகமெடுத்து அகைன் ரைட் எடுத்தா உத்தரகோசமங்கை பெயர்ப் பலகை நம்மை அன்புடன் வரவேற்கிறது. 

உத்திரகோசமங்கை என்பதற்கு பார்வதிக்கு உபதேசம் தந்த இடமென்று பொருளாம். அதற்கு  முன்பு இதன் பெயர் இலவந்திகை என்கிறது இலக்கியங்கள்.

மாணிக்கவாசகர் வந்தமர்ந்த இலந்தை மரம் இன்றும் தல விருட்சமாக திகழ்கிறது. இந்த மரத்தடியில் தான் மங்களநாதர் எழுந்தருளிய இருக்கின்றார்  

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி 

மங்களநாதருக்கும் 
இன்னொரு பேர் இருக்கு. 

கார் குலுங்கி நின்றது. 

அதற்குள் கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். பார்க்கிங் கிடைக்காமல் பக்கத்து தெருவில் காரை சொருகி விட்டு எல்லோரும் இறங்க, நான் சட்டென்று நான் காரை விட்டு இறங்கி ராஜகோபுரம் நோக்கி நடந்தேன். 

கும்பாபிஷேகம் முடிந்து, நேற்று கல்யாணமான புது மாப்பிள்ளை போல ஜம்மென்று இருந்தது ராஜகோபுரம். 

ஓம் நமச்சிவாய..
ஓம் நமச்சிவாய..

கோபுர வாசலின் இருபுறமும் அமர்ந்திருந்த யாசகர்கள் சிவ நாமம் உச்சரிக்க உச்சரிக்க, என் நினைவு சட்டென்று பூர்வீக காலத்திற்கு புறப்பட்டு போனது. 

இதோ நான் நிற்கின்ற இந்த இடத்தில் தானே, இதோ என் காலடியில் தானே ஒரு காலத்தில் கடல் இருந்தது. கொடுங்கடல் குடி கொண்டிருந்தது. 

சொன்னால் யாராவது நம்புவீர்களா?

லேசாக புன்னகைத்துக் கொண்டேன்.

நான் கோபுர வாசலிலேயே தேங்கி நிற்பது கண்டு கோயிலுக்கு சென்று கொண்டிருந்த விமல் அண்ணனும்  சம்பந்தம் அண்ணனும் என் வருகை எதிர்பார்த்து அப்படியே நின்றிருந்தார்கள்.

அவர்களை நோக்கி நடந்தேன். 

பஃறுளி ஆற்றோடும்,  பன்மலை அடுக்கத்தோடும் என் சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

எல்லோரோடும் கோவிலுக்குள் நுழைந்தேன். ஏதோ விசேஷம் போல, ஏகப்பட்ட கூட்டம். 

நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உயரமான பிரகாரங்கள் கோயிலின் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்கு பங்களிப்பை தருகின்றன.

திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா? 

திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வருமே, அதுவெறும் கற்பனை காட்சி என்று தானே நினைத்தீர்கள். காட்சி அல்ல.  சங்க இலக்கியங்கள்  பதிவு செய்திருக்கும் காலத்தின் சாட்சி. 

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

என்று மாணிக்கவாசகரும் கூட அதனை உறுதி செய்கின்றார்.

அண்ணாமலையில் இருந்து கொண்டு இலவந்திகை பற்றி  பாடுகின்றாரே அந்த படலம் நடந்த இடம் வேறெங்கும் இல்லை. அதோ அந்த வாசலில் தான். 

முன்பொரு காலத்தில் உத்திரகோசமங்கையின் இந்த கோயில் வாசலில் தான் கடல் இருந்தது என்பதை கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் தான் நமக்கு கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்துகின்றன; கடற்காற்று அரித்த எச்சங்களைப் பறைசாற்றுகின்றன. 

உத்திரகோசமங்கை கோவிற் குளத்து மீன்கள் கூட கடல் நீரில் வாழும் ரக மீன்கள் தான். 

அம்மன் சன்னதிக்குச் சென்றோம். அவ்வளவாக கூட்டமில்லை. வெளிப்பிரகாரம் சுற்றிக்கொண்டு மரகத நடராசர் சன்னதிக்கு போனோம். 

மரகத சிலை முழுக்க சந்தனத்தால் பூசி, சந்தன காப்பிட்டு இருந்தனர். அங்கிருந்து வெளியில் வந்தால் எதிரே இருக்கிறது தல விருட்சமாக விரிந்து இருக்கிறது இலந்தை மரம். 
 
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான் என்று இராவணன் மனைவி மண்டோதரி கூட இங்கே வந்து வழிபட்டுச் சென்றதாக மாணிக்கவாசகர் பாடுகிறார்.

மண் முந்தியோ மங்கை முந்தியோ!

என்பது வெறும் வார்த்தை இல்லை. பெரும் நிஜம். கோயிலின் தொன்மை பேசும் சொல்லாடல். ராமேஸ்வரம்  எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

ராமேஸ்வரம் 
என்னங்க.. 
ராமேஸ்வரம்.. 

சொல்லப்போனால் அப்போது இலங்கை என்றொரு தீவே இல்லை.

ஆதி காலத்தில் இந்துமாக் கடல் என்ற ஒரு கடல் தெற்கே இல்லையே இல்லை. எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. அந்தக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

நிலமெல்லாம் ஒரே ஒரு கண்டமாக இருந்தது, அது ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை இருந்த அந்த நீண்ட நெடிய கண்டத்திற்கு லெமூரியாக் கண்டம் என்று பெயர். 

லெமூரியா கண்டம் பற்றி; குமரிக்கண்டம் பற்றி, அதன் பெயர் காரணம் பற்றி ஆகச்சிறந்த ஆய்வாளர்கள் எல்லாம் ஏதேதோ டெப்னிசியன்ஸ் சொல்லி இருக்கிறார்கள். 

ச்சும்மா...

உங்க கிட்ட ஒரு கேள்வி. லெமூரியானா என்ன மீனிங்?

கொஞ்சம் கூகுள்ல சர்ச் பண்ணிட்டு வாங்களேன். நானும்  கொஞ்சம் கோவில் சுத்திட்டு வாரேன்.

இன்னும் இன்ச் இன்சாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் காலம் இடம் தரவில்லை. அரை மனதாக, ஒருவழியா வெளியில் வந்தேன். 

எனக்கு முன்னே தம்பிகள் கோயிலை விட்டு வெளிய  வந்திருந்தார்கள். 

என்னடா இது?

கோயில் குளம்னு சுத்திக்கிட்டு, ஒரே போரா இருக்கே என்று உடன் வந்த  தம்பிகளுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டியிருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 

அவர்களுக்கு எப்படி சொல்வேன்.. 

புராண உருவாக்கங்களை, அவற்றுள் உள்ளுற உவமையாக இருக்கின்ற ஆதிமானுட நிகழ்வுகளை இப்படியான பயணங்கள் மூலமாக தான் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று.!

வெளியில் வந்து ஆளுக்கு ஆள் படங்கள் எடுத்துக் கொண்டோம். 

என்ன.. 
கூகுள்ல சர்ச் பண்ணிங்களா..? 

ஆளு ஆளுக்கு ஏதேதோ சொல்லி நீட்டி முழக்கி வச்சிருக்காங்களா.. 😊 
அதெல்லாம் அப்படியே கொஞ்சம் ஓரம் கட்டிட்டு வாங்க. 

லெமூரியா..!

அதாவது இளமுறியா என்பதே கூட நம்மூர் பெயர் தான். அதுவும் சுத்த தமிழ் பெயர் தான்.

என்ன நம்ப முடியல தானே..? 

ரொம்ப சிம்பிள்..

இலை மூரி என்றால் சோற்றுக்கற்றாழை. பரந்து விரிந்த நீண்ட நெடிய நிலம் முழுக்க சோற்றுக்கற்றாழை விளைந்திருந்ததால் இதற்கு இளமுறியா கண்டம் என்று பெயர்.

அவ்வளவு தாங்க மேட்டர்.

என்ன..

வீட்டு வாசற்படிக்கட்டுகளில் சோற்றுக்கற்றாழை தொங்கிக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவில் வந்து போகிறதா? அட அப்படி என்றால் நீங்களும் நானும் நாவலந்தேயவர் தான்.

அப்போ குமரி கண்டம்..? 

அதானே கேட்கிறீங்க..

சோற்றுக்கற்றாழைக்கு இன்னொரு பேர் குமரி. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். 

சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து, யுகம் கடந்து நிற்கும் இந்த மண்ணில்   நானும் காலாற நடக்கிறேன் என்பதே  ஒரு வைப் தானே.

சரி இங்கிருந்த எங்கே கடல் போயிற்று..?

கால நிலைகள் தந்த பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாலை நிலவானதற்கு இந்த கொடுங்கடல்தான் காரணம்.

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று 
சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி,

மங்களநாதருக்கும் ஏதோ இன்னொரு பேர் இருக்கு அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன தலைவா என்று தானே கேட்க வருகிறீர்கள்..? 

 
அது...

பிரளய நாதர்!

ஆழிப் பெருவெள்ள தலைவன்.

கூட்டி கழிச்சு பாருங்க..
கணக்கு சரியா வரும்.

#உத்திரகோசமங்கை #பிரளயநாதர் #மாணிக்கவாசகர் #தமிழ்மண் #குமரிக்கண்டம் #லெமூரியாகண்டம்  #SpiritualJourney #TempleTrails

வியாழன், ஜனவரி 23, 2025

ஆரியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் பூர்வீகம் என்ன?


ஆரியர்களும் திராவிடர்களும் இனக் குழுக்கள் அல்ல ; பயண குழுக்கள். ஒரே நிலத்திலிருந்து கிளம்பிச் சென்ற இரு பெரும் பயண குழுக்கள்.

இந்த இரு குழுவினரையும் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, ஆழிப்பேரலை எதிர்கொண்டு பூர்வீக மண்ணிலேயே போராடி வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்களின் தலைவனை பிரான் என்று அழைப்பது மரபு.

அதைப் போன்றே

சமஸ்கிருதத்தை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நிலம் வழியே பயணப் பட்டவர்கள் தங்களது மூப்பர்களை ஆர்ய என்று அழைத்துக் கொண்டனர்.

தமிழை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நீர் வழியே பயணப்பட்டவர்கள் தங்களது வழிகாட்டிகளை திராவிட என்று அழைத்துக் கொண்டனர்.

பிரான் என்பதும் ஆரிய என்பதும் திராவிட என்பதும் மரியாதைக்குரிய டைட்டில்கள். இவை அனைத்தும் நாகர்களின் தலைவர்களை, மூப்பர்களை, வழிகாட்டிகளை அடையாளப் படுத்துகின்ற Noble titles.

பின்னாளில்..
சமஸ்கிருதத்தை ஆரியம் என்றும் தமிழை திராவிடம் என்றும் பைந்தமிழர் எழுதியும் பேசியும் வந்தனர்.

சான்றாக..

வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் #த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவன்.

பாடலின் பொருள் :
வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் தாயுமானவர்.

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் #த்ராவிட வேத ஸாகரம்.

பாடலின் பொருள் :
ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் நாதமுனி.


#ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே'

(தமிழ் தாய் வாழ்த்து)

பாடலின் பொருள் :
உலக வழக்கு அழிந்து ஒழிந்த சமஸ்கிருதம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே

அதாவது சமஸ்கிருதம் என்ற வார்த்தைக்கு நிகராக ஆரியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை.

அன்னையும் (தமிழ்) பிதாவும் (சமஸ்கிருதம்) முன்னறி தெய்வம்.

தமிழ் எமது பேச்சு மொழி, சமஸ்கிருதம் எமது குறியீட்டு மொழி. தமிழ் என்பது மக்கள் மொழி. சமஸ்கிருதம் என்பது அறிவர் மொழி, இரண்டுமே தமிழர் மொழி ; அது எமது நாகர் மொழி!

உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற மெசபடோமியா நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், சீன நாகரிகம் உள்ளிட்ட உலகின் தொன்மையான நாகரீகங்களை படைத்ததும் நாகர்களின் இரு பெரும் ஆர்ய, திராவிட பயண குழுக்களே. பின் இந்த இரு குழுக்களும் தாய்நிலம் தேடி நாவலன் தேயம் வந்தடைந்தனர்.

உலகம் முழுவதும் சிதறிய தமிழன் உருவாக்கிய நகரங்கள் யாவும் எமது ஊரே! அங்கு வாழ்கின்ற யாவரும் எமது உறவே! என்பதை உணர்த்திட தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் எம் முப்பாட்டன்.

ஆனால்..

சுய சிந்தனையற்ற காப்பி பேஸ்ட் கும்பல்கள் திராவிட போலிகளின் மூலம், தமிழ் தேசிய போலிகளின் மூலம் பொய்யான பரப்புரைகளால்,

சமஸ்கிருதத்தை தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்தியத்தைப் போன்றே திராவிடத்தையும் தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்துகின்ற போக்கு இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களவாடப்படும் எமது அறிவுசார் சொத்துகள் | தாரை வார்க்கப்படும் எமது அறிவுசார் சொத்துக்கள் நிச்சயம் ஒருநாள் மீட்கப்படும்.

சமரன்

#பிரான் | #ஆரியர் | #திராவிடர் | #தமிழர் | #தமிழ் | #சமஸ்கிருதம் | #மொழி | #அறிவுசார்சொத்துக்கள்

வியாழன், ஜனவரி 09, 2025

என்ன செய்யப் போகிறீர்கள்..?


♦️தகடூர் படையெடுத்த எதிரிகளுடன் போர் செய்து களத்தில் வீழ்ந்த பறை கலியனாரின் வீரம் செறிந்த வரலாறு தகடூர் நடுகலாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. படை கட்டுவதில் பறையர்களுக்கு இருந்த திறனை, பற்றுறுதியை சோழர்கால கல்வெட்டுகளும் திருவிந்தலூர் செப்பேடுகளும் செப்புகின்றன. 

♦️வலங்கை படையே நிரந்தர போர் படை யென்றும் அந்த வலங்கை மகா சேனைகளை வழி நடத்தியவர்களே பறையர்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இடங்கை ஜாதிகளின் மீது அடக்குமுறைகளும் ஆதிக்கங்களும் செலுத்திய பறையர்களுக்கு வலங்கை மாற்றான், வலங்கை தலைவன் என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டதை 17ம் நூற்றாண்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

♦️மூவேந்தர்களின் முடியாட்சிக்கு பிறகும் கூட பறையர்கள் படை மறவர்களாக இருந்ததை, காவல் தொழில் புரிந்ததை, மக்களை காத்து நின்றதை மராட்டிய ஆவணங்கள், புதுக்கோட்டை, திருமயம் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. 

♦️திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவற்பறையனுக்கு கோயிலே உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. அந்த கோயில் இருக்கும் தெருவிற்கு காப்பறையந்தெரு என்று பெயர். அந்த காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை சங்கரநயினார் கோயில் தல வரலாறு சொல்கிறது. (https://www.instagram.com/manikirivar_official/?hl=el)

♦️சங்கரநயினார் கோயிலில் இன்றைக்கும் காவல் பறையன் மனிக்கிரீவனுக்கு சிலை வைத்து வணங்கப்பட்டு வருகிறது. அக்கோயில் இன்றும் காவற்பறையன் அருமை பெருமைகளை பேசுகிறது. சித்திரைவிழா ஆரம்பமாகும் முன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழ்கிறது. 
( https://sankarankovil.com/history.html) 

♦️ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை பொது மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். இக்காவல்பணியிலிருக்கும் அவருக்கு இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊர் மக்கள் முடிவுசெய்தனர் என்று பறையர் ஊரைப்பாதுகாக்கும் பணிபுரிந்ததை காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவில் கல்வெட்டு நமக்கு சொல்கிறது (IPS 843) 

♦️பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் பணியாற்றியதை "அரையன் அணுக்க கூவன் பறையனேன்" என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்துகிறது. (தென் இந்திய கல்வெட்டு. 14; க.எ. 56) தனக்கு கீழ் இருந்த படை வீரர்களுக்கு கட்டளையிடும் உயர் பொறுப்பில் சாக்கைப் பறையனார் என்பவர் இருந்ததை செங்கம் நடுகல் நடுகலொன்று குறிப்பிடுகிறது. 

♦️பறையர்கள் இயல்பிலேயே வீரமும் தொன்றுதொட்டு அறிவாற்றலையும் மிகுதியாக கொண்ட, மரபு வழி போர் முறைகளை கற்றறிந்தவர்கள், மரபு வழி போர் கருவிகளை பயன்படுத்துவதில் மிகவும் வல்லவர்கள் என்பது எந்தவொரு பாடப்புத்தகங்களிலும், எந்தவொரு ஆய்வுநூல்களிலும் எந்தவொரு மேடைப் பேச்சுகளிலும் எளிதில் கிட்டாத ஒரு சித்திரமாகும். ஆனால் அந்த சித்திரத்தை காலம் தமது வரலாற்று பக்கங்களில். தொடர்ச்சியாக பதிவுசெய்துக் கொண்டுதான் வருகிறது. 

அப்படி ஒரு வீர வரலாறுதான் பறையர் ரெஜிமென்ட்

♦️பிரெஞ்சுக்காரர்களிடம் மெட்ராஸை இழந்து பிரிட்டிஷார் மிகவும் பரிதாபத்துடன்  நின்றபோது, வெறும் இரண்டாயிரம் பேரைக் கொண்டு  எட்டாயிரத்திற்கும் மேலான பிரஞ்சுப் படை வீரர்களை தெறிக்கவிட்டு பூர்வீக மண்ணான மதராஸ் மாகாணத்தை மீட்டெடுத்த  'பறையர் ரெஜிமென்ட் வரலாறு தனித்துவமானது. 

♦️பறையர் படைப் பிரிவு  மட்டும் இல்லாமல் போயிருந்தால், பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்கின்ற கெத்தப்பான பேச்சு இருந்திருக்கவே இருந்திருக்காது. உலக வரைப்படமே மாறிப்போய் இருக்கும். உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும் உலக வல்லாதிக்க சக்தி யார் என்பதை தீர்மானித்தும் இந்த பறையர் ரெஜிமென்ட் போர் தான் என்று வரலாற்று ஆய்வாளர் 'Frank McLynn' குறிப்பிடுகிறார்.

♦️வெற்றிகளுடன் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வந்த பிரெஞ்சுப் படைகள் பறையர் படையின் ஆக்ரோஷ தாக்குதலால் நிலைகுலைந்துப் போனது. ஏறக்குறைய 67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில் பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது. கடந்த 16:02:1759 அன்று வெள்ளிக்கிழமை பறையர்கள்  பிரெஞ்சுப் படையை முழு முற்றாக வென்றனர்.

 
♦️மதராஸ் மீட்பு போரில் மதராஸ் பூர்வக்குடி மக்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது. ஏன் என்றால் அவர்கள் சொந்த மண்ணை காக்க போரிட்டனர் என்று 'Elder Smith' எனும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

♦️தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய மதராஸில் நடந்த இந்த போரில் பறையர்களின் பங்கு அளப்பரியது. பறையர்களின் வீரம் தியாகம் மற்றும் கடமையுணர்வு மிக்க நடத்தைக்காக நிறுவனத்தின் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி அவர்களைப் பாராட்டியதாக மனாஸ் தத்தா தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார்.

♦️இந்திய மண்ணில் பேரரசை கட்டியெழுப்ப உதவிய மக்களை மறந்துவிடுவது நியாயமில்லை" என்று ஆங்கிலேயர்களின் முகத்தில் அடித்தார் போல பேசி பறையர் ரெஜிமென்ட் வரலாற்றை வட்டமேசை மாநாட்டில் நினைவு கூறுகின்றார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்.

♦️பூர்வீக மண்ணை போராடி வென்ற அந்த ரத்தம் சரித்திரத்தின், வீர வரலாற்றின், பறையர் ரெஜிமென்ட்டின்,  266. ஆம் ஆண்டு வெற்றிவிழா வரும் பிப்ரவரி 16 ந்தேதி எதிர்வர உள்ளது. பீமா கோரேகான் போராட்டத்தை நினைவுக் கொள்கின்ற வரலாற்று ஆய்வாளர்களும் தமிழகத்து பறையர்களும் அதற்கும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற மெட்ராஸ் பறையர் போர் வரலாற்றை நினைவுகூராமலும் ஆவணப் படுத்தாமலும் கடந்து சென்றது ஏனென்று நாளை தலைமுறை கேள்வி எழுப்பும்.   

என்ன செய்யப் போகிறீர்கள்..?
 

சமரன்
09:01:2025

#ParaiyarRegiment | #TheMadrasRegiment | #History

வெள்ளி, டிசம்பர் 13, 2024

திருவண்ணாமலை தீபமும் கணியர்களின் கார்த்திகை திருநாளும்.



தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை கண்டு சுலபமாக புரிந்து கொள்ள முடியும். காற்று திரும்பவில்லை என்றால், சுடர் ஆடாமல் அசையாமல் நின்றால், தினமும் வைக்க வேண்டும். நான்கு, ஐந்து நாட்களில் காற்று திரும்பி விடும். சுடர் அனைந்து விடும். 

இதைப் பார்க்கத்தான் வீட்டின் வெளியே தீபம் பற்ற வைப்பதும் பொதுவெளிகளில் தீபம் ஏற்றுவதும். காற்று திசை மாறுவதை அறிந்து கொள்ள வேளாண் பெருமக்கள் கண்டுணர்ந்த யுத்தி தான் இந்த திருக்கார்த்திகை தீபத் திருநாள் ஆகும். 

அதே போல் வடகிழக்கு பருவக் காற்று தென்மேற்காக மாறுவது வைகாசி பௌர்ணமியில் தீபம் ஏற்றி கவனிப்பர்.  

நாமெல்லாம் இன்றைக்கு திருக்கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுகின்றோம். ஆனால் கணியர்கள் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பௌர்ணமி வெள்ளியன்றே கார்த்திகை தீபத் திருநாளை கணக்கிட்டுக் கொண்டாடிவிட்டனர். 

அப்ப, இன்றைக்கு கார்த்திகைத் தீபம் திருநாள் இல்லையா? என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. அதற்கும் ஒரு வியப்பான செய்தி சொல்கின்றேன்.

*நம்மூர் திருவண்ணாமலை ஓர் வெடித்து பொங்கிய எரிமலை.*

இது இமய மலையை விடப் பழமையான கொமேடியாட்’ எனும் அரிய வகை எரிமலையாகும். கிட்டதட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொங்கி வெடித்து 'அல்ட்ரா சல்பரிக்’ எனும் நெருப்பு குழம்பை உமிழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில் உள்ள சியர்ரா நிவேதா மலை தொடரில் உள்ள ‘மவுன்ட் ஷஸ்தா’ வோடு திருவண்ணாமலையை ஒப்பிட்டு வியக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்

திருவண்ணாமலையின் மலைகள் முழுவதும் சார்க்கோனைட் கற்களால் ஆனவை. எரிமலையில் இருந்து, நெருப்பு குழம்பாக வெளிவந்து பின்னர் குளிர்ந்த ‘அல்ட்ரா சல்பரிக்’ ஊறிய அந்த இடங்களில் வளரும் தாவரங்களை, சார்க்கோனைட் கற்களை ஆராய்ச்சி செய்திட வந்தவர்கள் தான் நம் சித்தர்கள். 

அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. அருணாசலம் என்றால் நெருப்பு மலை அதாவது எரிமலை. திருவண்ணாமலை அக்னி ஸ்தலம்  என்பதும் இதன் அடிப்படையில் தான். 

எரிமலை வெடித்து சிதறி அதன் அக்னி பிழம்பு வான்வரை உயர்ந்து நிற்க, சிவப்பிரான் அடிமுடி காணாதவாறு வானத்துக்கும் பூமிக்கும் ஜோதியாய் எழுந்ததாய் எண்ணியிருக்க கூடும்,  

முன்பொரு காலத்தில் இந்த மலை எரிமலையாக இருந்தது. அது மீண்டும் எரிமலை வெடித்து சிதறக்கூடும் என்று மக்களுக்கு நினைவூட்ட, எச்சரிக்கை படுத்த, பெருவெடிப்பு நிகழ்ந்த இந்த கார்த்திகை திங்களில் மலையில் தீபம் ஏற்றும் பழக்கம் வந்தது.

சமரன்

வியாழன், அக்டோபர் 31, 2024

ஒளி நிறைக!

*ஒளி நிறைக!*
------------------

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கின்றோமா? 

சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும். பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வடகிழக்கு புள்ளியை அடையும். பின்னர் அங்கிருந்து நகர்ந்து வந்து  மீண்டும் கிழக்கு புள்ளியில் உதிக்கும். அதன் பின் தெற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு புள்ளியை அடையும். அங்கிருந்து நகர்ந்து மீண்டும் கிழக்கே உதிக்கும்.

.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று பயணப்பட்டு மறுபடியும் கிழக்கு புள்ளிக்கு  வர ஆகின்ற காலம்  சரியாக ஒரு வருடமாகும்.

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் *சித்திரை தமிழ் புத்தாண்டு*

அதன் பிறகு சரியாக வடகிழக்கு மூலையை அடைகின்ற நாள் *ஆடி பிறப்பு.*

மறுபடியும் சூரியன் கிழக்கு மூலையை அடைகின்ற நாள் *ஐப்பசி தீபாவளி.*

கிழக்கில் இருந்து நகர்ந்து தென்கிழக்கு  மூலையை அடைகின்ற  *தைப் பொங்கல்.*

சித்திரை 
ஆடி 
ஐப்பசி 
தை 

போன்ற..

வானியல் மாற்றங்களை, அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை பைந்தமிழர்கள்  வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். கொண்டாட்டங்கள் காலப்போக்கில் விழாக்கள் ஆனது. களைப்புறுகின்ற மானுட சமூகம் களிப்படைதல் அவசியம். ஆக எதையும் கொண்டாடுவோம்!

*ஒளி நிறைக!*

யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


மகிழ்வுடன்
*சமரன்*

செவ்வாய், செப்டம்பர் 10, 2024

நற்குழவி

ஆதன் என்பது தமிழ் மரபில் தோன்றிய தொன்மையான பெயர். அதற்கு தலைவன் என்றும், அரசன் என்றும் பொருள்படும். "வாழியாதன்" என்று சங்க இலக்கியங்கள் தலைவனை விளிக்கின்றன. "நெடுஞ்சேரலாதன்" போன்ற மன்னர்கள் பெயர்களும் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைகின்றன. ஆகவே ஆதனூர் என்பது ஒரு காலத்தில் அரசனாக இருந்த ஒருவரின் பெயரால் அழைக்கப்பட்ட ஒரு ஊர். அங்கிருந்தவர்கள் அரச வம்சத்தவர்களாக இருந்தனர். 

தியாகச் சாம்பான் மகளுக்கும், சோழ மன்னனுக்கும் மகனாகப் பிறந்த குழந்தைக்கு நந்தன் என்று தங்களது வம்சாவழி பெயரை வைத்தனர். அந்த நந்தன் சோழ மண்டலத்தில் அரசாட்சி செய்தான் என்கிறது தஞ்சை வேதநாயக சாஸ்திரி தொகுத்த ஓலைச்சுவடி (கோகில அம்பல அன்பானந்தன், பக்கம் 17)
சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் நந்தன் ஒரு பௌத்த அரசனாகக் குறிக்கப் பெறுகிறார். மகத நாட்டு மன்னர் வம்சத்திலும் நந்தன் என்னும் மன்னன் உண்டு. கபிலவஸ்துவின் இளவரசனாக இருந்தவர்களில் ஒருவர் நந்தன் என்று இரேனியஸ், ஓல்டன்பர்க் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

சமண, பௌத்தக் காலக் கணிப்புப்படி பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுக் கணக்கில் 26 ஆவது ஆண்டாக 'நந்தன' வருகிறது. அவ்வாண்டில் பிறக்கும் அரசரின் குழந்தைக்கு நந்தன் (தமிழில் நற்குழவி) என்று பெயரிடுதல் வழக்கமாக இருந்தது. 

மகத நாட்டிலிருந்து இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்களே நந்தர்கள் தான்.  இப்படியெல்லாம் இருந்த நந்த வம்சத்தின் கதைகள் திட்டமிட்டு திரிக்கப்பட்டது. இந்திரன் இறக்கம் செய்யப்பட்டு சிவன் ஏற்றம் செய்யப்பட்ட போது 

நந்தர்களின் தனிக்கோயில்கள் தடை செய்யப்பட்டன. நந்தர்கள் வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய கிபி எட்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை சிவன் கோயில்களில் நந்தி இல்லை என்பதற்கு குடிமங்கலம் புராதான சிவன் கோயில், சதுரகிரி சாய்ந்த லிங்கம், ஆற்றுக்கரை லிங்கங்கள், கடற்கரை லிங்கங்கள் , காடு மேடுகளில் வழிபாடு லிங்கங்கள் சாட்சியாக நிற்கின்றன. 

சூழ்ச்சியால் வென்றவர்களால் சிவலிங்கம் கோயிலுக்கு உள்ளே போனது.  தோற்ற நந்தர்களை கோயிலுக்கு வெளியே முட்டிப்போட வைத்திருக்கிறது நந்தி எனும் பெயரில்.. 

இன்னும் யுத்தம் முழுமை பெறவில்லை 
நிச்சயம் வெல்வோம்! நந்தனை விடுதலைச் செய்வோம்!

#நந்தன்5

முந்திப் பிறந்தவன் நான்

‘பறையர்கள் ஒருகாலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். தென்னிந்தியாவின் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆதிதிராவிடர்களின் பூர்வீக சரித்திரம் என்ற நூலை எழுதிய டி. கோபால் செட்டியார் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேப்போன்று அபிதான சிந்தாமணியிலும்  தமிழ்நாட்டு புராதனக்குடிகள். ஒருகாலத்தில் பலமுள் கூட்டத்தினர் இவர்களுக்கு பூணூல் உண்டு இவர்கள். இவர்கள் பிராமணர்களை ஒத்தவர்கள். பிராமணர்களின்  வருகைக்கு முன் அந்த இடத்தில் பறையர்களே  இருந்தனர். இவர்கள் இருக்கும்  இடத்திற்கு மற்றவர் வரக்கூடாது’ என்றெல்லாம் செய்தி வருகிறது.

முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் காண் – பறையர்களின் தொண்ம பாடலும் 

பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் என்ற சொல்வழக்கும் இவைகளை உறுதிசெய்கிறது.  சேரிக்குள் பார்ப்பனரை பார்த்துவிட்டால் சாணியை  சட்டி கரைத்துக்கொண்டு அதிலே துடைப்பத்தை முக்கி பார்ப்பனரை அடிக்க ஓடுவர். அவர் மீது சாணி சட்டியை உடைப்பர் எனும் செவி வழி கதையாடல்கள் பார்ப்பனர் வருகைக்கு முன்பு அந்த இடத்தில் பறையர்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தீராப்பகை உண்டு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

பறையர்களின் வேத எதிர்ப்பால் தோற்றுப்போனவர்களின்  வழிவந்தவர்கள் அவர்களது தலைமுறைகள் வேத எதிர்ப்பு மரபிலிருந்து நந்தனின் வரலாற்றை எடுத்து அவனின் பிம்பத்தை சீர்க்குலைப்பது, இழிவுப்படுத்துவது பறையன் மன்னனாக இருந்தான் என்பதை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது. 

#நந்தன்4

நந்தன் ஒரு பறையன்

நந்தன் ஒரு பறையன் அவனொரு அடிமை, பண்ணையடிமை, அதுவும் பார்ப்பானின் கொத்தடிமை என்று கோபாலக் கிருஷ்ண பாரதியார் எழுதிய கற்பனை கதை செய்திதான் முதன்மைப்படுத்தப்பட்டது. இதுவொரு வரலாற்று நிகழ்வு என தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்களின் மனங்களில் மட்டுமல்ல, இலக்கியங்களிலும், நிகழ்த்துக் கலைவடிவங்களிலும் நீக்கமற பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஓர் அடிமைக் கற்பனைக் கதையைப் படைத்ததற்காகக் கோபாலகிருஷ்ண பாரதியார் அப்போது பெரிதும் பாராட்டப்பட்டார். பார்ப்பன உலகம் அவரை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. காந்திய அமைப்புகள் நந்தன் நாடகத்தைத் தேச விடுதலைப் போராட்டமாக உருவகப்படுத்திக் கொண்டாடின. தங்கள் மீது சுமத்தப்பட்ட சாதி, அடிமை ஆகிய தளைகளில் இருந்து விடுதலை பெறப் போராடாமல், பார்ப்பானாக மாறுகின்ற எளிய வித்தையைக் கற்றுத் உயர்வடைகின்ற கதாபாத்திரம் சாதிய ஆதிக்கவாதிகளுக்கும் மதவிற்பனர்களுக்கும் நிறைவாக இருந்தது. 

நந்தன் கதையை அவர்கள் கொண்டாடியதற்கு பின்னால் ஒரு வலுவான நோக்கம் இருந்தது. அதாவது நந்தன் ஒரு மாமன்னன், பேரரசன் என்பதை இரட்டடிப்பு செய்திட,    அந்த வரலாற்று உண்மையை  ஆழ குழித்தோண்டி புதைத்திட,  அவர்களுக்கு ஒரு அடிமை நந்தன் தேவைப்பட்டான். ஆகவே அவன் கொண்டாடப்பட்டான்.

#நந்தன்3

நந்தனை விடுதலை செய்வோம்!

இந்த நூலில் சுந்தரர் தான் யார் யாருக்கெல்லாம் அடியேன் என்று பட்டியலிட்டுக்கொண்டு வருகின்ற போது மூன்றாவது பாடலில் மூன்றாவது வரியில் “செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” என்று ஒரு ஒற்றை அடியில் திருநாளைப் போவார் எனும் ஒருவரைப்பற்றி குறிப்பிடுகிறார். இங்கிருந்துதான் நந்தன் கதை தொடங்குகிறது.

ஆறாம் நூற்றாண்டில் இராஜராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த ஒற்றை அடியை வைத்துகொண்டு பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவர் சின்னதாக ஒரு செய்யுள் இயற்றுகிறார்.  இப்படியாக நந்தன் கதையை எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரும், பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரும் கொஞ்சங் கொஞ்சமாய் கண், காத்து, மூக்கு வைத்து வளர்த்து, அவரவர் காலத்துச் சூழ்நிலையால் மெருகேற்றி, புராணக் கதைகளாக அளிக்க 

கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனை மாடு தின்னும் புலையனாக, பறையனாக,  தாழ்ந்த சாதியினராக, பார்ப்பானின் கொத்தடிமையாக, அதை விரும்பி ஏற்றுக் கொள்பவராக நந்தன் கதாபாத்திரம் வெகு சாமர்த்தியமாக வடிவமைக்கப்படுகிறது.

சேக்கிழார் கதையில் நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்ற குறிப்பில்லை.  அவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் வந்தவுடன், ஒளி வடிவம் எடுத்து இறைவனின் திருமேனியில் கலந்து விட்டார் என்று தான் வருகிறது. அவர் உள்ளே வரமுடியாமல் தடுக்கப்பட்டார் நெருப்பில் குளித்தார் என்பதெல்லாம் பெரியபுராணத்தில் இல்லை. அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த வேதியர் கதாபாத்திரமே இல்லை.

#நந்தன்2

நந்தனை விடுதலைச் செய்வோம்!

வரலாற்று புளுகில் இருந்து 
நந்தனை விடுதலைச் செய்வோம்! 
----------------------

மக்களிடையே பக்தி உணர்வை ஏற்படுத்துவதை  ,  சமய உணர்வை  மேலோங்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டுதான்  பக்தி இலக்கியங்கள்  படைக்கப்பட வேண்டும். அதன் ஊடாக அழகியலை, தொன்மங்களை கூட விவரிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட மக்களை குறிவைத்து அவர்களை இழிவுப்படுத்தி அவனே அவனை தான் ஓர் அடிமை எண்ணுகின்ற உளவியல் கட்டமைப்பை உருவாக்க  பக்தி இலக்கியங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. 

அதிலொன்று பெரிய புராணம். 

நமகெல்லாம் நந்தனார் கதை தெரியும்..

நந்தன் என்ற பெயர் பெரிய புராணத்தில் தான் முதன்முதலாக பதிவு செய்யப்படுகிறது. திருநாளைப் போவார் எனும் ஒற்றை வரியை வைத்து நந்தனார் கதையாக விரிவாக்கம் செய்த சேக்கிழார்  பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்குமான வரலாற்றுப் பகையைப் நந்தனார் கதைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும்  சமயக்குரவர் நால்வரில் ஒருவர். இவர் அறுபது  சிவனடியார்கள் குறித்தும்  9 தொகை அடியார்கள் குறித்தும் ஒரு நூல் இயற்றுகிறார். அந்த நூலுக்கு பெயர் திருத்தொண்டத் தொகை.

#நந்தன்1

பேரரசன் நந்தன்

▪️திருநாளைப் போவார்
என்று சுந்தரர் எழுதிய பக்தி 
இலக்கியத்தின் காலம் 
ஆறாம் நூற்றாண்டு.

▪️அவரைப் புகழ்ந்து 
மாணிக்கவாசகர் பாடியது 
ஏழாம் நூற்றாண்டு.

▪️திருநாளைப் போவார் 
என்பவர் குறித்து நம்பியாண்டவர் நம்பி 
ஒரு சிறிய செய்யுள் பாடியது
பத்தாம் நூற்றாண்டு

▪️திருநாளைப் போவார் 
என்பவருக்கு நந்தன் என்று பெயர் 
சூட்டி கதை அளந்துவிட்ட சேக்கிழார் 
பெரிய புராணத்தை எழுதியது 
பன்னிரண்டாம் நூற்றாண்டு.

▪️சிதம்பரம் நடராஜர் கோவிலின் 
மதில்களை இரண்டாம் குலோத்துங்கன் 
கட்டியது அதே கிபி பன்னிரண்டாம் 
நூற்றாண்டு. 

▪️ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன் 
வாழ்ந்த ஒரு மனிதன் பன்னிரண்டாம் 
நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் 
கோயிலின் தெற்கு வாயில் வழியாக 
நுழைந்தார் என்பது 

எவ்வளவு பெரிய பித்தலாட்டம்

#பேரரசன்_நந்தன்

ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

திருக்குறள் மீதான அவதூறுகளும் நமது மறுப்பும்.


----------------------------------

திருவள்ளுவர் மட்டும் ஒன்றும் பகுத்தறிவு ரீதியாக பேசிவிட்டார் என்று சொல்வதற்கு இல்லை. 
நல்வினை தீவினை பற்றி நிறைய பேசி உள்ளார். மறுபிறப்பை பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார் மறுபிறப்பு மட்டுமல்ல ஏழு பிறப்பு என்பதையும் உரக்கச் சொல்லுகிறார் 

ஒருமையில் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமா புடைத்து என்பது என்ன ?

இதைவிட ஒரு கருத்து சொல்கிறேன் 

ஒருவன் பல்லக்கை சுமப்பதற்கும் இன்னொருவன் பல்லாக்கில் ஏறி போவதற்கும் அவன் முற்பிறவியில் செய்த  நல்வினை தீவினை தான் காரணம். அதாவது பாவ காரியம் புண்ணிய காரியம் தான் காரணம் என்கிறார் வள்ளுவர் 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தாரோடு ஊர்ந்தார் இடை 

ஆக இந்த திருக்குறளில் நல்வினை தீவினை பற்றி தான் பேசுகிறார்

இப்படி...

மகாவிஷ்ணு என்பவருக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு போகிற போக்கில் திருக்குறளை களங்கப் படுத்த முயலுகின்றார் ஜெயதேவன் அவர்கள். 

அதோடு அவர் சொல்கிறார்

இதை துணிச்சலாக எழுத காரணம் தமிழில் பக்தி இலக்கிய முதல் சைவ சித்தாந்தம , நாலாயிர பிரபந்தம் தேவாரம் உபநிடதங்கள் ' புத்தர் எல்லாமே வாசித்தவன் என்ற முறையில் சற்று திமிரோடு சொல்லுகிறேன் பாவ புண்ணியம் என்பது இந்திய இலக்கியங்களில் இருக்கிறது சங்க இலக்கியங்களிலும் இருக்கிறது.

திருக்குறளிலும் நிறைய இருக்கிறது 
திருக்குறள் மட்டும் ஒன்றும் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யக்கூடிய நூல் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று முடிக்கின்றார். 
---------------------------------------

திரு. ஜெயதேவன் அவர்களே! 

வள்ளுவன் குறிப்பிடும் எழு பிறப்பு, எழுமை என்பது இன்று நாம் கருதிக் கொண்டிருக்கின்ற ஏழு ஜென்மங்கள் என்கின்ற கருத்து உடையவை அல்ல.மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்புவரை ஏழு நிலைகளாகும்.

ஆசீவகத்தில் சித்தர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகள் கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு,மண்ணிறம், வெள்ளை,நீர்வண்ணம் என ஏழு நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன

ஒருவர் தன் வாழ்வில், இந்த ஏழுநிலைகளை அடைந்துவிட்டால் அவர் பிறப்பற்ற நிலையை அடைகின்றார் என்பது ஆசீவக மரபு. ஐயன்- ஐயப்பன்- ஐயனார் அனைவரும், ஆசீவக மரபின் ஏழ்நிலையடைந்தவர்கள்.

இதை தான்..,

'கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்' 

என்கிறார் சீத்தலை சாத்தனார்.
அதாவது வீடுபேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக உயர்ந்த சுழி வெண் பிறப்புற்று வீடுபேறு அடைவர் என்று சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.
இங்கு வாழ்வியல் நிலையை குறிக்க பிறப்பு என்கின்ற சொல்லாடலை கையாளுகின்றார் சீத்தலை சாத்தனார். இதையே தான் திருவள்ளுவரும் கையாண்டு உள்ளார். 

திருக்குறள் ஒரு மறை நூல்.அதாவது ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு குறளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.ஒருவனின் வாழ்வியலுக்கு ஏற்றார் போல், சூழலுக்கு ஏற்றார் போல், அவனது  சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் குறளின் பொருள் விளங்கும். 

வைதீக சிந்தனையாளர்கள் தங்களுக்கு ஏற்றார் போல், தமது சிந்தனைகளுக்கு ஏற்றார்போல் அதனை பொருள் விளங்கிக் கொள்கின்றார். நீங்களும் அச்சிந்தனை வழியே நின்று குறளை  குறை காண்பது குறளுக்கு இழுக்கன்று.!

*சமரன்*

.

வியாழன், ஜூன் 20, 2024

திராவிடம்

சமஸ்கிருதத்தில் (द्रव).த்ரவ என்கின்ற சொல்லுக்கு நீர் என்று பொருள். த்ராவகம் என்றால் செய்நீர். த்ராதி,  த்ராதும், த்ராவயதி, போன்ற சொற்களுக்கு ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான, என்றெல்லாம் பொருள். 

சமஸ்கிருதத்தில் इड/ इडा அதாவது இட என்றால் நிலம் அல்லது பூமி, ஆக द्राव +इड=> द्राविड. அதாவது த்ராவிட என்றால் நீர் ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான நிலம் அல்லது பூமி. 

அருவிகள் கொட்டுகின்ற, ஆறு பாய்கின்ற பகுதிகள் த்ராவிடம் என்றும் அங்கு குடில் அமைத்து வசித்து தமிழ் செய்த, மொழி இலக்கணம் செய்த ஞானிகள், முனிவர்கள், சாதுகள், அறிஞர் பெருமக்கள் த்ராவிடர் என்று அழைக்கப்பட்டனர். 

இப்படி நீரைக் குறிக்கின்ற சொல் நிலத்தைக் குறிக்கின்ற சொல்லாக மாறி பின்பு அது அறிவர்களை குறிக்கின்ற சொல்லாக மாறிப்போனது. அதன் பின் அது பார்ப்பனர்களை குறிக்கும் சொல்லாகவும் வளர்ந்து எழுந்தது. 

பிற்காலத்தில், தெற்கு குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, தெலங்கானா, சீமா ஆந்திரா, ஒரிஸ்ஸா, கர்நாடகா, தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய நிலப்பரப்புகளை  த்ராவிட என்று குறிக்கப் பெற்று, த்ராவிட எனும் சமஸ்கிருத சொல்லுக்கு தென்புலம் என்று பொருள் அகராதி கொடுக்கப்பட்டது. 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களில் கற்று அறிந்த சான்றோர்க்கு திராவிடர் என்று பெயர் கொடுக்கலாம்..

வரலாற்றுச் செறிவுகளும் தொன்ம பின்புலமும் நிறைந்த திராவிட எனும் சொல்லுக்கு, வேஷ பாப்பனர்களும், போலி தமிழ்தேசியர்களும் ஏன் எதிராக இருக்கிறார்கள் என்று மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

ஆக, இத்தகைய வரலாற்றுத் தரவுகளை அறிந்து தான் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்கள் பறையர்களை சாதி பேதமற்ற திராவிடர்களாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். 

ஆதி பார்ப்பனர்கள் யார் என்ற வரலாற்று உண்மைகள் மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்ற போது ஆதி திராவிடர் என்கின்ற பெயரில் இருக்கின்ற அறிவு மரபின் வரலாற்றுச் செறிவை யாவரும் அறியக்கூடும். 



சமரன்
19:06:2024

செவ்வாய், ஜூன் 18, 2024

அடித்து நொறுக்கப்பட்ட அறிவாளிகள்"


ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக நம் நாட்டில் மாமன்னர்களும், செல்வந்தர்களும் மேல் சாதிகாரர்களும் அவர்களோடு தொடர்புடைய அறிஞர்களும் மட்டுமே கல்வி கற்று வந்தனர், கல்வியறிவு என்பது அவர்களுக்கு மட்டும் உரித்தான சிறப்பு உரிமையாக இருந்தது.


ஏழை மக்கள் கல்வி பெற்றால் தமது உரிமைகளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம், அரசுகெதிராக தமது அதிருப்தியை,எதிர்ப்புணர்வை காட்டு வதற்கு வழி வகைகளை அறிந்து கொள்வர் என்கிற காரணத்தால் ஆட்சியாளர்கள் யாரும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி புகட்டுவதை ஒரு முன்னுரிமை பணியாக கருதியதில்லை.


இதனை அனைத்து ஆட்சியாளர்களுமே மிக கவனமாக தவிர்த்து வந்தனர். அடிமை வர்க்கம் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தவைகளையே தமது அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக்கினர். இந்நிலையில் தான்.


அறிவில் செழித்த அவ்வை ஒரு ஆட்டிடை சிறுவனிடம் தோற்று போனாள், ஏகலைவன் என்றொரு எளிய மனிதன் வில்லுக்கே விஜயனை வீழ்த்தி காட்டினான், சூத்திரம் கற்ற கொன்பன் என்ற அந்த கம்பன் செல்ல காசாகி போனான் ஒரு ஏற்றகாரனிடம்.


எல்லாம் தெரிந்தவர்கள் இறுமாப்பும், எம்மை விட இங்கே யார் ? என்கிற தலைகணமும் அடித்து நொறுக்கப்பட்டு தவிடு பொடியான தருணங்கள் அவை. 


மகுடம் தரித்த குடி மருண்டு போனது; அலறி துடித்தது அவர் தம் அடி வருடி கும்பல். இதை வளர விடுவது வர்க்க பேராபத்து என உணர்ந்து காணிக்கை எனும் பெயரில் கட்டை விரல் பறிக்க பட்டது. ஆட்டிடை சிறுவன் ஆறுமுகத்தான் என திரிக்கப்பட்டது.


அடிமை வர்க்கத்தில் இருந்து அறிவாளிகளும் திறமைசாலிகளும் வரவே முடியாது, அப்படி ஒருவன் தோன்றினால் அவன் உயர் குடி விந்தில் உற்பத்தியானவன் என்கிற நச்சு கருத்து நயமாய் சொல்லப்பட்டது. இதன் தொடர் நிகழ்வுதான் தேரோட்டியின் மகன் கர்ணன் சூரியனுக்கு பிறந்ததாக சொல்லப்பட்டதும்,அவ்வை கிழவி தோற்றுப்போனது கடவுளிடம் .இடை சாதி சிறுவனிடம் அல்ல என்று மறுக்கப்பட்டதும்,

இன்னும் பிறவும்...


சதி ஆலோசனைகள் சட்டங்கள் ஆக்கப்பட்டன. படிப்பது தடை செய்ய பட்டது. உழைப்பவன் கற்பது பாவம் என உருவாகப்படுத்த பட்டது. மீறினால் தலையை வெட்டு ! காதில் ஈயம் காச்சி ஊற்று! நாக்கை அறு! என அடாவடிதனங்கள் அரங்கேறின. சாதிய படிநிலை சாமர்த்தியமாக கட்டமைக்க பட்டன. அனல் வாதம், புனல் வாதம் மூலம் கொஞ்சம் நஞ்சமிருந்த மக்கள் அறிவு களஞ்சியங்கள் அழித்தொழிக்கப்பட்டன.



பின் வந்த வெள்ளை அரசும், அதற்க்குபிறகான ஓட்டுபொறுக்கி அரசுகளும் தமது கட்டளைகளை புரிந்துனரவும், கணக்கு வழக்குகளை பார்க்க்கவுமான மிக மிக எச்சரிக்கையான கல்வியையே மக்களுக்கு கொடுத்து வருகிறது.

அதும் ராஜபாட்டைகளிலும், மாட வீதிகளிலும், கொலு வைத்த கல்வி. ஒரு விவசாய கூலிகாரன் விரும்பினாலும் தன் சந்ததிக்கு கிடைக்காத சமச்சீர் கல்வி.


மறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, இதோ.. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சிதைத்து சிதைத்து மழுங்கடிக்கப்பட்ட அந்த அறிவாயுதம் எங்கள் கைகளுக்கு வந்து தவறி விழுகிறது. 

உயர உயர பறந்தாலும் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்கிற மேற்கோள்களுக்கு பின்னிருக்கும் மோசடி தனங்களை நாங்களறிவோம். தேடி எடுத்து இறுகுப்பற்றி தூக்கி பிடிப்போம் எங்களுக்கான அந்த அறிவாயுதத்தை!


தலையை வெட்டிய கும்பலே, நாக்கறுத்த கூட்டமே, கட்டை விரலை காவு வாங்கிய வர்க்கமே நந்தனை கொன்ற நெருப்பின் மிச்சமும், நக்கீரனை எரித்த சூட்டின் வெப்பமும் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கூர் படுத்தும்.

*சமரன்*
18:06:2011

சனி, ஜூன் 15, 2024

நாமே ஏலியன்ஸ் தான்!




வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா? ஒருவேளை இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்றா? அல்லது சினிமாக்களில் காட்டப்படுவது போன்றா?

இதுப்போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் அவ்வப்போது எழுவதுண்டு. இந்த வாரம் அது கொஞ்சம் சூடுப்பிடித்துள்ளது.  

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகளின் பதில் – யெஸ்! 

வேற்றுலகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்றுலக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியாக இல்லை என எண்ண தோன்றுகிறது என்று சொல்லும் விஞ்ஞானிகள், வேற்றுலகவாசிகளை நேரில் பார்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்க கூடும் என்று ஆச்சரியத்தை கூட்டுகிறார்கள். 

நவீன அறிவியல், நிரூபணங்கள் அற்ற அனுமானங்களை, தொன்மங்களை முற்றாக நிராகரிக்கிறது. ஆனால் தொன்மம் என்பதே அறிவியலின் தாய் தான். தொன்மங்களில் இருந்துதான் அறிவியல் பிறக்கிறது. 

நீண்ட நெடிய காலம் தொட்டே வேற்றுலகவாசிகள் குறித்தான தொன்ம உரையாடல்கள் மக்களிடையே தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

வானவர்கள்,தேவர்கள்,காந்தவர்கள் என்றெல்லாம் நாம் விளித்து பேசுவது  சற்றேறக்குறைய வேற்றுலகவாசிகளை தான். அவர்களை வம்பர்  என்கிறது தமிழ். 

*அந்தப் பாம்பு உருளை வடிவில் மிக நீண்டதாக தடித்ததாக இருந்தது. அது விரும்பும் வகையிலெல்லாம் எந்த திசையிலும் நொடிப்பொழுதிம் திரும்பும் வல்லமை கொண்டது. அது மேல் நோக்கி தரையிலிருந்து கிளம்பும் பொழுது அதன் உடம்பின் பின்புறத்தில் இருந்து மிகப்பெரும் தீப்பிழம்புகள் புகை மூட்டத்துடன் வெளிவந்தது. வெளி வந்த வேகத்தில் மேல்நோக்கி சீறிப் பாய்ந்தது.*

இதுவொரு கிரேக்கக் கதையில் வரும் காட்சி. 

இது மனிதர்கள் தற்காலத்தில் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டை விவரிப்பது போல் உள்ளது. அப்போதைய ஆதிமனிதன் இலை தழைகளோடு நாகரீகமின்றி திரிந்ததால் அதை ராக்கெட் என்று சொல்லத் தெரியாமல் பாம்பு என்று குறிப்பிட்டதாக வேற்றுலககவாசிகள் கோட்பாட்டின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

ஆச்சர்யமூட்டும் கதையொன்று இருக்கிறது..

காகுடுமி என்ற அரசன், தன் மகள் ரேவதிக்கு மணம் முடிக்க நினைக்கிறான். இந்த உலகத்தில் அவள் அழகுக்கு ஈடானவள் யாரும் இல்லை எனக்கருதி பிரம்ம லோகம் செல்கிறான். அங்கே பிரம்மா கொஞ்சம் பிஸி. சற்று நேரம் காத்துவிட்டு உள்ளே செல்கிறார்கள் அரசனும் மகளும்.

உள்ளே பிரம்மாவிடம் விஷயத்தை சொன்னதும் அவர் கெக்கே பிக்கேவென்று சிரிக்கிறார். ஏன் என்று கேட்க  ‘நீங்கள் இங்கே காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 சதுர்யுகங்கள் முடிந்துவிட்டன.

உன் மனைவி, மக்கள், உறவினர்கள், அமைச்சர்கள், வேலையாட்கள் எல்லோரும் காலத்தின் சுழற்சியால் மாய்ந்துவிட்டனர்’ என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார்.

ஒவ்வொரு உலகங்களின் காலமும் ஒவ்வொரு விதமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்கிற  அறிவியலை இந்த தொன்ம கதை கோடிட்டு காட்டுகிறது.

*N = R* • fp • ne • fl • fi • fc • L ...*

என்ன இது என்று குழப்பமாக இருக்கிறதா? நாம் வாழும் இந்தப் பால்வெளியில் நம்மைப் போலவே வேறு ஒரு Aliens தோன்றியிருக்குமா எனக் கண்டறிவதற்கான கணிதச் சமன்பாடு இது. 

Drake Equation என அழைக்கப்படுகிறது.

இதில் இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் பால் வெளியில் தோன்றும் நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களில் உயிர் வாழ்வதற்கான தன்மைகள் எவ்வளவு இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

துல்லியமாக இத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன, இத்தனை கோள்கள் இருக்கின்றன என நம்மால் கணக்கிட முடிந்தால், நம் பால்வெளியில் வேறு ஒரு நாகரிகம் இருக்கிறதா இல்லையா என நம்மால் கூறி விட முடியும். 

ஆனால், இவற்றில் ஒன்றிற்குக்கூட நமக்கு விடை தெரியாது. ஆனால், ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகையைப் போட்டு இத்தனை நாகரிகங்கள் தோன்றியிருக்கலாம் எனத் தோராயமாகக் கூற முடியும்.

அதன்படி பால்வெளியில் மட்டும் 1000-ல் இருந்து 100,000,000 நாகரிகங்கள் அதாவது வேற்றுலக வாசிகள் வரை தோன்றியிருக்கலாம் என்று விடையளிக்கிறது இந்தச் சமன்பாடு.

ஆக எங்கேயோ நாம் அவர்களை கோட்டை விடுகிறோம். 

நாம் அவர்களை சரியாகத் தேடவில்லை, அவர்கள் நம்மைவிட தொலைதூரத்தில் இருக்கிறார்கள், அவர்களின் செய்தி நம்மை வந்து அடையாது அல்லது அடையவில்லை.

அவர்கள் நமது செய்திகளை கேட்க மட்டுமே விரும்புகிறார்கள். அவர்கள் நம்மை கண்காணிக்க மட்டும் செய்கிறார்கள். பூமியை ஜூராசிக் பார்க் போன்றே பாவிக்கிறார்கள். 

விஞ்ஞானிகள் சொல்வது போன்று இன்னும் எதிர்வரும் காலங்களில் aliens மனிதர்கள் சந்திப்பு நிகழுமானால், 

கடவுள் என்னும் நம்பிக்கை நிச்சயமாய் வீழ்ச்சியடையும். பல அறிவியல் குறித்தும் பேரண்டம் பற்றியும் நம்மிடையே உள்ள கருதுகோள்கள் கூட வீழலாம். உச்சம் என நாம் எண்ணும் ஊர்திகள், வானூர்திகள், ஏவு ஊர்திகள், விண்கலங்களின் வேகம் மேம்படலாம். 

நமது உடல் உட்பட , நாம் திடமென நம்பும் பலவும் வெறும் அணுக்களாலானதை கண்களால் காண கிடைக்கலாம், நம் உயிர் பற்றிய நம்பிக்கைகள் உடையலாம். துகள் வடிவு  மற்றும் அலை வடிவுகளுக்கிடையே எந்த பொருளையும் மாற்ற இயலலாம்.

காலம், இடம் பற்றிய கற்பிதங்கள் மாறலாம் அல்லது வீழலாம். மற்ற உலகங்களின் இருப்பு, தொலைவு, அவற்றின் இருத்தலுக்கான காரணிகள் நாம் கணக்கிட்டதை விட மாறுப்பட்டதாயிருக்கலாம்.

இறுதியாக, நம் மரணம் பற்றிய நம்பிக்கைகளும் கூட வீழலாம். பிறவிகளை ஒழித்து தெய்வ நிலை அடைந்து ஒளி உடலை பெறும் கல்வியை கற்க போகும் காலம் வரலாம். 

நான் ஒரு கருதுகோளை முன்வைக்கின்றேன். அல்லது இந்த கருதுகோளோடு உடன்படுகிறேன். அதாவது..

பூமியே அவர்களுக்கு ஒரு மரபணு ஆய்வுக்கூடம் தான். இங்கு அவர்கள் பலவித பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றனர். 

பல்வேறு வகையான மரபணுக்களோடு, தங்களது மரபணுக்களை இணைத்து உருவாக்கிய உயிர்களை பெருக்கியும் அழித்தும், பின்னர் தன்னைப் போலவே மனிதர்களை படைத்து அந்த மனிதர்களுடன் அவர்கள் நிகழ்த்திய உடல் சேர்க்கை காரணமாக புதிய கலப்பு மனித இனம் உருவானது. அந்த மரபினர் தான் மனிதர்கள்.

படைத்தவர்களே மனித இனத்தை
அழிக்க முயன்ற போது, அதில் ஒரு பிரிவினர் அந்த அழிவில் இருந்து மனிதர்களை காப்பாற்ற, அவனுக்கு அறிவியலை சொல்லிக் கொடுக்க, அவனை வழிநடத்த பூமியிலேயே தங்கி விட்டனர், மனிதனோடு தங்கிய வேற்றுலக வாசிகள் வேறு எவருமில்லை ; நாகர்கள் ! 

*சமரன்*

#aliens|#naga|#nasa|

செவ்வாய், மே 28, 2024

மாட்டுக்கறி தராததால் சிவபெருமான் செய்த கொலை..?

ஞாயிற்றுக்கிழமை.!

நனைந்த உடையோடு நின்றிருந்த ஸ்ரீபிரியா ரஜினியை பார்த்து 'நதியோரம் நாணல் ஒன்று..' பாடிக்கொண்டிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்தேன்.

வெளியூர் தம்பிவொருவன் வந்திருந்தான். நீண்ட நெடிய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, சாப்டியா? இட்லியும் பீப்பும் இருக்கு தம்பி கொஞ்சம் சாப்டேன் என்றேன். 

அய்..அய்யே நாங்  பீப்பெல்லாம் சாப்பிடுறதில்லை அண்ணா! என்றான்  பதட்டத்துடன். 

ஓகே ஓகே... சாப்டலனா தப்பில்ல. அது என்ன ? அய்அய்யே.. என்றேன் சிரித்துக்கொண்டே.

மாட்டிறைச்சியை இழிவாக போக்கு நம்மிடையே இருக்கு, பட். நம்மை போன்ற சாமான்ய மக்களுக்கு மாட்டுக்கறி ஒன்றும் லேசில் கிடைத்து விடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய பெரிய ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் பரிமாறப் படுகின்ற மிகப்பெரிய விருந்துகளில்  மாட்டிறைச்சி கட்டாயம் இடம்பெறும். 

மற்ற இறைச்சிகளை கொண்டு எவ்வளவு தடபுடலாக படைக்கப்பட்டாலும், பரிமாறப்பட்டாலும்  அதுவொரு சராசரி விருந்து தான். ஆனால் மாட்டிறைச்சியோடு படைக்கப்படும் விருந்தே உயர்ந்த விருந்தாகிறது. மாட்டிறைச்சி விருந்தே தான்  ராஜ விருந்து.. என்றேன்.

நம்புவதா? நம்பாமல் இருப்பதா? 
என்று புரியாமல் இருப்பது அவனது பார்வையில் தெரிந்தது.

தேயிலை தோட்டத்தில் ஆடிப்பாடிக்கொண்டிருந்த ரஜினியையும் ஸ்ரீ ப்ரியாவையும் கொஞ்சம் breeze செய்துவிட்டு அவனை தொடர்ந்தேன்..

பழந்தமிழர்கள் தீயோம்பும் அதாவது வேள்வி நடத்தும் வேத கலாசாரத்தைப் பின்பற்றியும் ஆதரித்தும் வந்துள்ளனர். 

யாகத்தீயில் மாடு உள்ளிட்ட விலங்குகளை, பொருட்களை போடுவதற்கு ஆகுதி என்பது பெயர். எழுதா கிளவியில் அதற்கு ஆஹூதி, இந்த யாகத் தீயில் நல்லா வெந்த அதாவது அவிந்து பொருட்களை பங்கு பிரிப்பதற்கு அவிஷ் பாகம் அல்லது அவிர்பாகம் என்று பெயர்.  

யாகத்துக்குப் பிறகு இந்த அவிர்பாகம் அதாவது அவிச்ச கறியை,  ரொம்ப ஈஸியா சொல்லனும்னா இந்த க்ரில்டு, தந்தூரி யெல்லாம் இருக்குல்ல அதைப்போல இருக்கின்ற அவிர் பாகத்தை வந்திருக்கும் அனைவருக்கு பங்கிட்டு  விநியோகிக்கப்படும்.

இந்த அரிச்சந்திரா கல்லாண்ட கூட மாட்டுக்கறி யார் யாருக்கு பாகமாக போகும் அப்படின்னு பாடுவாங்க தெரியுமா..?

சொல்லிமுடிப்பதற்குள்,
இல்லண்ணா, முன்னெல்லாம் எப்பயாவது பிரண்ட்ஸ்ங்க கூட சாப்பிடுவேன். இப்ப சுத்த சைவம். அதாங்..

தனக்கு மாட்டுக்கறி தரலைனு கோவப்பட்ட சிவப்பெருமான் ஒரு கொலையே செஞ்சுருக்காரு தெரியுமா ? 

பெரும் அதிர்ச்சிக்கு பின் மீண்ட அவனைக் கண்டு கொள்ளாமலே சொல்லத் தொடங்கினேன்.

ஒரு முறை பிரஜாபதிங்க சேர்ந்து யாகம் நடத்தி நடத்திய கறியை பங்குப் போட்டுக்கொண்டிருந்தனர். மாமனாராகிய தட்சன் வரும்போது அங்கிருந்த மருமவ புள்ள  பரமசிவன், அவருக்கு எழுந்திருந்து மரியாதை கொடுக்கல.  கோவம் வந்த தட்சன் இனி உனக்கு ஒரு உமுறுகறி கூட கிடையாது என்று கூறி சிவபெருமானை அசிங்கப்படுத்திட்டான். அன்னிகிலருந்து தட்சனும், பரமசிவனும் பகையாகிட்டாங்க.

கொஞ்சம் கழித்து தட்சன் நடத்திய மிகப் பெரிய யாகம் நடத்தி ராஜா விருந்து ரெடி பண்ணி இருந்தான். அந்த மாட்டுக்கறி விருந்துக்கு பரமசிவன்  பார்வதி அழைக்கப்படவில்லை. 

சரி விடுங்க எங்க  அப்பாரூ தானே, நான் கேட்டா தரவா மாட்டாரு? நான் போயி வாங்கி வரேன்' அப்படினு சொல்லி  பார்வதி பங்குப்போடுற எடத்துக்கு போனாங்க, 

அங்க அவங்களுக்கு ரெஸ்பான்ஸ் இல்ல. எல்லோரும் அந்த அம்மாவை ஷேம் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு அசிங்கமா போயிடுச்சு . அவமானம் தாங்க முடியாது பார்வதி அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் துறந்துட்டாங்க. 

விஷியத்த கேட்டு டென்ஷன் ஆன சிவ பெருமான் அந்த யாகத்தையே சூறையாடி, அங்கிருந்தவர்களை அடித்து துவம்சம் செய்து தட்சனின் கதையை கொய்தார்.

அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை ஒவ்வொரு யாகத்தின் போதும் அவிர் பாகம் துணி போர்த்தி மறைத்து கொண்டு சென்று சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது..என்றேன்.

தம்பி சிரித்துக் கொண்டிருந்தான்.

மாட்டை மட்டுமல்ல; வேதத்தையும் தோலுரித்துக் காட்ட வேண்டியது நமது கடன் அன்றோ..?

சமரன் 
28:05:2023

#Beef|#Vedicreligion|#lordofShiva|#dakshin

ஞாயிறு, மே 26, 2024

சம்பளம்

உழைப்புக்கு ஈடாக தரப்படும் ஊதியம், சம்பளம் என்பதின் ஆங்கிலச் சொல்லே  Salary

ஒன்றைக் கண்டுபிடிக்கப்படாத - 
பண்டமாற்றுப் பொருளாதாரம் திகழ்ந்த 
அக்காலத்தில் உழைப்புக்கு ஈடாக உப்பை 
அதாவது Salt ஐ பெற்ற வழக்கத்தில் 
உருவான சொல்லே Salariam.

சாளரியம் பின்னர் சாளரி ஆனது.

Salary யைக் குறித்த தமிழ்ச் சொல்லான 
சம்பளம் - என்ற சொல்லும் இதேப்போல்

சம்பா நெல்லையும் , அளத்தையும் 
(அளம் - உப்பு ) உழைப்புக்கு ஈடாக 
தொழிலாளர் பெற்ற காரணத்தால் 
உருவான பெயராகும்.

சம்பா + அளம் = சம்பளம் என்றானது.

இதுபோலவே 
தானியங்களை பெற்ற வகையில் 
உருவான வழக்கே கூலி. கூலம்  என்றால் தானியங்கள். கூலம் தந்த சொல் கூலி.

ஏதோ சொல்ல வரீங்க தானே..
இருங்க இருங்க அவசரப்பட வேண்டாம்.

அளம் என்பது உப்பைக் குறித்து 
உருவாகி , பின்னர் உப்பு எடுக்கும் 
இடத்தையும் குறித்ததாக மாறிப்போனது.
கோவளம் என்றால் அரசனின் உப்பு 
வயல். பேரளம் பெரிய உப்புவயல். 
தண்டலம் என்றால் வரி விதிக்கப்பட்ட உப்பு வயல். அதுவே பின்னாளில் ஊர் பெயர்களாகவும் ஆகிப் போயின.

ஊழியம் எனும் சொல்லே காலஓட்டத்தில் 
வழுவி ஊதியம் என்று வழங்கப்பட்டது. 
ஊழியம் என்பது தானியமோ , 
பொண்ணோ பொருளோ வாங்காமல் 
வாழ்நாள் முழுதும் அடிமைப்பணி 
செய்வது. பலனாக முதலாளி 
தொழிலாளிகளுக்கு உணவுமட்டும் 
கொடுப்பார்கள். 


ஆசீவக புத்தர்

புத்தரின் இயற்பெயர் சுகிதி 
கெளதமியின் மகன் என்பதால் கௌதம் சுகிதி புத். 

ஒளி மிகுந்த வெள்ளை யானை தாமரை மலரை பரிசாக தந்து தன் உடலில் புகுந்து கொண்டதாகக் கனவு கண்டார் மஹாமாயா ராணி. அதன் பிறகு கருவுற்று புத்தரை ஈன்றார். கிமு இரண்டாம் நூற்றாண்டில் நடந்த இந்நிகழ்ச்சி பர்ஹித் என்ற இடத்திலுள்ள ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை யானையும் தாமரை மலரும் பழைய சமணமான ஆசீவகத்தின் குறியீடுகள் என்பதோடு, புத்தர் ஆசீவக சமணத்தின் கொடை என்பது மாயா கனவின் மறைப் பொருள். அதனால் தான் புத்தர் சமணத்தின் தத்துவார்த்தங்களை தனக்கான பாணியில் முன்னெடுத்து பௌத்தத்தை தோற்றுவித்தார். ஆசீவக சித்தர்களின் மரமான அரசை மரத்தடியில் ஞானம் பெற்று புத்தர் ஆனார். பூரணம் என்றால் முழுமை. முழு நிலா நாளில் புத்தரும் முழுமை அடைந்தார். சுகிதி யாக அவதரித்து, புத்தராக ஞானம் பரிபூரணம் அடைந்த வைகாசி விசாக பௌர்ணமி நாளே புத்த பூர்ணிமா.

சனாதனத்தை வேரறுக்க ; சனநாயகத்தை வென்றெடுக்க முழுமூச்சாக போராடிவரும் பெளத்த உறவுகள் யாவருக்கும் இனிய புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள்!

மகிழ்வுடன் 
சமரன் 

 #BuddhaPurnima | #Buddha | #BuddhaDay | #BuddhaPurnima2024 | #Peace