*ஒளி நிறைக!*
------------------
சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கின்றோமா?
சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும். பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வடகிழக்கு புள்ளியை அடையும். பின்னர் அங்கிருந்து நகர்ந்து வந்து மீண்டும் கிழக்கு புள்ளியில் உதிக்கும். அதன் பின் தெற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு புள்ளியை அடையும். அங்கிருந்து நகர்ந்து மீண்டும் கிழக்கே உதிக்கும்.
.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று பயணப்பட்டு மறுபடியும் கிழக்கு புள்ளிக்கு வர ஆகின்ற காலம் சரியாக ஒரு வருடமாகும்.
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் *சித்திரை தமிழ் புத்தாண்டு*
அதன் பிறகு சரியாக வடகிழக்கு மூலையை அடைகின்ற நாள் *ஆடி பிறப்பு.*
மறுபடியும் சூரியன் கிழக்கு மூலையை அடைகின்ற நாள் *ஐப்பசி தீபாவளி.*
கிழக்கில் இருந்து நகர்ந்து தென்கிழக்கு மூலையை அடைகின்ற *தைப் பொங்கல்.*
சித்திரை
ஆடி
ஐப்பசி
தை
போன்ற..
வானியல் மாற்றங்களை, அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை பைந்தமிழர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். கொண்டாட்டங்கள் காலப்போக்கில் விழாக்கள் ஆனது. களைப்புறுகின்ற மானுட சமூகம் களிப்படைதல் அவசியம். ஆக எதையும் கொண்டாடுவோம்!
*ஒளி நிறைக!*
யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
மகிழ்வுடன்
*சமரன்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக