இந்த நூலில் சுந்தரர் தான் யார் யாருக்கெல்லாம் அடியேன் என்று பட்டியலிட்டுக்கொண்டு வருகின்ற போது மூன்றாவது பாடலில் மூன்றாவது வரியில் “செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” என்று ஒரு ஒற்றை அடியில் திருநாளைப் போவார் எனும் ஒருவரைப்பற்றி குறிப்பிடுகிறார். இங்கிருந்துதான் நந்தன் கதை தொடங்குகிறது.
ஆறாம் நூற்றாண்டில் இராஜராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த ஒற்றை அடியை வைத்துகொண்டு பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவர் சின்னதாக ஒரு செய்யுள் இயற்றுகிறார். இப்படியாக நந்தன் கதையை எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரும், பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரும் கொஞ்சங் கொஞ்சமாய் கண், காத்து, மூக்கு வைத்து வளர்த்து, அவரவர் காலத்துச் சூழ்நிலையால் மெருகேற்றி, புராணக் கதைகளாக அளிக்க
கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனை மாடு தின்னும் புலையனாக, பறையனாக, தாழ்ந்த சாதியினராக, பார்ப்பானின் கொத்தடிமையாக, அதை விரும்பி ஏற்றுக் கொள்பவராக நந்தன் கதாபாத்திரம் வெகு சாமர்த்தியமாக வடிவமைக்கப்படுகிறது.
சேக்கிழார் கதையில் நந்தனார் தாழ்த்தப்பட்டவர் என்ற குறிப்பில்லை. அவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் வந்தவுடன், ஒளி வடிவம் எடுத்து இறைவனின் திருமேனியில் கலந்து விட்டார் என்று தான் வருகிறது. அவர் உள்ளே வரமுடியாமல் தடுக்கப்பட்டார் நெருப்பில் குளித்தார் என்பதெல்லாம் பெரியபுராணத்தில் இல்லை. அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த வேதியர் கதாபாத்திரமே இல்லை.
#நந்தன்2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக