முன்பு...
எகிப்தின் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிகேவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பானை ஓரி கொற்றன்" (Panaiori Korran) என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இதைப்போன்றே..
எகிப்தின் மன்னர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளது. இந்த உலக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆண்டாண்டு காலமாக, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்டு வரும் இந்த இடத்தில், தமிழி கல்வெட்டுக்கள் இருப்பது, யாருடைய கவனத்திற்கும் வராது போனது எப்படி? என்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
இக்கல்லறை தமிழி கல்வெட்டுகளில் பெரிதும் கவனம் ஈர்த்த பெயர்
𑀘𑀻 𑀓𑁃 𑀓𑁆 𑀓𑁄 𑀶𑁆 𑀶 𑀷𑁆
சிகை கொற்றன்.
அக்காலத்தில் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சுவர்களில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்தது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லறைகளைப் பார்வையிட்ட தமிழன் ஒருவன் தனது பெயரை பொறித்திருக்கக்கூடும் என்கிறது ஆய்வு உலகம்.
வரலாற்று ஆய்வாளர்கள் அனைவராலும் வைக்கப்படுகின்ற ஒரே கேள்வி..
யார் இந்த சிகை கொற்றவன்?
சிகை என்பதற்கு, முடி, மணிமுடி, கிரீடம் என்றெல்லாம் பொருள். கொற்றன் என்றால் வெற்றி வீரன் அல்லது தலைவன் என்று பொருள் பெறுகிறது.
இந்திய தேசத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள், தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் நாகர்கள், முடிநாகர் அல்லது சூட்டு நாகர் என்று அழைக்கப்பட்டனர்.
தென்னிந்திய முடி நாகர் சேர நாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பிற சங்க இலக்கியங்கள், முடி நாகர் சேர நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை சுட்டிக்காட்டுகின்றன.
சேர மன்னர்களும் நாக வழிபாட்டாளராகவோ அல்லது நாகர்களின் வம்சாவளியினராகவோ அறியப்பட்டனர்.
சங்க இலக்கியத்தில் கொற்றன் என்ற சொல்லின் பெருமை இருக்கிறது. சேரர் பெயர்களில் பிட்டாங்கொற்றன் என்று அது ஒலிக்கிறது.
சேர நாட்டின் வழிபாட்டுக்குரியவர்களாக காணப்படுகின்ற இந்த முடி நாகர்களைப் போலவே, தலைகளில் நாக இலைச்சினைகளை சூடி இருக்கும் இன்னொரு இன குழுவினரும் இருக்கின்றனர்.
அவர்கள்...
எகிப்தியர்கள்.
சேர நாட்டில்...
கடலை நோக்கி பார்த்தவாறு ஆதிசேஷன் மீது சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி எதை பார்க்கின்றார்?
எகிப்தை தானே..!
எகிப்தியர்கள் முடி நாகர்களா..?
கடையெழுவளர்களில் ஒருவன் ஆய் அண்டிரன். இவன் வழிவந்த ஆய் மன்னர்களை போன்றே, ஆய் எனும் பெயரில் எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.
மோசி என்றால் தமிழில் மகன் அல்லது தலைப் பிள்ளை என்று அர்த்தம். நம்மூரில் முடமோசி எனும் சங்ககாலப் அவரைப் போன்றே,
தத் மோசி, ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்று மோசி எனும் பெயரில் நிறைய எகிப்திய மன்னர்கள் இருந்திருக்கின்றனர்.
நைல் நதியில் ஒரு குழந்தையை கண்டெடுத்த மன்னனின் மகள் அக்குழந்தைக்கு மோசி என்று பெயரிட்டு வளர்த்தாள்.
அந்த மோசிதான் பின்னாளில் யூதர்களை வழி நடத்திச் சென்ற மோசஸ் என்கிறது குறிப்புகள்.
இந்தியாவில் பல அகத்தியர்கள், பல வசிட்டர்கள் இருந்தது போல, பல விக்ரமாதித்தன்கள் இருந்தது போல,
எகிப்து நாட்டில் ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் குறைந்தது பதினோரு மன்னர்கள் இருந்து இருக்கின்றனர்.
ராமசெஸ்..?
பழக்கப்பட்ட பெயர் தான்.
சேஷன் என்றால் பாம்பு. ஆதி சேஷன் போல, ராம சேஷன் என்ற பெயர் எகிப்துக்கு சென்று ராமசெஸ் என்றாகி பின்னாளில் ரமேஷ் என்று ஃபாரின் ரிட்டர்ன் ஆகியிருக்கின்றது.
இப்படி...
துண்டு துண்டாக அறுந்து கிடைக்கின்ற வரலாற்றுச் சங்கிலிகளை சரியாக கோர்த்து பாருங்கள்.
சிகை கொற்றனும் முடி நாகனும் மட்டுமல்ல, எகிப்தியனும் கூட வேறு இல்லை என்கின்ற விவரம் புரியும்.
சமரன்
#Egypt #tamil #pyramids #brami #கல்வெட்டு #தமிழ் #BreakingNews #epigraphy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக