உழைப்புக்கு ஈடாக தரப்படும் ஊதியம், சம்பளம் என்பதின் ஆங்கிலச் சொல்லே Salary
ஒன்றைக் கண்டுபிடிக்கப்படாத -
பண்டமாற்றுப் பொருளாதாரம் திகழ்ந்த
அக்காலத்தில் உழைப்புக்கு ஈடாக உப்பை
அதாவது Salt ஐ பெற்ற வழக்கத்தில்
உருவான சொல்லே Salariam.
சாளரியம் பின்னர் சாளரி ஆனது.
Salary யைக் குறித்த தமிழ்ச் சொல்லான
சம்பளம் - என்ற சொல்லும் இதேப்போல்
சம்பா நெல்லையும் , அளத்தையும்
(அளம் - உப்பு ) உழைப்புக்கு ஈடாக
தொழிலாளர் பெற்ற காரணத்தால்
உருவான பெயராகும்.
சம்பா + அளம் = சம்பளம் என்றானது.
இதுபோலவே
தானியங்களை பெற்ற வகையில்
உருவான வழக்கே கூலி. கூலம் என்றால் தானியங்கள். கூலம் தந்த சொல் கூலி.
ஏதோ சொல்ல வரீங்க தானே..
இருங்க இருங்க அவசரப்பட வேண்டாம்.
அளம் என்பது உப்பைக் குறித்து
உருவாகி , பின்னர் உப்பு எடுக்கும்
இடத்தையும் குறித்ததாக மாறிப்போனது.
கோவளம் என்றால் அரசனின் உப்பு
வயல். பேரளம் பெரிய உப்புவயல்.
தண்டலம் என்றால் வரி விதிக்கப்பட்ட உப்பு வயல். அதுவே பின்னாளில் ஊர் பெயர்களாகவும் ஆகிப் போயின.
ஊழியம் எனும் சொல்லே காலஓட்டத்தில்
வழுவி ஊதியம் என்று வழங்கப்பட்டது.
ஊழியம் என்பது தானியமோ ,
பொண்ணோ பொருளோ வாங்காமல்
வாழ்நாள் முழுதும் அடிமைப்பணி
செய்வது. பலனாக முதலாளி
தொழிலாளிகளுக்கு உணவுமட்டும்
கொடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக