1977 ஆகஸ்ட் 15,
அமெரிக்காவில் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் வானொலி தொலைநோக்கியால் ஒரு வலுவான குறுகலான சமிக்ஞை பெறப்பட்டது
சுமார் 72 வினாடிகள் தொடர்ந்த அந்த சமிக்ஞை தரவை நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழக வானியலாளர் ஜெர்ரி ஆர். எஹ்மன் மறுபரிசீலனை செய்யும் போது ஒழுங்கற்று இருப்பதை கண்டுபிடித்தார்.
கணிணி தந்த பிரிண்ட் அவுட்டில் 6EQUJ5 என்று பதிவான இடத்தை Wow எனக் குறிப்பிட்டார்.இந்த சமிக்ஞை Sagittarius அதாவது தனுசு விண்மீனின் திசையிலிருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டது. A twist in the story என்னவென்றால்.. அதில் வேற்றுக் கிரக அடையாளங்கள் இருப்பதாக சொல்லப்பட்டதுதான்.
வேற்று கிரகவாசிகளை பற்றி செய்திகளை, அவர்களை தொடர்பு கொள்வது பற்றிய ஆய்வுகளை கண்டு மக்கள் நீண்ட காலமாக ஆச்சரியப்படுகிறார்கள். அது போன்ற கதைகளை திரைப்படங்களை ஆர்வத்துடன் கவனிக்க தோன்றுகின்றனர்.
தொன்ம வரலாறுகள் முழுவதிலும், கடவுள்கள் வானத்திலிருந்து வந்து, ஞானத்தைப் பகிர்ந்துகொண்டு, மனித சமூகங்களை வடிவமைத்த கதைகள் உள்ளன.
பைபிளில், கூட "நம்முடைய சாயலின்படி மனிதனை உருவாக்குவோம் என்ற வார்த்தை வருகின்றது.
உண்மையில் அல்லாஹ் எப்போதும், உங்களைக் கண்காணிப்பவனாகவே இருக்கின்றான் என்கிறது குர்ஆன்.
உலகின் தொன்மையான மதங்களில் எல்லாம் இதுபோன்ற குறிப்புகள் நமக்கு காணக் கிடைக்கின்றது.
ஆக வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட பலமடங்கு பரிணாம / தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து விட்டார்கள். அவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். நம்மை தொந்தரவு செய்யாமல் நம்மை கண்காணிக்கிறார்கள் . கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் நாம் மிருகங்களை கவனிப்பது போல.
பிறகு வேற்றுக்கிரகவாசிகள் என்பவர்கள் வேறு யாரோ என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாமே ஒரு வேற்றுக்கிரகவாசிகள் தான்.
வானத்திலிருந்து வந்து மனிதர்களை படைத்தது அந்த மனிதர்களுடன் நடத்தப்பட்ட கலப்பில் உருவானது தான் மானிட சமூகம்.
சமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக