மொழியா.. இசையா?
-------------------------
*தகவல்*
நாதமே பிரபஞ்சத்தின் உருவாக்கம். நாதம் என்றால் வேறொன்றுமில்லை, இசை. அனைத்திற்கும் ஆதாரமே மையமே இசைதான். அதாவது, இந்த பிரபஞ்சமே இசையால் ஆனது.
பிரம்மனுக்கும் திருமாலுக்கும் மூத்தவன். அவனே அனைத்திற்கும் ஆதி; அவன் நாதப் பறையன். ஒன்பது வகை பறை இசைக்கும் பறையன் எம் இறைவன் என்கிறார் திருமூலர். மொழியை விட இசை உயர்ந்ததா? என்பதை விட இசை இறைத்தன்மை நிகரானது என்பதற்கு எல்லாம் சான்றுகள்.
ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே..!
*கூடுதல் தகவல்*
பறையன் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. பறை யோகம், பறை போகம், பறை அதீதம் என்பதெல்லாம் அதீத ஞான நிலைகள். அத்தகைய அறிவு நிலையை | பறை நிலையை அடைவதற்காக தான் திருமூலர் போன்ற ஞானிகள் வேண்டி தவம் இருந்தனர். அந்த ஞான நிலை வம்சத்தினரை இழிவானவர்கள் என்று மாற்றும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவாகி இருக்கக்கூடும். அத்தகைய ஆழ்ந்த பொருள் கொண்ட.தத்துவார்த்தப் பெயரை தாழ்த்தப்பட்டோர் என்று மொழிபெயர்ப்பது அயோக்கியத்தனமானது.
*சமரன*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக