வெள்ளி, அக்டோபர் 13, 2023

நாகர்கள்



“நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகாஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது...”

மகாபாரத யுத்தகளம் திகிலுடன் விவரிக்கும் நாகாஸ்திரம் பற்றி சொல்லும்முன் உங்களுக்கெல்லாம் ஒரு ஒன் மார்க் கொஸ்டீன்?

நாகரீகங்கள் எத்தனை வகைப்படும், 
அவை யாவன ?

ரொம்ப யோசிக்கவேணாம் ; நானே சொல்லிடவா? 

ஆடு மேய்க்கும் நாகரீகம் 
மாடு மேய்க்கும் நாகரீகம் 
ஒட்டகம் மேய்க்கும் நாகரீகம் - என நாகரிகங்கள் மூன்று வகைப்படும்

நாகரீகம் என்ற சொல் நாகர்களிடமிருந்தே தொடங்குகிறது. இந்த மானுட சமுகத்துக்கு நாகரீகத்தை கற்றுத்தந்தவர்களே நாகர்கள் தான். அவர்கள் வகுத்து தந்த, வாழ்ந்துகாட்டிய வாழ்க்கைமுறையே நாகரீகம். 

மறவர், ஒளியர், எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் 
என்போர் பழம் தமிழ்குடிகள். இந்த ஆதிகுடிகளுக்கே மூதாதையர் நாகர்கள். புத்தரும், மகாவீரரும் கூட நாக இனப் பெரியோர்களே என்கிறது அகழ்வாராய்ச்சி ஏடுகள். அசுரர் நாகர்களின் உட்பிரிவு.

பறைகட்டி இசை வகுத்த பாணர்களும் நாகர் குலத்தினரே. நாகபாணர் என்ற பெயர்கள் இதை இன்னும் உறுதிசெய்கிறது. இதில் பால் போன்ற வெள்ளைநிறமுடைய பாணர்களுக்கு பெயர் பால்பாணர்! 
இவர்கள் தான் பின்னாளில் பார்பானர்கள் என்றானர். 

அய்யோடா..
பார்ப்பனர்களும் பறையர்களும் ஒரே குலமா? என்று அதிர்ந்துபோகிறவர்கள் கொஞ்சம் பொறுங்கள்..!

பீப்பீ... 
அதாங்க ..
நாகஸ்வரம் என்று அழைக்கப்பட்டு இன்று நாதஸ்வரம் என்று பொருள்மாறிபோன நாகபாசுவரம் வாசித்தவர்களும் இவர்களே. 

சங்க இலக்கியம் சொல்லும் ‘வலையர்’ யார் தெரியுமா ? 
கடற்கரையோரம் வசித்த பாணர்களின் ஒரு பிரிவு. மீன்பிடிப்பதுதான் இவர்கள் தொழில். அதாவது இன்றைய மீனவர் 

------- :)
இன்றைக்கு நாமெல்லாம் காஞ்சி பட்டு , ஆரணி என்று பெருமை பொங்க பேசுகிறோமே அன்றைக்கு பட்டுக்கு பேர்ப்போனதே கலிங்கத்து பட்டுதான். கலிங்கநாட்டு நாகர்கள் நெசவுக் கலையில் புகழ்பெற்ற கில்லாடிகள்.

அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீலநாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் பாடுகின்றனர். 

அங்கே ப்ளு கலர் லெனின் சர்ட் போட்டுக்கொண்டு நிற்கிறாரே அவர்தான் நான் சொன்ன ஆள் ! என்று கூட்டத்தோடு கூட்டமாக நிற்பவரை ஆடைகளை வைத்து கண்டுபிடிக்கிறோமே, அதை போல நிஷத நாட்டு மன்னனான நளனை அவரது மனைவியான  தமயந்தி கண்டுபிடித்தது கூட நாகர் பரிசளித்த ஆடையை வைத்துதான். 

பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை நெய்துஅணியும் நெசவாளர்கள் என்று சங்க இலக்கியம் நாகர் புகழ் பேசுகிறது.

இப்படியாக...
பார்ப்பானர்களில் தொடங்கி  பறையர்கள் வரை படர்ந்திருக்கும் அனைத்து சாதிகொடிகளுக்கும்  ஆதி வேர்; ஆணி வேர் - நாகர்கள்.

பீமனுக்கு விஷம் கொடுத்து ஆற்றில் வீசிய போது காப்பாற்றியதும்...
ஆனாப்பட்ட கிருஷ்ண பகவனே பயந்தானே...

"நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகாஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது...” என 

மகாபாரத யுத்தகளம் திகிலுடன் விவரிக்கும் அந்த நாகஸ்திரத்தை பரிசளித்து கர்ணனை ஆதரித்ததும் சாட்சாத் நாகர்கள் தான். நாகர்கள் கூட்டத்தின் மாபெரும் வானிலை அறிஞர் கார்கோடகன். 

புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் இவர்களெல்லாம் யாரென்று கேட்கிறீர்களா? 
சங்ககால நாகர்இன புலவர்கள். 

இதில் முரஞ்சியூர் முடிநாகராயர் 
சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் ஏராளமான பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் தான் மொழிக்கு எழுத்து வடிவம் தந்தனர். அந்த எழுத்துமுறை நாகரி அல்லது நகரி.

------ :)

நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்தது. அதாவது உலகின் அடிப்பகுதி, ஆகவேதான் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு பாதாளலோகம் என்று பெயர். நாக வழிபாடும் நாக இலச்சினையை அணிந்தும் வாழ்ந்திருந்த நாகர்களை வேதமும் பழைய இனமாகவே அறிவிக்கிறது 

வரலாற்றுக்காலத்துக்கு முன்பும் வரலாற்றுக்காலத்திலும் நாகர்களைப் பற்றிய பல குறிப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. 

கம்போடிய நாட்டில் மிகப் பிரசித்தமாக இருக்கும் அங்கோர், அங்கோர் தோம், அங்கோர் வாட் ஆகிய கோவில்கள் நாகா வம்சத்தவர்களின் எச்சங்கள். அவர்கள்தான்ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். இன்றைய டெல்லி இருக்கிறதே அதுதான் முன்பொரு காலத்தில் நாக தேசத்தின் தலைநகர்.

மெக்ஸிகோவில் வெடித்த சோழன் நாகா புரட்சியை முன்னின்று  நடத்தியவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள். தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று அழைத்துக்கொள்ளும் சோழன் நாகர்களே அவர்கள். 

நீர்த்துப்போன நாகர் வழிபாட்டு முறைமை தான் இன்றைய சைவம்.  தக்ஷக் என்றால் தெற்கு. தக்ஷகன் என்றால் தெற்கு பகுதியின் தலைவன்; தெற்கு பகுதியில் வாழ்ந்த நாகர்களின் தலைவன் 'தக்ஷகன். இப்போதாவது புரிகிறதா? 

தென்னாடுடைய தலைவன் யாரென்று.....

Samaran Nagan

கருத்துகள் இல்லை: