வாசுகி பாம்பு..?
மானுட குலத்திற்கு அறிவு புகட்ட வந்த அறிவியலாளர்கள் நாகர்கள். இந்து புராணகதைகளில் அசுரர்களாக | ராட்சசர்களாக | சித்தரிக்கப்படுவது இந்த நாகர்களை தான். யூத | கிருஸ்துவ | இஸ்லாமிய மதங்கள் சித்தரிக்கும் சாத்தானும் இந்த நாகர்கள் தான்.
தனது சுய லாபங்களுக்காக மனித குலத்தை அடிமைப் படுத்திய கடவுளர்களுக்கு எதிராக மக்கள் பக்கம் நின்ற போராடிய கலக்காரர்கள். மதங்களுக்கு வேதங்களுக்கும் எதிராக கலகம் செய்த புராட்சிக்காரர்கள்.
தன்னை அறிவதே இறைத்தன்மை என்னும் கோட்பாட்டு தலைவர்கள்.
வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலும் இந்திய நிலப் பரப்பு முழுவதும் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள்.
அஹிவ்ரித்ரா, அஸ்வசேனா, தக்ஷகா, கோனந்தா, லோஹாரா, வடக்கின் கர்கோடா; கிமு 642 இல் காசியின் பிரகமதுத்தா, மகதத்தின் சிசுநாகா (பண்டைய இந்தியாவில் புரட்சி மற்றும் எதிர் புரட்சி: டாக்டர். பி. ஆர். அம்பேத்கர்), வடகிழக்கு நாகாஸ்; மத்திய இந்தியாவில் பத்மாவதி (பார்ஷிவா), விதிசா, எரன், மதுரா, அஹிச்சத்திரம், கௌசாம்பி, மாளவா, சக்ரகோட், போகவதி என நீளும் நாக அரசர்கள்.
சாதவாகனர்கள் (கி.மு. 235 - கி.பி. 225) சுட்டுக்கள், சாளுக்கியர், பல்லவர், கடம்ப, சிந்தகா, சேர, தென்னிந்திய சோழர் உள்ளிட்டோர் நாகர் கலப்பில் உருவான வம்சங்கள்.
சங்ககால தமிழர்களின் | நாகர்களின் பெயர்கள் பெரும்பாலும் சாத்தன் | சாத்தான் | சாத்தி | பிடாரான் | பிடாரி கொன்றன் | கொற்றி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலகேசியில் பூதவாதியின் அதாவது உலகாயதம் பெயர்கூட பிசாசகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீன மற்றும் ஜப்பானிய புராணங்களில் வரும் #டிராகன் என்பதே நாகன் தான். #இன்கா என்பதும் நாகா தான்; #கானா என்பதும் நாகா தான். ஆதி சாத்தன் தான் ஆதிசேஷன் என்றானது.
வாசுகி தட்சன் கார்கோடகன் என்பதெல்லாம் நாக பேரரசர்களே அன்றி பாம்புகள் அல்ல.
தமிழர்களின் வரலாறு மட்டுமல்ல மனித குல வரலாறு என்பதே நாகர்களிடமிருந்து தான் துவங்குகிறது. உலகின் தொன்மையான இனக்குழுக்கள் யாவரும் கலப்பின நாகர்கள் தான்.
கலப்பில்லாத நாகர்கள் யார் தெரியுமா? பறையர்கள்.
அறிவியலாளர்களாக, அறிஞர் பெருமக்களாக, ஆட்சியாளர்களாக பூமிப்பந்தில் கோலோச்சி நின்ற நாகர்களை பாம்புகள் என்று மொழிபெயர்ப்பு செய்வது அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை களை மூடி மறைத்திட, வரலாற்று அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்யும் திட்ட மிட்ட துரோகம் அன்றி வேறென்ன?
சமரன்
#Nagar| #trahan | #Inka
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக