சனி, டிசம்பர் 30, 2023

துப்பாக்கி வணக்கம்



முன்பெல்லாம்..

வேறொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கான முதன்மையான வழி கடல் மார்க்கம்தான் இருந்தது. அதுமட்டுமல்லாது ஒரு நாட்டின் மீது போர் புரிய வேண்டுமென்றால் அந்த நாட்டின் கடல்வழியே எதிரி நாட்டின் படைகள் ஊடுருவது வழக்கம்.

எனவே ஒவ்வொரு நாடும் தனது கடற்படையை வலிமையாக அமைத்துக்கொண்டு எதிரி நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர்.  

இந்த கடற்படை வீரர்கள் போர் கப்பலின் பீரங்கிகளும், Muzzle loader என்ற துப்பாக்கிகளையும் தங்களின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். 

அதிலும் குறிப்பாக 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பெரும்பாலும் Muzzle loader என்ற வகையை சார்ந்தவையாக இருந்தது. 

இந்த Muzzle loader துப்பாக்கி என்பது ஒரு முறை சுட ஒரு குண்டு மட்டுமே பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்திய பிறகு அந்த துப்பாக்கியில் மீண்டும் வெடிமருந்து நிரப்ப அதன் வாய் பகுதியின் வழியே துப்பாக்கி குண்டை லோட் செய்வர். அதற்கு சிறிது காலதாமதமாகும்.

போர் முடிந்து மீண்டும் தனது நாட்டுக்கு கடல் வழியாக திரும்ப வரும் போர் வீரர்கள் இனி யாரையும் தாக்குகிற எண்ணம் இல்லை என்பதை தெரிவிக்கும் விதமாக தங்களிடமிருக்கும் பீரங்கிகளால் துப்பாக்கிகளால் வானத்தைப் பார்த்து சுடுவர். 

இதேபோன்று கடல் பயணம் செய்து மற்றொரு நாட்டிற்குள் நுழைகின்றவர்கள் நாங்கள் உங்கள் எதிர்கள் அல்ல; எங்களுடைய துப்பாக்கிகளில் குண்டுகள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வானத்தை பார்த்து தலா ஒரு குண்டு விதமாக ஏழு குண்டுகள் சுடுவர். 

அந்த 7 குண்டுகளுக்குப் பதில் சொல்லும் சமிக்ஞையாக கப்பல் வந்து சேரும் நாடு தாங்கள் கரையில் நிறுத்தி வைத்திருக்கும் பீரங்கிகளால் மூன்று மூன்று குண்டுகளாக 21 முறை விண்ணை நோக்கி சுடுவார்கள். 

எங்களாலும் உங்களுக்கு எந்த வித ஆபத்து இல்லை என்பதை வானத்தை நோக்கி சுட்டு உறுதிப்படுத்துவர். இதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கையும், நன்றியும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கடற்படையின் நீண்டநாள் வழக்கமான இந்த நடைமுறை நாளடைவில் இரு நாட்டு கடற்படையினருக்கு இடையே நடைபெறும் சண்டையில் ஒரு நாட்டு படையினர் சமாதானம் மற்றும் சரணடைதல் போன்ற தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு விதிமுறையை பின்பற்றினர்.

இதுவே ராணுவ சம்பிரதாயமாக மாறிப்போனது. இதனை உலக நாடுகளும் ஏற்க, சர்வதேச முறையாக மாறியது. 

குண்டுகள் முழங்குதல் என்பது இறுதிச் சடங்குகளில் மட்டுமின்றி குடியரசுத் தலைவர் பதவியேற்பு, வெளிநாட்டு அதிபரை நம் நாட்டுக்கு வரவேற்கும்போது, குடியரசுதினம், என அரசு விழாக்களிலும் பரவி

சமூகத்தில் மக்களின் மத்தியில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இந்த ராணுவத்தினரால் நிகழ்த்தப்படும் வானில் 21 குண்டுகள் முழங்கக் கூடிய அரசு மரியாதை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் ஒன்பது குண்டுகள் முழங்குவதும் அரசு மரியாதையாக கடைபிடிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: