ஆதிரை என்பதன் சரியான உச்சரிப்பு ஆதரை என்பதுதான். ஆ கூட்டல் தரை என பிரித்து பொருள் கொள்ள வேண்டும் ஆ என்றால் தொடக்கம். தரை ( tra ) என்றால் நட்சத்திரம். முதலில் வரையப்பட்ட உடுத்தொகுதி என்று இதற்கு பொருள்.
அந்த நற் சித்திரம் பார்ப்பதற்கு வேடனைப் போல் இருந்ததால் வேடனுக்குரிய புலித்தோல் உடை அணிவித்து ஆதிரையான், ஆதிரை முதல்வன் என்றெல்லாம் பெயர் வைத்து ஆதி இறை என்றாக்கி விட்டோம்.
முற்காலத்தில் இந்த ஆதி ஓரை உடுக்கூட்டத்தை முன் வைத்து தான் புது வருடம் கணக்கிடப்பட்டது.
ஓரியன் கூட்டத்திற்கு எதிரே உள்ள உடுக்கூட்ட நற்சித்திரம் பார்ப்பதற்கு காலை போல் உள்ளதையும்
ஓரியன் உடுக்கூட்டத்திற்கு ஒரு நற்சித்திர வடிவம் முயல் போல் உள்ளதையும் கொண்டு நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
வானியல் நிகழ்வுகளை உற்று நோக்கி, அதனை தலைமுறை தலைமுறைக்கு நகர்த்திட கடவுள் கதைகள் உருவாக்கப்பட்டன.
தமிழ் மாதங்களின் பெயர்கள், பெரும்பாலும், சமஸ்கிருதம் மற்றும் வடமொழி சொற்களின் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதாக விளக்கப்படுவது ஆராய்ச்சிக்குரியதாக கருதப்பட்டு, ஆராயப்பட்டு வருகிறது. உண்மை அதுவல்ல
ஒரு மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது என்று ஆராய்ந்தார்கள். அந்த நட்சத்திரத்தின் பெயரை கொஞ்சம் மாற்றியமைத்து, மாதங்களின் பெயர்களை உருவாக்கினார்கள்.
பண்டைக் காலத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வருடை (ஆடு), விடை,இரட்டை (ஆடவை), நண்டு (கடகம்), அரி (மடங்கல்), மடந்தை (கன்னி), துலை, தேள் (நளி), சிலை, சுறா (சுறவம்), குடம் (கும்பம்), மீன் (மீனம்) என்பதாகத்தான் இருந்திருக்கின்றன.
வடமொழி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு மாதப் பெயர்கள் சித்திரை, வைகாசி என ஆகிவிட்டன என்பதற்கு சூடாமணி நிகண்டு போன்ற நூல்கள் சான்று தருகின்றன.
சமஸ்கிருத மாதங்களையே தமிழில் சித்திரை முதல் பங்குனி வரை என திரித்து விட்டனர்.
தமிழ் மாதப் பெயர்களும் அதன் சமஸ்கிருத திரிபுகளும்
-----------------------
மேழம் - சைத்ரா - சித்திரை
விடை - வைசாக் - வைகாசி
ஆடவை - மூலன் - ஆனி
கடகம் - உத்திராடி - ஆடி
மடங்கல் - அவிட்டம் - ஆவணி
கன்னி - பூரட்டாதி - புரட்டாசி
துலை - அசுவதி - ஐப்பசி
நளி - கிருத்திகா - கார்த்திகை
சிலை - மார்கஸீர்ஷ -மார்கழி
சுறவம் - புனர்தை - தை
கும்பம் - மகசி - மாசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக