மக்களாட்சியில் ஓர் கட்சியானது, சட்டமன்ற பாராளுமன்ற அவைகளில் உள்ள தமது உறுப்பினர்களை வழிநடத்திடும், ஒழுங்குப் படுத்திடும் எனும் பணிகளை செய்யும் பதவியின் பெயர் தான் கொறடா.
இது அரசமைப்புச்சட்டப் படியான பதவி அல்ல. என்றாலும் கூட இந்தியா இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்பு முறையை பின்பற்றியதன் தொடர்ச்சியாக ஒரு மரபாகவே கொறடா எனும் பதவி இடம்பெறுகிறது.
சாட்டை, கசை; சவுக்கு என்பதெல்லாம் கொறடாவின் தமிழ் பெயர்கள். ஆங்கிலத்தில் whip என்கிறார்கள். whip என்பது whipper-in என்னும் வேரிடிச்சொல்லில் பிறந்தது.
whipper-in என்பவர் வேட்டைக்காரருக்கு உதவியாக இருப்பர். இவர் வேட்டை நாய்களை வழி தவறாமல் செல்ல தன்னிடமிருக்கும் சவுக்கை சொடுக்கி வழிநடத்துபவர்.
ஜனநாயக நாட்டில் இன்னமும் சாட்டை, சவுக்கு, கசை, கசையடி என்றெல்லாம் பதவிகளின் பெயர்கள் தேவையா?
ஏவுநர், செயல்படுத்துபவர், வழிநடத்துபவர் என்றெல்லாம் தமிழ் படுத்தலாமே..
#சமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக