புதன், நவம்பர் 15, 2023

ஞெமிடி



துடுக்குத்தனம் மிக்க குழந்தையை அடக்க, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் முனைகளால் இணைத்து அழுத்தி அதன் தொடையில் நெரிப்பர் அதற்கு ஞெமிடி என்று பெயர்.

இந்த ஞெமிடி ‘நெமிடு-நிமிடு என்றாகி, பின் ஒருவழியாக(நிமிடு-அம்) நிமிடம் என்றானது. 
நிமிடம் என்பதின் நேர நுட்பத்தைக்கொண்டு காலத்தைக் கணித்து கூறுவது, அதாவது
நம் வாழ்வின் ஒவ்வொரு விளைவுகளுக்கும் காரணம் கண்டுபிடித்துச் சொல்வதற்கு பெயர் நிமித்திகம். அப்படி சொல்லப்படுகின்ற நிமித்தகத்திற்கு ஆதாரமாக காட்டப்படுவது சகுனம். 

ஒரு இடத்தில்  ஏற்படப் போகும் பெரும் நில அதிர்வு குறித்து முன்கூட்டியே சில பறவைகளும் சிறுவிலங்குகளும் உணரும், உடனே அவை இடம் பெயரும் இதை கூர்ந்து  பார்த்து  இத்தனை மணி நேரத்தில் பெரிய நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று கணிக்கின்ற வழக்கம் தமிழர்களின் மரபில் தொன்றுத்தொட்டு வருவதேயாகும்

எளிமையாக சொல்லப்போனால்,
இயற்கையை கவனித்து கணித்தல் நிமித்திகம். அதற்கான காரணங்கள் தான் சகுனங்கள் . மழை வரப்போகிறது என்பது நிமித்தகம். அதற்கு ஆதாரமாக திரண்டு நிற்கும் கருமேகத்தையும் வீசும் குளிர் காற்றையும் பார்ப்பது சகுனம்.

ஆக, 
நிமித்திகமும் சகுனமும் ஆரிய புரட்டன்று ; அவை தமிழர்களின் அறிவுசார் சொத்துகள்.

*சமரன்*

கருத்துகள் இல்லை: