திங்கள், நவம்பர் 13, 2023

திதி கொடுக்கும் நாள் தானா தீபாவளி?



எண்ணைக்குளியல், புத்தாடை அணிவது,  இனிப்பு சாப்பிடுவது, மாமிசம் உண்பது போன்றவை எல்லாம் இறப்புக்கு பிறகு வரும் கசப்பு தலை எனப்படும் 16 வது நாள் துக்க நீக்கும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. இறந்த ஒருவரின் நினைவாகத்தான் இந்த திருநாள் அனுசரிக்கப்படுகிறது.

அப்படி யார் இறந்ததை அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்? 

அறிவியல் பூர்வமான தர்கங்களை கொண்டு அணுக்கோட்பாட்டை வலியுறுத்தி, உலக நியதி எனும் ஊழியல் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மரபு ஆசீவகம். 

இந்த ஆசீவக சிந்தனை மரபை ஜீரணோத்தாரணம் செய்த ஆசீவக தமிழ் துறவி மற்களி கோசலர் எனும் முருக்கழி குயவலர். 

ஆசீவகத் துறவிகள் தான் சமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஜெயின சமயத்திற்கும் இந்த சமணர்களுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஏனென்றால் சமணர்கள் தமிழர்கள்.  தமிழ் இலக்கியங்களை உருவாக்கிய சித்தர்கள்.

சித்தர்களும் சமணர்களும் ஒருவரே என்பதற்கு சித்தர்+ அண்ணன்+ வாசல்  என் சித்தன்னவாசலில் சமண ஓவியங்கள் இருப்பதே இதற்கு சான்று.

ஆசீவகம் இந்தியா முழுவதும் மிகவும் புகழ் பெற்ற ஒரு சமயமாகத் திகழ்ந்தது. இதன் புகழைக்கண்டு பொறாமைக்கொண்ட எதிரிகள் வெறிநாயின் விசத்தை உணவில் வைத்து அக்கி நோயை ஏற்படுத்தி முருக்கழி குயவலரை கொன்றனர். 

தமிழர்களின் விழாக்கள் வானியல் நிகழ்வுகளை வேளாண்மை காலங்களை முன் வைத்து நிகழ்ந்து ஏறி வருகிறது.

தீப வளி என்றால் தீபத்தை காற்றில் ஏற்றும் வான வேடிக்கை என்பதாகும். அப்படிப்பட்ட நிகழ்வின் போது இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம். 

ஆக, ஆசிவகத் துறவி முருக்கழி குயவலரின் துக்க நீக்கும் / திதி கொடுக்கும் நாள் தானா தீபாவளி?

விவாதிப்போம் தோழர்களே..!

கருத்துகள் இல்லை: