சின்மயி விவகாரம் நிஜப்பின்னணி
நன்றி @thunukku on twitter
ரா: அரசகுமாரன்.
சின்மயி விவகாரம் நிஜப்பின்னணி
உண்மை விரும்பிகளுக்கு.
ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் என்ன தகராறு என்பதை பலரும் பலவாறாய் திரித்து வருகின்றனர்..டுவிட்டரில் பல ஆண்டுகளாய் இருந்து பார்த்ததால் நானறிந்ததை தெரிவிக்க வேண்டியது கடமையாகிறது..
நிகழ்வு 1: ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் உண்மையில் நேரடியாக நிகழ்ந்த வாக்குவாதம் பின்வரும் இணைப்பில் உள்ளது மட்டுமே..
http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html
அதில் விவாதத்தை ராசன் துவங்கவுமில்லை.. இடையில் வந்து பிறகு இடையிலேயே போய் விடுவார். இந்த விவாதத்தில் ராசன் மட்டுமல்ல.. நிறைய பேர் பங்கெடுத்தனர். உண்மையில் மிக தீவிரமாக விவாதம் செய்தது ராசனல்ல. வேறு சிலர்..
இந்த விவாதம் முடிந்த பின்னரும் கூட ராசனுக்கும் சின்மயிக்கும் எந்த சண்டையோ கோபமோ இருந்ததாகத் தெரியவில்லை..
இது முடிந்ததும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து டுவீட் போடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது..
நிகழ்வு 2:
இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற பத்திரிக்கையின் ”தி அதெர் வாய்செஸ்” என்கிற கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களின் மீது இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் (சிட்டிசன் ஜர்னலிஸ்ட்ஸ்) பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்பவர் (வட இந்தியர்) மார்ச் 10, 2012ல் எழுதியிருந்தார். மகேஷ் மூர்த்தியும் டுவிட்டரில் உள்ளார். அதில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தார். மற்ற மற்ற தலைப்புகளில் பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை வகைப்படுத்தியிருந்தார். மார்ச் 10, 2012
http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx
ராசனின் நண்பர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் வசிப்பவர் என்கிற முறையில் சின்மயிக்கும் பாராட்டு தெரிவித்து விட்டனர்.
ஆணவத்தில தலைகால் புரியாத சின்மயிக்கு வந்ததே ஆத்திரம்.. தனது பெயர் வெளியிட்ட ஒரு பக்கத்தில் ராசன் என்கிற தமிழில் டுவிட்டும் 2000 ஃபாலோயர் (அப்போது) கூட இல்லாத டுவிட்டரின் பெயர் வரலாமா என்று கட்டுரையை எழுதிய மகேஷ் மூர்த்தியிடம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக டுவிட்டரில் சண்டையிட்டார். மகேஷ் மூர்த்தியும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துப் பார்த்தார். சின்மயி கேட்கவில்லை..
ஒன்று ராசன் பெயரை நீக்க வேண்டும் அல்லது தனது பெயரை நீக்க வேண்டுமென தொல்லை கொடுத்தார்.
கட்டுரை எழுதிய மகேஷ் மூர்த்தி மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டினார்..
மகேஷ் மூர்த்தி தனது கட்டுரையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என சின்மயியிடம் இறுதியாகச் சொல்லி உன்னால் முடிந்ததைப் பார் எனச் சொல்லி விட்டார்..
இந்த முழு உரையாடலும் டுவிட்டரில் இருந்த ராசன் மற்றும் அவரது நண்பர்கள் கவனித்து வந்தனர். அடுத்துக் கெடுக்க நினைத்த சின்மயி முடிவில் மூக்கறுபட்டவுடன் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #போட்டு கிண்டல் செய்து டுவீட்டுகள் போட்டு சின்மயியின் சின்ன புத்திக்கு செருப்படி கொடுத்தனர்.
இந்த #ல் பதிவு செய்த அத்தனை பேரையும் ப்ளாக் செய்துவிட்டார். அதுவும் சரியானதுதான். அது அவரது உரிமையும் கூட.
இதை தீராத வன்மமாக பழி உணர்ச்சியாக மனதில் பதியம் போட்டு வந்தனர் சின்மயியும் அவரது தாயும். இப்போதுதான் அவர்களுக்கு நேரம் கிட்டியதோ என்னவோ தெரியவில்லை #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #ல் யாரெல்லாம் டுவிட்டினார்களோ அவர்களின் தனித்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்போது ஒளிந்திருந்து பார்ப்பது, போலிக் கணக்குகள் துவங்கி இவர்களை வேவு பார்ப்பது போன்ற வேலைகளைத் துவங்கினர்.
ராசன் உள்ளிட்ட அவரது நண்பர்களுக்குள் ஏதேனும் உரையாடல், ஆபாசப் பேச்சுகள் வரும்போது அதனை படமாக்கிவைத்தனர்.
நிகழ்வு 3: பழி உணர்ச்சியை மனதில் தேக்கிவைத்த சின்மயியின் அம்மா ராசனுடன் பேசும் அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் வேலையை கடந்த 10-20 நாட்களுக்கு முன்னர் துவங்கினார். வலுவான ஆதாரங்களைத் திரட்டச் சொல்லி யாரேனும் சொல்லியிருக்க வேண்டும்..
தொலைபேசியில் மிரட்டப் பட்ட பரிசல்காரன் போன்ற பிரபலங்கள்(?) வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை..
ஆனால் தனிப்பட்ட முறையில் ராசனிடம் சொல்லிவிட்டார்கள் போல.. ராசன் உசாராகி எந்த வித சீண்டலுக்கும் பதிலளிக்காமல் ”ஜென்” என்று போட்டுவிட்டு அமைதிகாத்துவிட்டார்..
செந்தில்நாதன் என்பவர் இதுபோல சின்மயி அம்மா தொலைபேசியில் பேசினார் என்று டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் என்னவிசயம் என்று கேட்க.. அட்வைஸ் செய்வது போல மிரட்டினார்.. நான் உங்கள் மகளுக்கு அட்வைஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னார்..
அதன்பின் அவர் போட்ட டுவீட்டும் பின்னர் உதவி பேராசிரியர் சரவணக் குமார் கேலி செய்வது போல பேசிவிட்டார்.. (பேராசிரியர் சரவணக்குமார் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மலையாளிகள் இணையத்
தாக்குதலை நடத்திய போது சிவில் எஞ்சினியர் என்கிற முறையில் வலுவான ஆதாரங்களுடன் அவ்ர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்தார்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்) அவரது சில டுவீட்டுகள் காட்டமாகத்தான் இருக்கும்..
அந்த உரையாடல் இதோ..
@senthilchn: டுவிட்டர்ல எதாவது பொண்ணுங்க பேசும்னு போன்நம்பர் கொடுத்தால் இப்படியா?
@sharankay: என்னய்யா ஆச்சு ஆம்பிளைங்க யாராவது போன் பண்ணிட்டாங்களா?
@senthilchn:ம்க்கும்..இல்ல தல.. சின்மயி அம்மானு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க போன் பன்ணினாங்க..
@sharankay:கொஞ்சம் வயசாயிருச்சே பரவாயில்லை.. உனக்கு செட்டாகும்.. யூஸ் பண்ணிக்கோரும்
@senthilchn:ம்க்கும்.. எதுக்கு தல..
@sharankay: கடலைக்குத்தான்யா..
சீண்டிவிட்டு இவர்களைப் பேச வைக்க வேண்டுமென்பதுதானே நோக்கம்.. அதற்காகத்தானே வலை விரிக்கப் பட்டிருந்தது.. சிக்க வைக்க நினைத்த ராசன் சிக்கவில்லை.. ஆனால் அவரிடம் பேசிய குற்றத்திறாக
வழிபோக்கர்கள் ரெண்டுபேர் சிக்கிக் கொண்டனர். மேற்கண்ட உரையாடலில் கடைசி வரியை நீக்கிவிட்டால் ஆபாசத்தின் உச்சமாகத் தெரியும்.. படிப்போர் உனர்ச்சி வசப்படுவர். எனவே கடைசி வரியை திட்டமிட்டு நீக்கிவிட்டு ஸ்கிரீன் ஷாட்டுடன் பேராசிரியர் படத்தையும் போட்டு சின்மயி முகநூலில் போவோர் வருவோரையெல்லாம் ஆபாசமான கமெண்டுகள் போடச் செய்து அதை ரசித்தார்.. ஐந்தாறு டுவிட்டர்களின் பெயரைக் குறிப்பிட்டு இரண்டாண்டுகளாக பெண்ணென்றும் பாராமல் தொல்லை செய்ததாக நீலிக்கண்ணீர் வடித்தார்..உண்மைகளை விளக்கும் கமெண்டுகளை யாரும் எழுதினால் அனுமதிக்காமல் நீக்கினார்.
உடனே சின்மயியின் அபிமானிகள் என்ற பெயரில் சாதித்துவேசத்திற்குப் பெயர்போன,, தமிழ் டுவிட்டர்கள் மற்றும் உணர்வாளர்களை கொச்சைப் படுத்திவரும் @மாயவரத்தான் @கேஎஸ்நாகராசன் இருவரும் அவர்களது
முன்பகையைத் தீர்த்துக் கொள்ள இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள எத்தனித்து சின்மயி மற்றும் அவரது தாயாருடன் தொடர்பு கொண்டு உதவி செய்வதாகக் கூறி ராசனது நேரக்கோட்டில் போலிக் கணக்குகளில் நுழைந்து படமெடுத்து யூஸ்தமிழ் இணையத்தில் பதிவேற்றினர். அவ்வப்போது சின்மயியையும் அவரது அம்மாவையும் தூண்டிவிட்டு உசுப்பேற்றி பழிதீர்க்க இதுவே தருணம் என சகுனி வேலை செய்தனர்..
@மாயவரத்தானின் சாதிவெறி டுவீட் உங்கள் பார்வைக்கு..
http://t.co/X4FmAvAB
@sharankay சிறையில் இருக்க வேண்டுமானால் @மாயவரத்தான் எங்கேயிருக்க வேண்டுமென உங்கள் தீர்வுக்கே விட்டுவிடுகிறேன்.
ராசனின் டுவீட்டுகள் சில ஆபாசமாகத்தான் இருக்கும்.. பொது வாழ்க்கையில் இருக்கும் சிலரை அவர் கேலி செய்வது உண்மைதான்.. ஆனால் டுவிட்டரிலும் முகநூலிலும் பிற இணைய ஊடகங்களிலும் சாமானியர்களின் குரல் ஒலிக்கவில்லையென்றால், ஊரைக்கொள்ளையடித்து உலையில் போடும் அரசியல்வாதிகளையும்
அவர்களிடம் வாங்கிப் பிழைக்கும் ஊடகங்களையும் யார் கேட்பது.. சாமானியனின் குரல் சவுக்கடிபோலத்தான் இருக்கும். அதை நசுக்குவதே ஆதிக்க சக்திகளின் நோக்கம்..ஆபாச எழுத்துக்களை ஆதரிப்பதற்கில்லை.. ஆனால் ஆபாசம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.. ராசன் சின்மயிடம் ஆபாசமாகப் பேசியதாக எந்த ஆதாரமுமில்லை.. அவர்கள் குற்றச்சாட்டு ராசன் பொதுவாக
ஆபாசமாகப் பேசினாரென்றால் அதற்குரிய பிரிவில் நடவடிக்கையெடு.. அவர் பொதுவில் ஆபாசமாகப் பேசுவதால் சின்மயிக்கும் அவரது அம்மாவுக்கும் என்ன கேடு.
ஏன் இந்த பொய் வழக்கு?
ஆபாசப் படங்கள் வெளியிட்டார்கள், செக்ஸ் தொல்லை கொடுத்தனர் என பொய் வழக்கு. ஆதாரம் கேட்டால்
அவர் ஜெயலலிதாவைப் பேசினார், கருணாநிதியைப் பேசினார் என ஸ்கிரீன் ஷாட்டுகள். என்ன நேர்மையிருக்கிறது இது போன்ற சாதி வெறியர்களிடம்....
சின்மயி தமிழில் எழுதுவதையே அவமானமாக நினைப்பவர்.. மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு குறித்த அவரது பிற்போக்கான கருத்துகளுக்கு பரவலாக விமர்சனம் வந்துவிடவும் ”மறவர் சீமையாம் பரமக்குடியில் பிறந்த தமிழச்சி” என அடைமொழி கொடுத்துக் கொள்கிறார். பரமக்குடி மறவர் சீமையென எவர் சொன்னது.. அது பாண்டிய நாட்டின் ஒரு அங்கம்.. பாண்டிய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்தப் பெருமை சொந்தமானது..
இதிலும் சாதியைப் புகுத்திவிட்டால் தமிழர்களை பிளவு படுத்திவிடலாம். என்னே நுண்ணரசியல்...
ஏதோ பெரியாரோடு முடிந்து விடவில்லை பணி.. இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிக்கும் இன்னும் எக்கச்சக்கமான வேலை காத்திருக்கிறதென்பதை உணர்த்துவதே இது போன்ற சாதி வெறியர்களின் ஆதிக்கம்..
அவர்களது நோக்கம் இணையத்தில் தமிழர்களுக்கு பிரச்சினயென்றால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.. அதைச் சிதைக்க வேண்டும்.. இனிமேல் எவனாவது பேசுவான்.. பேசினாலும் அனுமதி வாங்கிவிட்டல்லவா பேசவேண்டும்..
பின் குறிப்பு: ராசன் லீக்சு எனது நண்பரல்ல.. அவரை நானோ என்னை அவரோ டுவிட்டரிலோ முகநூலிலோ தொடரவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக