வியாழன், ஜனவரி 12, 2012

மாயன் - அழித்தொழிக்கப்பட்ட தமிழன்-2


ரோமன் கத்தோலிக்கம் கொள்கை இறுக்கத்தின் உச்சியில் இருந்த காலமது. கி.பி. 1549 ல் மத்திய அமெரிக்காவில் யுகாடானுக்கு வந்து சேர்கிறார். மக்களை கத்தோலிக்கத்துக்கு மாற்றக் கிளம்பிய பாதரியார்களுள் ஒருவரான டியாகோ டி லாண்டா.

யுகாடானுக்கு மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். மற்ற பாதரியார்கள் போவதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்கெல்லாம் சென்று கத்தோலிக்கத்தைப் போதித்தார். மாயா மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும் கடவுள்களையும் விடத் தயாராக இல்லை.  கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட கிருத்துவக் கடவுளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போலத்தான் வழிபட்டனர்.

அனைத்தையும் பறித்துக் கொண்டு  ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும்,  ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம் என்று பூசாரிகள்  ரகசியமாக ஒன்றிணைந்து செயல்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத லாண்டா, பழைய மாயா மதச் சின்னங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய மாயா மதத்தைப் பின்பற்றுகிறவர்களை  தூக்கிச் சென்று அடித்து உதைத்து  வலி தாங்க முடியாமல்,  “உண்மையான கிருத்துவனாக இருப்பதாக ஒத்துகொள்ள சொல்வார். அடி விழுந்தும் செய்த பாவங்களை உடனே ஒத்துக்கொள்ளாமல், சித்ரவதையின் போதே உயிரை விட்ட நூற்றுக்கணக்கான மாயாக்களும் உண்டு. பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம்

ஒரு புறம் மாயா மக்களுக்கு அடி உதை விழுந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு புறம், மாயாக்களின் பழைய  புத்தகங்களையும் வழிப்பாட்டு விக்கிரகங்களையும் எங்கு கண்டாலும் பறித்துவர  வர ஆணையிட்டிருந்தார் லாண்டா.


இப்படிச் பறிக்கப்பட்ட ஆயிரங்கணக்கான  புத்தகங்களும் விக்கிரகங்களும் பொது இடத்தில்  போட்டுக் கொளுத்தப்பட்டது. லாண்டாவின் இந்த செயல்களால் எவ்வளவு மாயா பண்பாட்டுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. அந்த மக்களின் விலைமதிக்க முடியாத ஆயிரக்கணக்கான பண்பாட்டு பொக்கிஷங்களையும் புத்தகங்களையும் அழிக்கப்பட்டு கடைசியில் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்தது.
            




அப்போது பிறகு மாயா எழுத்துருவை வாசித்து மொழிக்கு அர்த்தம் சொல்ல ஒரு மாயருக்குக் கூட தெரியவில்லை. 

எந்த மக்களை ,எந்த கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் ,ஒழிக்கவேண்டும் யார் ஆசைப்பட்டாரோ அவரால் தான் இன்று மாயா எழுத்துகளை வாசிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளன. மாயா சமூகத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் அவர் எழுதி வைத்த குறிப்புகள் தான் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்யும் இனவியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் பெரும் துணையாக உள்ளன.

மாயா நாகரிகத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு தான் அவர் மாயா மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார்.  மாயா நாகரிகம் சாத்தானின் கைவேலை என்பதை ஸ்பானிய மத அதிகாரிகளுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் அக்குறிப்புகளை அவர் புத்தகமாக்கினார். அவர் விட்டுச் சென்ற குறிப்புகளைக் கொண்டுதான் 20ம் நூற்றாண்டில் மாயா எழுத்துக்களைப் படிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.


கிறிஸ்து பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அமெரிக்கப் பகுதியில் மாயா நாகரிகம் தோன்றி விட்டது. அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மெல்ல வளர்ந்து மெக்சிகோ, குவாத்தமாலா ஹொண்டுராஸ் போன்ற பகுதிகளிளை உள்ளடக்கியது அப்பகுதி முழுவதும் மாயா மக்களின் கட்டுப்பாட்டில் வந்தது.  கி.பி. மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டம் மாயா பண்பாட்டின் பொற்காலமென்று அறியப்படுகிறது. 

கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. ஒருவகையான மான்தோலில் புத்தகங்களை புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள்.

மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன. எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது.இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. 

                                                                                                                                                

கருத்துகள் இல்லை: