வியாழன், ஜனவரி 12, 2012

மாயன் - அழித்தொழிக்கப்பட்ட தமிழன் -1
மாயன் – திரைப்படம் 

சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது ஒரு திரைப்படம். அபோகலிப்டோ  மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கோடிட்டு காட்டுவதாக கூறி இப்படி காட்சிப்படுத்தியது
 “அழிவின் விளிம்பில் இருந்த அந்த  சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுகிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து அந்த  காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கிறது.

அந்த காட்டுமிராண்டிகளின் கதை..


பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை.

நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடைய வில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.


மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? அந்த மர்ம நகரத்தினில் டன் கணக்கிலான கற்களை கொண்டு அமைக்கப்பட்டது எவ்வாறு? மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்தது, அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளது ஆச்சரியமிக்கவை.


பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருந்தது. அந்த இடத்தில  மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை.


பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான ஜான்  லொயட் ஸ்டீபன்  தான் கேட்பாரற்று பாழடைந்த பழமைமிக்கதான் அந்த  நகர பகுதியை முதலில் கண்டுபிடித்தார்.


மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகி,  பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளராத காலத்தில் நடந்தவை.ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரே வியப்பு. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்துவிட்டு  பின்னர் எதற்காக அதைவிட்டு எங்கே போய் மறைந்தார்கள்.

19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டும்  20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ஸ்பெயின் நாட்டினரின் படையெடுப்பு, பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்ட சோக வரலாறு  தெரிந்து கொள்ள முடிந்தது.

பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் மாயா அரசுகள் இருந்த யுகாடான் தீபகற்பம் முழுவதும் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ராணுவ ரீதியாகக் கைப்பற்றியது போதாதென்று அடுத்து மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் யுகாடானைக் கைப்பற்ற ஸ்பானிய அரசு யத்தனித்தது. ஸ்பெயினின் முக்கிய மதம் ரோமன் கத்தோலிக்கம்.  புதிய உலகு ராணுவ ரீதியாக   அடக்கப்பட்ட உடனே, கத்தோலிக்க மிஷனரிகள் பைபிளைத் தூக்கி கொண்டு அமெரிக்கக் காடுகளுக்குள் நுழையத் தொடங்கி விட்டார்கள். 

                                                                                               கருத்துகள் இல்லை: