ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

உங்களுக்கும் தெரியும்

அன்பு நண்பருக்கு !  வணக்கம். 
நூறு பேரில் 60 சதவீதம் பேர் வாக்களிகிறார்கள் ,அதில் 31சதவீதம் பேர் அளித்த வாக்குகள் வெற்றி பெற்றதாக குறிக்க படுகிறது. கவனியுங்கள் 31 சதவீதம் மட்டுமே ! மீதமுள்ள வோட்டு போட்ட போடாத 69 சதவீத மக்களுக்கு விருப்பமில்லாத அரசு நம்மை ஆள்கிறது .வோட்டு போடும் அரசியல் தான் ஜனநாயகம் என நம்பபடுகிறது. அப்படியானால் குடவோலை முறை முடியாட்சியின் போது இருந்ததே, அது என்ன ஜனநாயகமா ? 
எந்த கேள்வியும் கேட்கமுடியாமல் பெரும் முதலாளிகளுக்க்காக சொந்த மண்ணில் இருந்து மக்கள் விரட்டபடுகிறார்களே... 
சிறுபான்மை ஆள்கிறது பெரும்பான்மை கையேந்துகிறதே...
நீதியின் தீர்ப்புகள் செல்வசீமான்களிடம் கூனிக்குறுகி கைகட்டி நிற்கிறதே...
இன்னுமா இங்கே நடப்பது உண்மையான ஜனநாயகம் என ஏமாற்ந்து போகிறீர்கள் ! 
உண்மையில் ஜனநாயம் இருந்தால் 49 o வை பட்டனில் தானே வைத்திருக்கவேண்டும் .ஏன் இல்லை . 
இந்த ஜனநாயகம் பெரும்முதலாளிகளுக்கானது . 
இது அடித்தட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
ஒரு ரேசன் கடை க்யூவில் நின்று பாருங்கள் உங்களுக்கும் தெரியும்



-ஒரு பின்னுட்டத்தில்

கருத்துகள் இல்லை: