- முதல் முறையாக அண்ணன் விடுதலை நெஞ்சனோடு அறிமுகமானது புத்தக கண்காட்சி
- காதலியின் முதல் சந்திப்பு போலவே நிறைய தாக்கங்கள் என்னுள்
- சென்ற முறையை விட இந்த முறை ஏற்பாடுகளும் , அரங்க அமைப்பு முறைகளும் நன்றாக இருந்தன.
- வழக்கம் போல் , கேன்டீன்லும் ஆன்மீக , சமையல் புத்தகங்கள் பக்கமும் கூட்டம் கலை கட்டுகிறது.
- கவிதை புத்தகங்கள் பக்கம் அதிக கூட்டம் காணவில்லை.ஆசிப் தலைமையில் கவுஜ கூட்டம் சீக்கிரம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தல் நலம்.
- சுஜாதா இன்னமும் நன்றாக விலை போகிறார்.
- உயிர்மையில் 0 டிகிரி யை பார்த்துவிட்டு பையின் கணம் அறிந்து வாங்காமல் விட்டேன் , பாலபாரதி அழைத்து சென்று ஜியே வில் அதே புத்தகத்தின் மக்கள் பதிப்பை 30 ரூபாய்க்கு வாங்கி தந்தார்.(ரூ.120 மிச்சம்).
- காவல்துறையிடமிருந்து,தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவாம் – வாழ்க ஜனநாயகம்.
- அரங்கிலும் , வெளி பந்தலிலும் அவ்வளவு கூட்டமில்லை , பொருளாதார மந்த நிலையா பெட்ரோல் தட்டுபாடா தெரியவில்லை.
- அரங்கிலும் புது புத்தகங்களின் வரவு குறைவே.
- புத்தக கண்காட்சில் , ரேடியோ மிர்ச்சிக்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை
- குப்பையிலிருந்து உருவாக்கப்படும் இன்னொரு குப்பை புத்தகங்கள் என்று எங்கோ படித்தது ஏனோ ஞாபகத்தில் வந்து தொலைகிறது
வெள்ளி, ஜனவரி 07, 2011
புத்தக கண்காட்சியில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக