வெள்ளி, மார்ச் 15, 2013

திராவிடத்துக்கு தீ



மாவீரன் ஆரிய சங்காரன்
மாவீரன் ஆரிய சங்காரன் 1950, -60களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது. இவரது தீவிர செயல்பாடே இப்பெயருக்கு வீரத்தைக் கூட்டியது. சென்னையில் சுமார் இருபதே ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய சங்கரன் அவர்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் இதுவரை தொகுக்கப் படவில்லை. தலித் இயக்க வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த காலகட்டத்திலாவது நாம் இப்பணியை செய்யத் தவறினால் பின்னர் எப்போதும் செய்ய முடியாதவர்களாய் போவோம்.

தலித் இயக்க வரலாற்றில் ஆரியசங்காரனுக்கு முக்கியமான .இடமுண்டு. அவரது செயல்பாட்டைப்பற்றிப் பல சம்பவங்கள் இன்றும் சென்னை மூர்மார்கெட் நினைவுகளையொட்டிய கதைகளாக வாழ்ந்து வருகின்றன.1950 - 60களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது. இவரது தீவிர செயல்பாடே இப்பெயருக்கு வீரத்தைக் கூட்டியது. திரு. வி. க தனது வாழ்க்கை குறிப்பில் பெüத்த சங்க கூட்டங்களில் தானும் பிறரும் சென்று கலாட்டா செய்ததை இப்படிப் பதிவு செய்துள்ளார்: 'அக்கூட்டங்கள் எனக்கு வெறியூட்டின. வெறி கொண்டு சில மாணாக்கர்களைச் சேர்த்து/ ஒரு நாள் பெüத்த சங்க கூட்டத்துக்குள் நுழைந்தேன். - யான் குறுக்கிட்டேன். ஒரே கூச்சல் எழுந்தது. எவரோ ஒருவர் வானரங்கள் என்றால் மாணாக்கர் சும்மா இருப்பரா? பெருங்குழப்பம் விளைந்தது'. (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் - 506ல்) அதுபோல திராவிடர் கழகக் கூட்டங்களில் கலவரம் செய்தவர் இவர். தீண்டாத மக்களை கேவலப்படுத்திய ஈ. வெ. ரா. பெரியாரின் திராவிடர் கழகக் கூட்டங்கள் மூர்மார்க்கெட் பகுதியில் நடக்கும்போது அக்கூட்டங்களில் பாம்புகளை வீசியெறிந்து கலகம் செய்தவர் ஆரிய சங்காரன். இதன் பிறகு/ மூர்மார்கெட் பகுதிகளில் தி.க.வினர் கூட்டங்கள் நடத்துவது இல்லை என குறிப்பிட்டார். திரு. அன்பு பொன்னோவியம். (கட்டுரையாசிரியரிடம் நேரில் கூறியது) தனி நபராகவும்/ ஆதரவாளர்களுடன் இணைந்தும் பல போராட்டங்களை அந்நாளைய திமுக அரசிற்கெதிராகவும் பார்ப்பன/ ஆதிக்கசாதியினருக்கு எதிராகவும் நடத்தி வெற்றி கண்டவர்.சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையுடையவர். 'ஆரியசங்காரன்' என்ற இதழை நடத்தியவர். இந்தியக் குடியரசு கட்சியின் தமிழகத் தலைவராக/ அம்பேத்கரின் போர்க்குணமிக்க கொள்கை வழி பிறழாத வீரராகத் திகழ்ந்தவர்.

பெரியமேடு பகுதியில் கைவண்டித் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்களுக்காக அச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்.


தலித் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக மக்களைத்திரட்டி அணியமாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதில் வல்லவர் ஆரியசங்காரன். அதேபோன்று/ தலித் தலைவர்களுக்கு அல்லது இயக்கங்களுக்கு எதிரான ஆதிக்கசாதியினரின் விஷமத்தனத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முதலாவதாகத் திகழ்ந்தவர். இவரது போராட்ட வாழ்வில் இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு பதிவு செய்கின்றேன். 1966ஆம் ஆண்டு மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும்/ 1969ஆம் ஆண்டு அமைச்சர் சத்தியவாணிமுத்து அவர்களை இழிவுபடுத்திப் பேசிய மேயருக்கு எதிராக அவர் மாணவர் மற்றும் தலித் மக்களை ஒன்றுதிரட்டி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் பற்றிய நாளிதழ் செய்திப்பதிவுகள் இவை.


பதிவு
நகரசபை எதிரே ஆரியசங்காரன் உண்ணாவிரதம்.
நவமணி 15.02.1966. பக்கம் 2.
சென்னை/ பிப் 15.
சென்னை நகரசபைக் கட்டிடத்துக்கு அருகே சைடன் ஹாம்ஸ் ரோட்டில் 'பம்பிங் ஸ்டேசன்' கட்டுவது தொடர்பாக நகரசபை நிறைவேற்றிய தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கோரி/ ஆரியசங்காரன் இன்று காலை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.

இந்த 'பம்பிங் ஸ்டேசன்' அங்கு கட்டுவது என்ற நகரசபை நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்ததும்/ அதனால் வேறு இடத்தில் கட்டுவது பற்றி பரிசீலிப்பதென நகரசபை வாக்குறுதி அளித்தபின் அவர்கள் வாபஸ் பெற்றதும் தெரிந்ததே.

அப்போதே தீர்மானத்தை அமுலாக்கக்கோரி உண்ணா விரதம் இருக்கப்போவதாக பெரியமேடு கைவண்டித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆரியசங்காரன் அறிவித்தார்.

அதன்படி அன்றுகாலை ஆரியசங்காரன் ஊர்வலமாக காலை 6 மணிக்கு நகரசபை ரிப்பன் கட்டிடத்திற்கு வந்தார். ஆனால்/ அப்போது நகரசபை கட்டிட கேட் திறக்கவில்லை. கேட் திறந்ததும் 7.30 மணிக்கு அவர் உள்ளே சென்று சத்தியமூர்த்தி சிலை எதிரே உட்கார்ந்தார்.

நகரசபைத் தீர்மானம் நிறைவேற்றியபடி அந்த இடத்தில் கட்டினால் 62ஆவது வட்டம் (அம்பேத்கர் நகர்)/ 63ஆவது வட்டம் (பெரியமேடு)/ 64ஆவது வட்டம் (பூங்கா நகர்) ஆகிய மூன்று வட்டத்திற்கும் பலன் கிடைக்கும். மக்கள் விருப்பம் அறிந்து தொழில் நுணுக்க ஊழியர்களை பரிசீலித்துத்தான் அங்கு கட்டுவது என நகரசபை தீர்மானித்துள்ளது. அந்த பகுதி முஸ்லீம்களையும் கேட்டேன். அவர்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆகவே/ அந்த இடத்தில் பம்பிங் ஸ்டேசனை கட்ட வேண்டும். இந்த அடிப்படையில் உறுதிமொழியளிக்கும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன் என நவமணி நிருபரிடம் ஆரியசங்கரன் கூறினார்.

அவரது தொகுதியைச் சேர்ந்த மக்கள் வந்து அவருக்கு மாலை போட்டுச் சென்றார்கள். சுற்றி போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது.

மேயர் பேட்டி:

ஆரியசங்காரன் உண்ணாவிரதம் பற்றி மேயர் மைனர்மோசஸிடம் நிருபர்கள் கேட்டார்கள். நகர சபைபோட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது/ மாற்றுவது போன்ற விஷயங்களை நகரசபையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். இது விஷயத்தில் வெளியாள் தலையிடுவது விரும்பத்தக்கதல்ல. இந்த உண்ணாவிரதம் பொது மக்களுக்கோ/ நகரசபை நிர்வாகத்துக்கோ இடையூறு விளைவித்தால் நகரசபை கமிஷனர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று மேயர் பதிலளித்தார்.


பதிவு 2
சென்னைமேயரின் ஆணவப் போக்கை எதிர்த்து ஹரிஜன மக்கள் உண்ணாவிரதம். ஆரியசங்கரன் தலைமையில் மாணவர்கள்/ பெண்கள் போராட்டம்.

- ஜெயபேரிகை/ சென்னை 16.01.1969. பக்கம் 1.
அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மையாரை இனப் பெயரைச் சொல்லி மிக இழிவாகப் பேசி அவதூறு செய்த சென்னை மேயர் வேலூர் நாராயழனின் ஆணவப்போக்கை எதிர்த்து 13.01.69 அன்று காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஹரிஜனப் பெருங்குடி மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னை நேரு ஸ்டேடியம் எதிரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்த பின்னர் 5 மணிக்கு ஆதிதிராவிட சமுதாய மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரதம் ஆரம்பித்தனர்.கட்சி சார்பில்லாமல் இன எழுச்சியின் அடிப்படையில் சமுதாய மக்கள் ஒன்றுதிரண்டு மேயரின் ஆணவப் போக்கை கண்டித்துப் போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தாய்குலத்தின் சார்பாக மனோன்மணி/ தமிழ்ச்செல்வி/ மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பம்பாய்/ அரக்கோணம்/ விழுப்புரம்/ பூவிருந்தவல்லி/ காட்டுப்பள்ளம்/ மாங்காடு/ புழல் கிராமம்/ மாதவரம்/ செங்கற்பட்டு/ சென்னை நகரிலிருந்து நூற்றுக்கணக்கில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஒன்று திரண்டு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.ஆளவந்தாரின் அலட்சியப் போக்கு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பாதுகாப்பு போலீசார் வராதது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கீழ்வெண்மணி கிராமத்தில் 42 ஊழியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் விளம்பரத் தட்டிகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் கொடுமைகளைக் கண்டித்து துக்க நாளாகக் கருதி உண்ணாவிரதம் இருப்பதாக அவற்றில் எழுதப்பட்டிருந்தது.

தமிழக அரசு மெüனம் சாதிப்பது ஏன்?

கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி தமிழக அரசு மெüனம் சாதிப்பது ஏன்? அமைச்சர்களும்/ தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏக்களும் இன்னும் வாய் திறக்காதது ஏன்? சமுதாயமே ஒன்று படு. நமக்கும் உணர்ச்சி இல்லையா? என்ற முழக்கங்கள் கொண்ட விளம்பரத் தட்டிகளும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் சுமார் இருபதே ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய சங்காரன் அவர்களைப்பற்றிய பதிவுகள் எதுவும் இதுவரை தொகுக்கப்படவில்லை. சென்னையில் பிறந்து வாழ்ந்து/ இறந்தவர் என்பது இந்த வருத்தத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. தலித் இயக்க வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த காலகட்டத்திலாவது நாம் இப்பணியை செய்யத் தவறினால் பின்னர் எப்போதும் செய்ய முடியாதவர்களாய் போவோம்.


திராவிடத்துக்கு தீ மூட்டிய ஆரிய சங்கரன்

1960களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் சூத்திர  சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது.  திராவிடர் கழகக் கூட்டங்களில் கலவரம் செய்தவர் இவர். சாக்கிய மக்களை கேவலப்படுத்திய ஈ. வெ. ராமசாமியின்  திராவிட கழகக் கூட்டங்கள் மூர்மார்க்கெட் பகுதியில் நடக்கும்போது அக்கூட்டங்களில் பாம்புகளை வீசியெறிந்து கலகம் செய்தவர் ஆரிய சங்காரன். அதன் பிறகு  மூர்மார்கெட் பகுதிகளில் தி.க.வினர் கூட்டங்கள் நடத்துவது இல்லை.

கருத்துகள் இல்லை: