வெள்ளி, மார்ச் 01, 2024

நாகவன்ஷி

#க்ஷத்திரியர்கள்

இந்திய புராணங்கள் நான்கு வகையான க்ஷத்திரியர்கள் பற்றி குறிப்பிடுகிறது. அவை சூர்யவன்ஷி க்ஷத்திரியர்கள், சந்திரவன்ஷி க்ஷத்திரியர்கள்,  அக்னிவன்ஷி க்ஷத்திரியர்கள் மற்றும் நாகவன்ஷி க்ஷத்திரியர்கள். இவர்களுள் மிகவும் பழமையானவர்கள் நாகவன்ஷி க்ஷத்திரியர்கள். 

இந்திய நிலப்பரப்பு முழுவதும் ஆட்சியாளர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருந்த இந்த நால்வரில் மற்ற மூவரும் பிராமண கூட்டாளிகளாக மாறிப் போய்விட, நாகவன்ஷி க்ஷத்திரியர்கள் வைதீக எதிர்ப்பு மற்றும் பிராமண கலாச்சாரத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

சம்பவ குல க்ஷத்ரியர்கள் எனும் தமிழ்நாட்டின் நாகவன்ஷி க்ஷத்ரியர்களுக்கு அரச குருக்களாக  செயல்பட்ட சாம்பவர் சமூகத்தின்' ஆசான்களிடமிருந்து உருவானது தான் களரி எனும் தற்காப்புக் கலை.

சாத்தான்குளம், விளாத்திகுளம், விருதுநகர், சிங்கவனம் உள்ளிட்ட தென் தமிழகம் முழுவதும் சிறந்த ஆட்சியாளர்களாக திகழ்ந்தவர்கள் நாகவன்ஷிகளே.

பிராமணிய கலாச்சாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக பிரபல சாத்தாங்குளம் ஆட்சியாளர் எனும் சாத்தான் குளம் ஜமீன்  கொல்லப்பட்டார். 

தூத்துக்குடி அடுத்த பரமன் குறிச்சி அருகே நடந்த பிராமணிய கலவரத்தில் வைத்து சாத்தான் குளம் ஜமீன்  கொல்லப்பட்டார். உள்ளூர் பிராமணர்களால் இயக்கப்பட்ட வேளாளர்கள் உதவியோடு சாத்தன் சாம்பவர் கொல்லப்பட்டதை பல தமிழ் நாட்டுப்புறக் கதைகள் விவரிக்கின்றன. 

பிராமணியத்திற்கு எதிரான கலாச்சாரப் போரில், நாகவன்ஷி க்ஷத்திரியர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர், அதோடு அவர்கள் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக பிராமணியதாலும் பிராமணியத்தின் அடிவருடிகளாலும்  புறக்கணிக்கப்பட்டனர். தங்களின் புகழ்மிக்க கடந்த கால வரலாறுகளை இழந்து பிராமண சமூகத்தில் அடிமைகளாக நாகவன்ஷிகள்
மாற்றப்பட்டனர்.

நாகவன்ஷி என்ற வார்த்தையை கண்டு நீங்கள் அந்நியப் பட வேண்டாம். அதன் அர்த்தம் வேறொன்றுமில்லை, அதன் தமிழ் சொல், நாக வம்சம் என்பது தான். நாக வம்சத்தின் தலைவன் பிடாரன். பிடாரன் பிற்காலத்தில் சிவனாக உயர்வு பெற்றான். சிவனுக்கும் மூப்பன் ஆதிசேஷன். 

ஆதிசேஷன், ஆதிசேட்டன் என்கின்ற வார்த்தைகளின் வேரடி சொல் ஆதி சாத்தான். சாத்தன் என்றால் கேள்வி கேட்பவன், விவாதிப்பவன், அறிவானவன் என்றெல்லாம் பொருள். ஞானம் அடைந்தவன் என்றும் பொருள். சாத்தன் வழிபாடு இவர்களிடம் இருந்து தான் தொடங்குகிறது. சிவபெருமான், முருகன், ஐயப்பன், உள்ளிட்ட நாகவன்ஷிகளின் வழிபாட்டை ஆசிவகம் ஏற்றுக் கொண்டது. சைவம் அதனை உள்வாங்கிக் கொண்டது

#சமரன்

#ஆதிசேஷன்|#ஆதிசாத்தன்|#பறையர்|#நாகவன்ஷி|#சாத்தன்

கருத்துகள் இல்லை: