வியாழன், டிசம்பர் 21, 2023

ஆசிவகர்கள் படுகொலை




புண்டரவர்த்தனம்.

கௌட தேசத்தின் தலைநகர். அரசியல் பொருளாதாரம் மற்றும் சமய நெறி கோலோச்சும் நிலப்பரப்பு. சீனாவை மகதத்துடன் இணைக்கும் முக்கிய மையப் பாதையில் அமைந்திருந்த ஒரு பெரும் மாநகர். இன்றைய வங்க தேசத்தின் தொல்பொருள் நகரம்.

ஏதோ..

கெளடம், புண்டரவர்த்தனம் என்றெல்லாம் சொல்வதை பார்த்து ரொம்ப யோசிக்க தேவையில்லை தோழர்களே. இதெல்லாம் நம்மூர் இலக்கிய சொற்கள் தான்.

சொல்ல வரும் செய்யுளில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும் அது கவனம் பெறாது. அதே நேரத்தில்  சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லை என்றால் அதுவும் உரிய கவனத்தைப் பெறுவதில்லை. ஆகவே சுவையாகவும்  பொருளாழமிக்கதாகவும் உள்ள சொல்லமைப்புகளை  கொண்டு செய்யுளை கட்டவேண்டும். இந்த சொல்லமைப்பு வகையைச் செய்யுள்நெறி என்பர். இது வைதருப்பம், கௌடம்  என இருவகைப்படும்.

எளிய தமிழில்

அதன் குணத்தால் ஏற்படும் சுவை.

அதன் அலங்காரத்தால் ஏற்படும் சுவை

என வகைப் படுத்தப்பட்டுள்ளது.

 
எனினும்  இது வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் என நான்காக தனித்து நிற்கிறது. இதனை தமிழில் முறையே ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்கின்றனர்.

போதும்.. போதும்..! நாம விஷியத்துக்கு வந்துடலாம்.

 மதுரகவி எனப்படும் கௌடம் பாடுபவர்கள் கெளடர்கள். இவர்கள் வாழும் நிலப்பரப்பிற்கு கெளட தேசம் என்றுபெயர்.

 
புண்டரம் – என்றால் சின்னம்.  வர்த்தனம் – என்றால் வளர்த்தல் அல்லது பெருக்குதல். சமய சின்னங்களை, சமய நெறிகளை வளர்கின்ற, பெருக்குகின்ற நகரத்திற்கு புண்டரவர்த்தனத்தனம் என அழைக்கப்பட்டது.   

 
இந்த புண்டரவர்த்தனத்தில் ஒரு ஓவியம் வரையப் பட்டிருந்தது. அதில் புத்தர் நிர்கரந்தா ஜனதிபுத்திரரின் காலில் விழுந்து வணங்குவதைப் போல் இருந்தது. இந்த ஓவியம் பெளத்தர்களைடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பேரரசர் அசோகரிடம் முறையிடப்பட்டது. உடனே அசோகர் அந்த ஓவியத்தை வரைந்தவரை கைது செய்ய ஆணையிட்டு அவரோடு புண்டரவர்த்தனத்தில் இருந்த 18,000 பேர்களை கொன்றார். இதேப்போல் பாடலிப் புரத்திலும் புத்தர் மண்டியிட்டு வணங்கும் ஓவியம் வரையப்பட்டது. ஓவியம் வரைந்தவனையும் அவனது ஒட்டுமொத்த குடும்பத்தாரையும் அசோகர் வீட்டோடு எரித்தார்.

இதனை  தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஒரு தினாரா அதாவது வெள்ளி நாணயம் பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இதனால் தொடர் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. வட இந்தியாவில் கோலோச்சிய  வைதீக எதிர்ப்பு மதங்கள் அழிந்தன. இந்த வெறியாட்டத்தில் அசோகரது சொந்த தமையனையே கொல்ல நேர்ந்தது.

அசோகர்வெற்றி பெற்று, போரில் ஆயிரக்கணக்கான வீரர்களின் இறப்பை கண்டு போரை கைவிட்டார் என்று வரலாறு கூறுவதை மறுத்து அதன் பின்னும் பேரரசர் அசோகர் முன்னின்று புண்டரவர்த்தனத்தில் பெரும் படுகொலை நிகழ்த்தினார். அசோகரால் கொல்லப்பட்ட அந்த 18000 பேர் ஆசிவகர்கள் என்கிறது அசோகவதனம்.

படங்கள் - தற்போதைய புண்டரவர்த்தனம்

கருத்துகள் இல்லை: