வியாழன், பிப்ரவரி 26, 2015

குகை இடி கலகம் தெரியுமா உங்களுக்கு ?




நம் கருத்திற்கு எதிராக பேசுபவன் உயிரோடு இருப்பதா ? அவனை கண்டால் கண்ட இடத்திலேயே வெட்டி கொலைசெய் ! அவனை கண்டால் கண்ட இடத்திலேயே தீயிட்டு கொளுத்து ! “அவர்கள் கடவுளின் எதிரிகள்" என்றவாறே கோயிலில் பதுங்கி இருந்தவர்களை கோயிலில் வைத்தே தீயிட்டு கொளுத்தியும், குகையில் பதுங்கி இருந்தவர்களை குகையில் வைத்தே உயிரோடு சமாதி கட்டியும் கொன்று குவித்தனர் . போராளிகள் பதுங்கி இருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்ட குகைகள் எல்லாம் இடிக்கப்பட்டன.
அடித்து துரத்தப்படுப்பட்டு காடுகளிலும் குகைகளிலும் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்திய அந்த தமிழ் இன போராளிகளின் பெயர் –
சித்தர்கள்!
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு தமிழக வரலாற்றிலிருந்து அடியோடு மறைக்கப்பட்ட அந்த இன அழிப்பு படுகொலையின் பெயர் குகை இடிக் கலகம்!
அன்று இடித்து தள்ளப்பட்ட இந்த குகைகளுக்குள் தான் புதைந்து கிடக்கிறது.
தமிழன் வீழ்த்தப்பட்ட ;
தமிழன் சாதியாக பிரிந்த ;
தமிழன் சூத்திரன் ஆன ;
தமிழன் தீண்டத்தகாதவன் ஆன ;
தமிழன் பஞ்சமன் ஆன ;
தமிழன் பழங்குடி ஆன ;
தமிழன் யாரென்ற ;
அவன் வழிப்பாட்டு முறை எதுவென்று வரலாறுகள் !

1 கருத்து:

Ezhil.V சொன்னது…

புதிய செய்தியாய் இருக்கிறது....