வியாழன், பிப்ரவரி 26, 2015

மொழிகளுக்கெல்லாம் தாய்







நான் இந்து மதம் என்று அம்மா அப்பா சொல்லி இருக்காங்க. எனக்கு இந்த மத வெறி எல்லாம்... இல்லை கடவுள் நம்பிக்கை இல்லை அவ்வளவு தான். அதுக்காக உங்க கடவுள் தான் முதல் வந்தார்... தமிழன் தான் முதல் குடிமகன் என்கிறத்திலும் உடன் பாடில்லை. Shruthi Nilla
----------------------------------------- smile emoticon
அன்புதோழி !
வணக்கம் ! உன் கமண்ட்ஸ் பார்த்தேன்.
சாதி, மதம் , இனம் என மனிதம் புண் பிடித்து புரையோடிகிடக்கின்ற இந்த சமூக சூழலில் உன்னைப்போன்ற கணிப்பொறியியல் தேவதைகள், எங்களுக்கு மதவெறி கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் இல்லை என்றெல்லாம் பிரகடனப்படுத்தும் பொழுது கொஞ்சம் பெருமிதம் கொள்கிறேன். நெஞ்சம் முழுக்க ஒரு நிறைவுவந்து சேர்க்கிறது.
ஆனால் அதற்கடுத்த இரண்டுவரிகளில் “ உங்க கடவுள் தான் முதல் வந்தார்... தமிழன் தான் முதல் குடிமகன் என்கிறத்திலும் உடன் பாடில்லை. என்று சொல்லி அந்த நெஞ்ச நிறைவை நீர்த்துபோகசெய்துவிடுகிறாய். ?
தோழி !
இந்த உலகில் எல்லோருக்கும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று அறிந்துகொள்ள இயலாதவர்கள் தான் அனாதைகள் என்று இச் சமுகம் தள்ளிவைக்கிறது. ஒருவகையில் தமிழன் கூட அப்படிதான். அதனால் தான் என்னவோ தமிழன் தன் தொன்மம் தேடி அலைகிறான்.
உலகின் முதல் மனிதன் தமிழன், உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்த கதைகள் தான் சைவமாக- வைணவமாக, புத்தமாக, சமணமாக, பைபிளாக , குரானாக இன்னும் பிற மதநூல்களாக தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.
ஆகவேதான் எல்லா மதநூல்களும் ஒரே மையப்புள்ளியில் இணைகின்றன. உலகின் பழம்பெரும் இலக்கியங்கள் அனைத்தும் உலகம் அழிந்த ஊழிகாலம் குறித்தே பேசுகின்றன.
இங்கே கிருஷ்ணனாக இருக்கிறவன் ,
அங்கே கிருஷ்துவாக இருக்கிறான்
இங்கே மாயாவாக இருப்பவள் ,
மரியாவாக இருக்கிறாள்
இங்கே கம்சனாக இருப்பவன் ,
அங்கே ஏரோது இருக்கிறான்.
இங்கே நடுகல்லாக இருப்பதுதான் ,
லிங்கமாக ,
தொழுகைகல்லாக,
இனப்பெருக்க கல்லாக ஆராதிக்கப்பட்டு வருகிறது.
தமிழன் எப்போதும் மதம் சார்ந்தவனாக இருந்ததில்லை , மொழி சார்ந்தவனாக இருந்ததில்லை , இனம் சார்ந்தவனாக இருந்ததில்லை , அதனால் தான் அவனால் யாதும் ஊரே ! யாவரும் கேளீர்! என்று பொதுஉடைமை பேசமுடிகிறது .
இப்படி எத்துனை எத்துணையோ தோண்டிக்கொண்டே, துருவிக்கொண்டே போகலாம், ஆகவே இந்த உலகம் என்னுடையது, இதன் மூத்த குடி நான் எனவே கொஞ்சம் பெருமைபேச வேண்டி இருக்கிறது.
கி.பி. 8-ஆம் நூற்றாண்டில்
உலகம் உருண்டை; அது அண்டவெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்கிறான் கலீலியோ.
ஆனால்
ஞாலம் என்ற ஒற்றை சொல்லில் உலகம் தொங்கிகொண்டிருக்கிறது. உருண்டையானது என்பது மட்டுமல்ல –
""சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' அது சுழன்றுகொண்டிருக்கிறது.
என்ற மிகப்பெரும் அறிவியியலை போகிறபோக்கில் சொல்லிவிட்டு போகிறான் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த என் முப்பாட்டன்.
தோழி !
தமிழ் படி,
அதில் அனைத்தும் இருக்கிறது; அது அனைத்தாகவும் இருக்கிறது. ஏனெனில்
எல்லா இனங்களுக்குத் தனித்தனித் தாய்மொழி உண்டு. ஆனால் அந்த உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற பெருமை தமிழுக்கே உண்டு . smile emoticon

கருத்துகள் இல்லை: