புதன், அக்டோபர் 26, 2011

போதி தர்மன்

 (போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்)

 போதி தர்மன்... 
வரலாறு உங்கள் பார்வைக்கு,

பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு
பௌத்தவர்மப் பல்லவன் ஆகிய முன்று மகன்கள் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்.

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதிதர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சிபுரத்தில்  தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு.  போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். புத்த மத குருவாக மாறியபிறகு, போதி, கி.பி.475-550 கால கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா சென்று அங்கிருந்து தெற்கு சீனாவிற்குச் செல்கிறார்

இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான்.. எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார். 

மேலும் அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார்.   SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.


போதி தர்மர் அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார். அங்கு சுமார்  32 ஆண்டுகள்   தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
இதற்கான கல்வெட்டு அந்த சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
போதி தர்மர் வாழ்ந்த அந்த "ஷாஓலின் கோயிலை  இன்றைக்கும் சீனர்கள் வணங்கி வருகிறார்கள்.  அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை  குங்ஃபூஎன்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

பின்னர் அந்த இடத்திலிருந்து போதி தர்மர் சீனாவின் Guangdong வந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENG என்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.

.
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.
அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் போதிதர்மர் தோற்றுவித்த ஷாஓலின்(Shaolin) பௌத்தக்கோயில்களும் மட்டும் தப்பின.

சீனத்தில் மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் பாமீர் முடிச்சுபிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்

போதிதர்மர் கதைகள்

போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.
அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, “வூஎன்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.
போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.
தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் வூஅரசன். அதற்குக் காரணம் இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், “தாங்கள் கடவுளைப் போன்றவர், என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.
ஒருநாள் அரசன் வூபோதிதர்மரை பார்த்து, “”நான் மடாலயங்கள் பலவற்றைக் கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக, ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டான்.
“”
எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிரஎன்றார் போதிதர்மர்.
“”
நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமா? புத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே!என்றான்.

“”உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது. உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால் இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்,” என்றார் போதிதர்மர்.
“”
பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும் தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்,” என்றார்.
தாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள் எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத் தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டான் வூஅரசன்.

“”அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும் இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து வரக்கூடாது,” என்றார் போதிதர்மன்.
அதிகாலை நான்கு மணிக்கு, “வூஅரசன் அங்கே சென்றபோது, அவருக்கு முன்பாக போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று இருந்தது.
கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்என்று எண்ணிக் கொண்டான் அரசன்.
“”
ம்இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்,” அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.
“”
உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான் அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா? அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடி. மேலும், மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, “அது இங்கே இருக்குஎன்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு பார்த்துக் கொள்ளும்,” என்றார் போதிதர்மர்.
மெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.

அரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதோ இருக்கிறதுஎன்றோ எதுவுமே இல்லைஎன்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.
மனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன் தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது, “வூஅரசனுக்கு.
நேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது.
போதிதர்மர் உறுமினார்.

“”எவ்வளவு நேரம்இன்னும் மனதைக் கண்டுபிடிக்கவில்லையா?” என்றார்.
“”
உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்!என்றான் வூஅரசன்.
அவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.
போதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.
“”
தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ, தண்டனையோ நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை,” என்று சொன்னார், “வூஅரசன்.
இதைக் கேட்ட போதிதர்மர், “”நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம் போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.

எதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம் வேறு என்ன இருக்கிறது? பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான் அமைதிப்படுத்திவிட்டேன்.
ஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை நான் காண்கிறேன்,” என்றார் போதிதர்மர்.

சீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.
தம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.
தகுதியான சீடன் தம்மை வந்தடையும்வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
ஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை போதிதர்மரின் முன்பாக வீசி, “”உங்கள் பார்வையை என் பக்கம் (சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்,” என்றார்.
நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார் போதிதர்மர்.




(சீனாவில் உள்ள போதி தருமரின் குகை கோயில் - காட்சி பதிவு )
.


5 கருத்துகள்:

R.Puratchimani சொன்னது…

good post..............keep it up

தமிழ்த்தோட்டம் சொன்னது…

வரலாற்று பதிவு அறிந்துக்கொள்ள தந்தமைக்கு நன்றி ஐயா

Saravana சொன்னது…

ஐயா நான் கடந்த 5 வருடமாக போதிதருமரிர் போதித்த தாவோ மதத்தின் இந்திய கோஆர்டினேட்டராக இருக்கிறேன், சீனத்தில் இருந்து போதி தருமரின் தத்துவங்களை இந்தி மராட்டியில் மொழிபெயர்த்து சொல்வது எனது பணி, மாஸ்டர் மூன்று மாததிற்கு ஒரு முறை மும்பை வருவார், அவர் அதிகம் சீனத்தில் பேசுவார்,
போதி தருமரை பற்றி பல விடயங்கள் அவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன்,
அதில் ஒன்று போதிதருமர் கூடு விட்டு கூடு பாயும் கலையில் வல்லவர்( கூடுவிடுவது மட்டும் தான்) அதாவது தன்னுடைய விருப்படி உயிரை உடலில் இருந்து விலக்கி விடுவது, ஒரு முறை இவ்வாறு விலக்கி விட்டால் உடல் வெற்று உடல் மட்டும் தான்
கூடு விட்டு கூடு பாய்வது கட்டுக்கதைகள் பிறகாலத்தில் புரட்டாக எழுதபட்டது,
போதி தருமர் தனது சீடர்களுக்கு இந்த கலையை கற்றுத்தந்து இருக்கிறார், இதன் மூலம் உயிர் விட்டவர்கள், உடல் எந்த ஒரு மாற்றமும் அடைவதில்லை,
புனித சவேரியார் சீனாவில் இறக்கும் தருவாயில் ஒரு துறவியின் கண்கானிப்பில் இருந்தார், ஒரு வேலை அந்த துறவி சவேரியாருக்கு கூடு விடும் கலையை கற்றுத்தந்து இருக்கலாம் ஆகையால் தான் இன்றும் அவர் உடல் கெடாமல் இருக்கிறது, என்று நினைக்கிறேன், இதை நான் எனது சவேரியாரின் வரலாறு புத்தமான விடிவெள்ளியின் வருகையில் குறிப்பிட்டிருக்கிறேன்

Samaran Nagan சொன்னது…

மதிப்புக்குரிய அய்யா ! உங்கள் கருத்துரை பல விஷியங்களை தெளிவு படுத்தியது. உங்களை தொடர்பு கொள்ள விரும்பும் தோழர்களுக்காக உங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் நலம்

Saravana சொன்னது…

rajesaravana@gmail.com
rajesaravana@ymail.com
தொடர்புக்கு 09819166850
9029512535 Mumbai
TN 07708528339