வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

மடியட்டும் ! மரண தண்டனை.



தண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும்..
ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால்..இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. 

மரண தண்டனையின் நோக்கமே ஒருவனை தண்டிப்பது மட்டுமல்ல , அடுத்து வருகிறவன் இந்த பிழையினை செய்யாமல் இருப்பதற்கான அச்சுறுத்தல் தான் . இது ஆங்கிலத்தில் deterent punishment என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த சட்டம் யாரையும் அப்படி அச்சுறுத்தியதாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் குற்றங்கள் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை.

கொலை செயலில் ஈடுபடுகிறவர்கள் மூன்று வகை :
உணர்ச்சி வயப்படுகிறவர்கள்  
சதிதிட்டம் தீட்டுகிறவர்கள்
விடுதலை வேண்டுவோர்கள்  
முதலில் உணர்ச்சி வேகத்தில் இருக்கிறவர்கள்  . அவர்களை   எவ்வித சிந்தனையும் கட்டுப்படுத்தாது. அவர்கள் தான்  உணர்ச்சி வேகத்தில் இருக்கிறார்களே . அவர்களுக்கு எங்கே ஈ.பி. கோ.320 பற்றியெல்லாம் கவலை பட நேரமிருக்கிறது.?

இரண்டாவது சதிதிட்டம் தீட்டுகிறவர்கள் இவர்கள் சதி திட்டம் தீட்டுவதே தப்பித்து கொள்வோம் என்கிற நம்பிக்கையில் தான். அப்படியே மாட்டிக்கொன்டாலும்  பாதிக்கப்படபோவது  ,அதனை செய்த கூலிப்படைதான். இருந்தாலும் தண்டனையை சந்திக்க துணிந்து தானே அதனை செய்கிறார்கள்  

மூன்றாவது விடுதலை வேட்கையோடு உள்ளவர்கள் ..இவர்கள் குறித்து சொல்ல தேவையே இல்லை. இவர்கள் மரணத்தை மதிப்பதே கிடையாது. எனவே இந்த  மூன்று தரப்பினரையும்  மரண தண்டனை   தடுப்பதே இல்லை. எனவே அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி நிற்கும் அது தேவையா?
அது மட்டுமல்ல, மரண தண்டனை ஒரு தண்டனையே அல்ல.
இப்படி பாருங்கள்.
ஒருவன் குடிசை கொளுத்த படுகிறது உடனே நீதியரசர்கள்  ...பாதிக்க பட்ட நீயும் அவன் குடிசையை கொளுத்து என்றா தீர்ப்பு வழங்குகிறார் ? அப்படி ஏன் வழங்கப்பட வில்லை? மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது.

மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது என்பதால் தானே?  ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதியின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல்தானே? குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்தில்  நியாயப்படுத்த முடியும்?




கருத்துகள் இல்லை: