இவன் தான் ராமன்
நெறிசார்ந்த மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால், அம்முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை-யென்னவெனில் இராமன் மன்னனா யிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில் தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறான். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறான்.
இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறான். அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்-பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான்.
நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடன் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக்களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர-காண்டம், சரகம் 43, சுலோகம் 1)
இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனு-பவித்த களியாட்டங்களை வால்மீகியும், மிக விசாலமாகவே விவரிக்கிறான். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் அனைத்தும் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாத-வன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான். (உத்தரகாண்டம்:சரகம் 42. சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறான்.
அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமான-தல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்-தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளி-லிருந்தும் பெண்ணழகிகள் எல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இப்படிப் பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்கள் எல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு-பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம், வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறான் வால்மீகி.
இவைகளெல்லாம் இராமனின் ஒரு நாள் நிகழ்ச்சிகளே அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளே இவை-களாகும். நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒரு போதும் கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்-பத்தைக் குறிப்பிடுகிறான். அதுவும் ஒரு துயர-மான நிகழ்ச்சியாய்த் தெரிகிறது. அக்குறையைத் தாமே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.
இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறான் வால்மீகி. இருந்த போதிலும் ஓர் பார்ப்பானின் பையன் ஒருவன் அகால மரணமடைந்ததாய்ச் சொல்லப்-படுகிறது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்-தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனை நிந்தித்தான்.
மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட மாசுதான் மகனின் மரணத்திற்ககுக் காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்ற-வாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (உண்ணாவிரதம்) நடத்தித் தற்கொலை செய்துகொள்வேன் என அச்சுறுத்தினான். நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். இந்து (புனித) சட்டங்களின்படி பார்ப்பான்கள் மட்டுமே தவம் செய்யலாம். பார்ப்பான்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்றும் மேலும், நாரதன் அடுக்கினான். தருமத்திற்கு எதிராய் ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும்பாவம். குற்றம் என்றும் இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான்.
இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மனிதன் கடினமான தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். தவத்தை மேற்கொண்டிருக் கிறவன் யார் என்று கூட விசாரிக்க வில்லை. தவத்தில் ஆழ்ந்திருந்தவனோ சம்புகன் என்ற சூத்திரன். மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் தவம் செய்து கொண்டிருந்தான். விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை-நியாயத்தை அறிந்-திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலை-யைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த அப்பார்ப்பானின் பிள்ளை மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்க-ளெல்லாம் மன்னன் இராமன் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டிருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள்.
அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பார்ப்பான் பையனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் ஆராதித்தான்-அந்த பார்ப்பான் பையன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான், என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்புகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இவன் தான் ராஜாராமன்!.
-------- அண்ணல் அம்பேத்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக