செவ்வாய், ஜனவரி 11, 2011

அன்பு முத்தங்கள்- சேகுவேரா



அன்புள்ள ஹில்டா, அலெய்டா, காமிலா, சிலியா, எர்னஸ்டோ!

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உங்களுடன் இருக்க மாட்டேன்.

உங்களுக்கு என்னை அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்குநேர்மையாக இருப்பவன். தனது தத்துவத்துக்கு விசுவாசமாக இருப்பவன்.

நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளரவேண்டும். நன்றாகப் படிக்கவேண்டும். தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில்எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால், அவர்களுக்காக வருத்தப்படுங்கள்.

குழந்தைகளே, உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் உங்களைகாண்பேன் என்று நம்புகிறேன்.


அன்பு முத்தங்கள்,
அப்பா

கருத்துகள் இல்லை: