அசைந்து விழுந்தது
உலையின் மூடி.
...................................
கடையில் குடை
மழையில் நனைகிறது
ஏழையின் கனவு.
......................................
வாழ்க்கை இருட்டு
வழி காட்டுமா?
சிவப்பு விளக்கு.
......................................
அம்மணமாய் குழந்தைகள்
அழைத்தால் வருமா..
நிலவை மூடும் மேகம்.
........................................
என்னத்தான் உசத்தியானாலும்
ஒரு முழம் பூ அளப்பதில் தோற்றுபோகிறது
விஞ்ஞானம்
.............................................
ரசிக்க முடியவில்லை,
இந்த ரோஜாபூக்களை
அப்பாவின் உடல் மீது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக