திங்கள், நவம்பர் 29, 2010

நானும் நீயும்தான்.

கதறி..கதறி
அழவேண்டும்  போலிருக்கிறது,
காரணம் மட்டும் தெரியவில்லை.
இரவுகள்
உன் நினைவுகளை
மலர செய்வதால்
என் மனம் பட்டாம்பூச்சியாகி விடுகிறது.
ஞாபக தேன் பருக.
கவலைப்படாதே  காதலி,
நமக்கிடையில்
ஒரு
புதியக்கோள் வராதவரை
வானமும்,பூமியும்
நானும் நீயும்தான்.

1 கருத்து:

சுபாவள்ளி சொன்னது…

இரவுகள் உன் நினைவுகளை மலர செய்வதால்......... ம் நல்ல கவிதை இதனை ஒரு வாரம் கழித்தே நான் பதிவுகளில் இடுவேன் எடுத்து செல்ல உங்கள் அனுமதி வேண்டும்...