உலகிலுள்ள
பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு
அல்லது கண்டம் இருந்ததாக தன்னுடைய
முன்னோர்கள் குறிப்பிட்டிருந்ததை
தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) காலக்கட்டத்தில் அறிவித்தார்.
அது அறிஞர் பலரின்
சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே
இருந்ததா? அல்லது,
கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,
இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய
கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில்
இருந்தது . அதனை “கோண்ட்வானா’
என்று அறிஞர்கள் குறித்துள்ளனர்.
பல மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து
மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது.
ஹோமோ சேப்பியன் எனும்
மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார்
ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை
அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820
& 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள்
இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’
என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு
ஆற்றிய பங்கு’ என்ற நூலில்
கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது.
இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும்
குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.
”நெடியோன் குன்றமுந்த
தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’
(சில 8:12)
“”வடிவே லெறிந்த
வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’
(சில 11:1:20)
இன்றுள்ள
குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப்
பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில்
தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.
அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும்
உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல்
சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன..குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா
கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான்.
1 கருத்து:
தகவலுக்கு நன்றி என்னோட Projectku இதை பயன்படுத்திக்கிறேன் Thanx
கருத்துரையிடுக