லெமூர் என்றால்
பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக
உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது. பழந்தமிழ்
நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும்
தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம்.
குமரிக்கண்டம் –எல்லைகள்
1. தொலைமேற்கில் –
கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் –
சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர்
ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள
வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ்
நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு
தெங்கு நாடு, ஏழு பனை நாடு என
பிரித்திருந்தனர். அதாவது
ஏழு தெங்கநாடு - தென்னை மரம் சார்ந்த இடம்
ஏழு மதுரைநாடு - மதுரையும் மதுரையை சுற்றி இருந்த
இடம்
ஏழு முன்பாலைநாடு - பாலை நிலம் சார்ந்த நாடுகள்
ஏழு பின்பாலைநாடு - பாலை நிலமே (ஏன் இந்த இரண்டு
பிரிவு என்று தெரியவில்லை)
ஏழு குன்றநாடு - மலை சார்ந்த இடம்
ஏழு குணகரைநாடு - கடற்கரை சார்ந்த நிலம்
ஏழு குறும்பனைநாடு - பனைமரம் சார்ந்த நிலம்
அந்நாட்டில்
வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய
வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்,
தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும்,
தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று
குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர்.
19-ம் நூற்றாண்டில்
சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற
கப்பலும்இ ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
இறுதியாக 1960-ம்
ஆண்டு அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை
ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலைகள்
இருப்பது தெரிய வந்தது. அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்
குமரிகண்டத்திற்கு வரைபடம் வெளியிட்டுள்ளனர்.
லெமூரியா மக்கள் ஏழு அடிவரை உயரமாக இருந்திருக்கிறார்கள்.
உடலின் எடை மிகமிக அதிகம். கைகள் நீளமாக,
பெரியதாக, சதைப்பற்று மிக்கதாக
இருந்திருக்கிறது. கால்கள் இதற்கேற்றார் போல நீளமாக இல்லை. ஆனால் வலுவாக திரண்டு
இருந்திருக்கிறது. தலை முடியை பின்னியிருந்தனர். இக்கால மனிதனைவிட அவர்கள்
விரல்கள் நுண்ணிய வேலைகள் செய்யக் கூடிய அளவுக்கு இருந்தன. அவர்கள் உடலில்
அதிசயமான விஷயம் நெற்றி. அது அகன்று உயர்ந்திருந்தது. மூக்குக்கு மேல்
பாதாம்பருப்பு போல - நெற்றி நடுவில் ஒரு புடைப்பு இருந்தது. மூன்றாவது கண்
எனப்படுகிறது. இது முக்காலங்களை, பிறர் எண்ணங்களை, தொலை நிகழ்ச்சிகளை அறியும் அறிவுக்கண் என்கிறார் அறிஞர் கார்லே."
2 கருத்துகள்:
எகிப்த்தில் இருந்து மோசே வந்தது போல் அவ்வப்போது பல குழுக்கள் மத்திய தரைகடல் நாடுகள், யுரேசீயா, ஸ்காண்டிநேவியன் போன்ற பகுதிகளுக்கு சென்றன, அதேபோல் மையரேகைக்கு இப்புறம் மக்கள் ஒரு பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டு இருந்தனர் அது டாங்கோ சாலமன் போன்ற தீவுகளை எல்லையாக கொண்டு இருந்தது. அங்கிருந்து பறவைகள் கூட்டம் பசிபிக் மாசமுத்திரத்தை கடப்பதை கன்டு அவற்றை திசைகாட்டும் கருவியாக கொண்டு முதன்முதலாக ஹவாய் தீவுகளை அடைந்தான் இவர்களின் கலாச்சாரம் திராவிடம் இவர்களை மாயர்கள் என்று அழைத்தனர், ஆனால் வடக்கே நிலப்பரப்பை கடந்தவர்களுக்கு கடல் கடக்க தெரியாது ஆகையால் கடல் கடப்பது பாவம் எனறு புதிய தலைமுறைக்கு சொல்ல ஆரம்பித்தனர், பிறகு வந்தவர்களும் அதை சாத்திரமாக்கி எழுதி வைத்தனர். திராவிடர் அல்லது மாயர், அல்லது லெமூரியர் என அழைக்கபடுபவர்கள் இன்று தென் ஆப்ரிக்காவில் நீக்ரோக்களாகவும், தென் அமேரிக்காவில் செவ்விந்தியர்களாகவு, ஆஸ்திரேலியாவில் லேமர்களாவும், தென் இந்தியாவில் தமிழர்களாவும் அழைக்கபடுக்கின்றனர். இவர்களது மொழி கலாச்சாரம் அனைத்தும் 50% ஒத்து போகும், எடுத்துக்காட்டு, ஸ்பனிய எருது சண்டை 1800களில் தென் அமேரிக்க நாடான அர்ஜண்டினாவில் இருந்து கொண்டு வந்தார்கள்,
இன்று பிரேசில் பெரு போன்ற நாடுகளில் வீடுகளில் வெளியில் இரண்டு வண்ண பட்டைகள்(காவி,வெள்ளை) தீட்டுவதை முறையாக வைத்திருக்கின்றனர்
அருமையான தகவல்கள் !நன்றி -சரவணா ! பழைய வேதாகமத்தில் நோவா என்பவருக்கு கடவுள் சொன்ன கட்டளையை ஏற்று பேரழிவில் இருந்து தப்பி செல்ல பேழையை செய்து உலகம் முழுதும் பரவினர் என்பதும் ஒரு வரலாற்று குறிப்புகள்.
நோவாய் என்பது நாவாய் என்பதின் மருவு. நாவாய் என்பதன் பொருள் :- தமிழில் கப்பல் கட்டுபவன் ,கப்பலை செலுத்துபவன் ஆகும்.
கருத்துரையிடுக