வெள்ளி, மார்ச் 15, 2013

திராவிடத்துக்கு தீ



மாவீரன் ஆரிய சங்காரன்
மாவீரன் ஆரிய சங்காரன் 1950, -60களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது. இவரது தீவிர செயல்பாடே இப்பெயருக்கு வீரத்தைக் கூட்டியது. சென்னையில் சுமார் இருபதே ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய சங்கரன் அவர்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் இதுவரை தொகுக்கப் படவில்லை. தலித் இயக்க வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த காலகட்டத்திலாவது நாம் இப்பணியை செய்யத் தவறினால் பின்னர் எப்போதும் செய்ய முடியாதவர்களாய் போவோம்.

தலித் இயக்க வரலாற்றில் ஆரியசங்காரனுக்கு முக்கியமான .இடமுண்டு. அவரது செயல்பாட்டைப்பற்றிப் பல சம்பவங்கள் இன்றும் சென்னை மூர்மார்கெட் நினைவுகளையொட்டிய கதைகளாக வாழ்ந்து வருகின்றன.1950 - 60களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது. இவரது தீவிர செயல்பாடே இப்பெயருக்கு வீரத்தைக் கூட்டியது. திரு. வி. க தனது வாழ்க்கை குறிப்பில் பெüத்த சங்க கூட்டங்களில் தானும் பிறரும் சென்று கலாட்டா செய்ததை இப்படிப் பதிவு செய்துள்ளார்: 'அக்கூட்டங்கள் எனக்கு வெறியூட்டின. வெறி கொண்டு சில மாணாக்கர்களைச் சேர்த்து/ ஒரு நாள் பெüத்த சங்க கூட்டத்துக்குள் நுழைந்தேன். - யான் குறுக்கிட்டேன். ஒரே கூச்சல் எழுந்தது. எவரோ ஒருவர் வானரங்கள் என்றால் மாணாக்கர் சும்மா இருப்பரா? பெருங்குழப்பம் விளைந்தது'. (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் - 506ல்) அதுபோல திராவிடர் கழகக் கூட்டங்களில் கலவரம் செய்தவர் இவர். தீண்டாத மக்களை கேவலப்படுத்திய ஈ. வெ. ரா. பெரியாரின் திராவிடர் கழகக் கூட்டங்கள் மூர்மார்க்கெட் பகுதியில் நடக்கும்போது அக்கூட்டங்களில் பாம்புகளை வீசியெறிந்து கலகம் செய்தவர் ஆரிய சங்காரன். இதன் பிறகு/ மூர்மார்கெட் பகுதிகளில் தி.க.வினர் கூட்டங்கள் நடத்துவது இல்லை என குறிப்பிட்டார். திரு. அன்பு பொன்னோவியம். (கட்டுரையாசிரியரிடம் நேரில் கூறியது) தனி நபராகவும்/ ஆதரவாளர்களுடன் இணைந்தும் பல போராட்டங்களை அந்நாளைய திமுக அரசிற்கெதிராகவும் பார்ப்பன/ ஆதிக்கசாதியினருக்கு எதிராகவும் நடத்தி வெற்றி கண்டவர்.சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையுடையவர். 'ஆரியசங்காரன்' என்ற இதழை நடத்தியவர். இந்தியக் குடியரசு கட்சியின் தமிழகத் தலைவராக/ அம்பேத்கரின் போர்க்குணமிக்க கொள்கை வழி பிறழாத வீரராகத் திகழ்ந்தவர்.

பெரியமேடு பகுதியில் கைவண்டித் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்களுக்காக அச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்.


தலித் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக மக்களைத்திரட்டி அணியமாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதில் வல்லவர் ஆரியசங்காரன். அதேபோன்று/ தலித் தலைவர்களுக்கு அல்லது இயக்கங்களுக்கு எதிரான ஆதிக்கசாதியினரின் விஷமத்தனத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முதலாவதாகத் திகழ்ந்தவர். இவரது போராட்ட வாழ்வில் இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு பதிவு செய்கின்றேன். 1966ஆம் ஆண்டு மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும்/ 1969ஆம் ஆண்டு அமைச்சர் சத்தியவாணிமுத்து அவர்களை இழிவுபடுத்திப் பேசிய மேயருக்கு எதிராக அவர் மாணவர் மற்றும் தலித் மக்களை ஒன்றுதிரட்டி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் பற்றிய நாளிதழ் செய்திப்பதிவுகள் இவை.


பதிவு
நகரசபை எதிரே ஆரியசங்காரன் உண்ணாவிரதம்.
நவமணி 15.02.1966. பக்கம் 2.
சென்னை/ பிப் 15.
சென்னை நகரசபைக் கட்டிடத்துக்கு அருகே சைடன் ஹாம்ஸ் ரோட்டில் 'பம்பிங் ஸ்டேசன்' கட்டுவது தொடர்பாக நகரசபை நிறைவேற்றிய தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கோரி/ ஆரியசங்காரன் இன்று காலை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.

இந்த 'பம்பிங் ஸ்டேசன்' அங்கு கட்டுவது என்ற நகரசபை நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்ததும்/ அதனால் வேறு இடத்தில் கட்டுவது பற்றி பரிசீலிப்பதென நகரசபை வாக்குறுதி அளித்தபின் அவர்கள் வாபஸ் பெற்றதும் தெரிந்ததே.

அப்போதே தீர்மானத்தை அமுலாக்கக்கோரி உண்ணா விரதம் இருக்கப்போவதாக பெரியமேடு கைவண்டித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆரியசங்காரன் அறிவித்தார்.

அதன்படி அன்றுகாலை ஆரியசங்காரன் ஊர்வலமாக காலை 6 மணிக்கு நகரசபை ரிப்பன் கட்டிடத்திற்கு வந்தார். ஆனால்/ அப்போது நகரசபை கட்டிட கேட் திறக்கவில்லை. கேட் திறந்ததும் 7.30 மணிக்கு அவர் உள்ளே சென்று சத்தியமூர்த்தி சிலை எதிரே உட்கார்ந்தார்.

நகரசபைத் தீர்மானம் நிறைவேற்றியபடி அந்த இடத்தில் கட்டினால் 62ஆவது வட்டம் (அம்பேத்கர் நகர்)/ 63ஆவது வட்டம் (பெரியமேடு)/ 64ஆவது வட்டம் (பூங்கா நகர்) ஆகிய மூன்று வட்டத்திற்கும் பலன் கிடைக்கும். மக்கள் விருப்பம் அறிந்து தொழில் நுணுக்க ஊழியர்களை பரிசீலித்துத்தான் அங்கு கட்டுவது என நகரசபை தீர்மானித்துள்ளது. அந்த பகுதி முஸ்லீம்களையும் கேட்டேன். அவர்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆகவே/ அந்த இடத்தில் பம்பிங் ஸ்டேசனை கட்ட வேண்டும். இந்த அடிப்படையில் உறுதிமொழியளிக்கும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன் என நவமணி நிருபரிடம் ஆரியசங்கரன் கூறினார்.

அவரது தொகுதியைச் சேர்ந்த மக்கள் வந்து அவருக்கு மாலை போட்டுச் சென்றார்கள். சுற்றி போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது.

மேயர் பேட்டி:

ஆரியசங்காரன் உண்ணாவிரதம் பற்றி மேயர் மைனர்மோசஸிடம் நிருபர்கள் கேட்டார்கள். நகர சபைபோட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது/ மாற்றுவது போன்ற விஷயங்களை நகரசபையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். இது விஷயத்தில் வெளியாள் தலையிடுவது விரும்பத்தக்கதல்ல. இந்த உண்ணாவிரதம் பொது மக்களுக்கோ/ நகரசபை நிர்வாகத்துக்கோ இடையூறு விளைவித்தால் நகரசபை கமிஷனர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று மேயர் பதிலளித்தார்.


பதிவு 2
சென்னைமேயரின் ஆணவப் போக்கை எதிர்த்து ஹரிஜன மக்கள் உண்ணாவிரதம். ஆரியசங்கரன் தலைமையில் மாணவர்கள்/ பெண்கள் போராட்டம்.

- ஜெயபேரிகை/ சென்னை 16.01.1969. பக்கம் 1.
அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மையாரை இனப் பெயரைச் சொல்லி மிக இழிவாகப் பேசி அவதூறு செய்த சென்னை மேயர் வேலூர் நாராயழனின் ஆணவப்போக்கை எதிர்த்து 13.01.69 அன்று காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஹரிஜனப் பெருங்குடி மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னை நேரு ஸ்டேடியம் எதிரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்த பின்னர் 5 மணிக்கு ஆதிதிராவிட சமுதாய மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரதம் ஆரம்பித்தனர்.கட்சி சார்பில்லாமல் இன எழுச்சியின் அடிப்படையில் சமுதாய மக்கள் ஒன்றுதிரண்டு மேயரின் ஆணவப் போக்கை கண்டித்துப் போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தாய்குலத்தின் சார்பாக மனோன்மணி/ தமிழ்ச்செல்வி/ மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பம்பாய்/ அரக்கோணம்/ விழுப்புரம்/ பூவிருந்தவல்லி/ காட்டுப்பள்ளம்/ மாங்காடு/ புழல் கிராமம்/ மாதவரம்/ செங்கற்பட்டு/ சென்னை நகரிலிருந்து நூற்றுக்கணக்கில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஒன்று திரண்டு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.ஆளவந்தாரின் அலட்சியப் போக்கு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பாதுகாப்பு போலீசார் வராதது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கீழ்வெண்மணி கிராமத்தில் 42 ஊழியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் விளம்பரத் தட்டிகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் கொடுமைகளைக் கண்டித்து துக்க நாளாகக் கருதி உண்ணாவிரதம் இருப்பதாக அவற்றில் எழுதப்பட்டிருந்தது.

தமிழக அரசு மெüனம் சாதிப்பது ஏன்?

கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி தமிழக அரசு மெüனம் சாதிப்பது ஏன்? அமைச்சர்களும்/ தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏக்களும் இன்னும் வாய் திறக்காதது ஏன்? சமுதாயமே ஒன்று படு. நமக்கும் உணர்ச்சி இல்லையா? என்ற முழக்கங்கள் கொண்ட விளம்பரத் தட்டிகளும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் சுமார் இருபதே ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய சங்காரன் அவர்களைப்பற்றிய பதிவுகள் எதுவும் இதுவரை தொகுக்கப்படவில்லை. சென்னையில் பிறந்து வாழ்ந்து/ இறந்தவர் என்பது இந்த வருத்தத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. தலித் இயக்க வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இந்த காலகட்டத்திலாவது நாம் இப்பணியை செய்யத் தவறினால் பின்னர் எப்போதும் செய்ய முடியாதவர்களாய் போவோம்.


திராவிடத்துக்கு தீ மூட்டிய ஆரிய சங்கரன்

1960களில் சென்னைப் பட்டணத்தில் ஆரியசங்காரன் என்ற பெயர் பார்ப்பனர் மற்றும் சூத்திர  சாதியினருக்கு கிலி ஊட்டக்கூடியதாக இருந்தது.  திராவிடர் கழகக் கூட்டங்களில் கலவரம் செய்தவர் இவர். சாக்கிய மக்களை கேவலப்படுத்திய ஈ. வெ. ராமசாமியின்  திராவிட கழகக் கூட்டங்கள் மூர்மார்க்கெட் பகுதியில் நடக்கும்போது அக்கூட்டங்களில் பாம்புகளை வீசியெறிந்து கலகம் செய்தவர் ஆரிய சங்காரன். அதன் பிறகு  மூர்மார்கெட் பகுதிகளில் தி.க.வினர் கூட்டங்கள் நடத்துவது இல்லை.

வியாழன், மார்ச் 14, 2013

நீர்ப்பெயற்று


சங்கக் காலம்...

இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றக் தொடங்கியிருந்த காலம். பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் வறுமையின் பிடியில் வாழ்கிறான். வறுமையை நீக்கிக் கொள்ள, வள்ளலைத் தேடிச் சென்று, பரிசுகளைப் பெற்று வா.. வாழ்! என்று வழிகாட்டி வாழ்த்தி அனுப்பினான். பாணனின் தோழன்.

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள தொண்டை நாட்டை ஆண்ட ஒரு குறுநில அரசன் தொண்டைமான் இளந்திரையன். பண்ஆரம்  சூடும் பாணனுக்கெல்லாம் பொன்னாரம் சூடும்  புகழ்மிக்க வள்ளல். இந்த வள்ளலை காண வழிப்போக்கனாய் பாணன்
ஐந்திணை நிலங்களைத் தாண்டிப் காஞ்சி போகவேண்டிய பாணனின் பயணத்த்தில் 'நீர்ப்பெயற்று' என்னும் ஊரை கடக்கவேண்டி இருக்கிறது.  தன்  பயணக்கட்டுரையில்  பாணன் பதிவுசெய்கிறான்.

வண்ட லாயமொ டுண்டுறை.....
என்ற வரிகளோடு தொடங்குகிற பாடலின் காட்சி இதுதான்
……………………………………………………."என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ?"
"அட.. உனக்கும் தெரிந்துவிட்டதா?.. நான் புலவன் என்பதை எப்படி கண்டுபிடித்தாயோ?"
"இந்த 'நீர்ப்பெயற்று' கடலை '' வென வாயைப் பிளந்துகொண்டே ரசிக்கிறீர்கள்.. ஆடை சற்று கந்தல்...ஆனால் உம் கண்களில் ஒரு மின்னல் ஒளி... இது போதாதா உம்மைக் கவிஞன் என காட்டிக் கொடுக்க?..."
ஆஹா.. பெரிய ஆள்தான் போ.. சரி..சரி.. காஞ்சிக்கு போகும் வழி சொல்லேன்..."
"இந்தக் கடல் பக்கமிருந்து மேற்கே சென்றால் காஞ்சி.."
"திசை தெரியாமல் கேட்கவில்லை அப்பா.. வழி ..வழி கேட்கிறேன்.. புரிந்ததா?"
காஞ்சிக்கு நீர் போக வேண்டும்.. அவ்வளவுதானே.. வாரும்.. நானும் அந்தப் பக்கம்தான்.. இப்படியே பொடி நடை போட்டால் காஞ்சி வந்துவிடும்.."
நல்ல வாய்ப் பேச்சுக்காரந்தான் நீ.. இதோ பெரிய கடல் கண்முன்னே வெள்ளம் போல் வருகின்றது..இங்கிருந்து காஞ்சி வெகு தொலைவில் இருப்பதாக எல்லோரும் சொன்னால் நீ ஏதோ பொடி நடை என்கிறாய்..."

"கவிஞரே! கடல் நீர் வெள்ளம் போல நம்மை நோக்கி பெயர்ந்து வருகிறது என்று அழகாக சொன்னீர்..அதனால்தான் இந்த ஊரை 'நீர்ப்பெயற்று' என்று அழைக்கிறார்களோ என்னவோ... அதோ அங்கே பாரும்.. அந்தக் கடல் நீரில் எத்தனை அழகான பெண்கள் எத்தனை ஆனந்தமாக நீர் விளையாட்டு விளையாடுகிறார்கள்... சிரிக்காமல் பாரும் அந்தப் பெண்ணை.. தன் செவிப்பூணைத் நீரில் தொலைத்துவிட்டு தன் மெல்லிய வளைகரங்கள் குலுங்க தவிக்கும் அழகைப் பாரும்... அடடே..அதோ அந்த நீலவண்ண மீன்கொத்திப் பறவை அவள் செவிப்பூணை பளபளக்கும் மீன் என நினைத்து கொத்தி எடுத்து செல்கின்றதே.. பாவம் அந்தப் பெண். சரி சரி கவிஞரே! இதையெல்லாம் பார்க்காமல் 'கருமமே கண்ணாயினார்' போல் காஞ்சி நோக்கி நடை போட்டால் கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்.."
"இதோ பார்.. நான் காணாததையெல்லாம் எனக்கும் காண்பித்துவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் வா..என்றால் எப்படி? கவிஞன் என்றால் இயற்கையை ரசிப்பவன் ஐய்யா..அந்தப் பறவையையும்,பெண்களையும், கடலையும் பெயர்ந்து வரும் நீரையும் அப்படியே பார்த்து கொண்டே இருக்கலாம்தான்.."
"நீர் காஞ்சிக்கு போக வேண்டுமா.. வேண்டாமா?"
வேண்டும்..சரி சரி.. நடையைக் கட்டு.. என்ன இருந்தாலும் இந்த நீர்ப்பெயர்ற்று ஊர் பரபரப்பாகவே இருக்கிறதய்யா.. அங்கே பார்.. பெருங் கப்பல்கள் எத்தனை அனாயாசமாக நங்கூரம் போட்டு நிற்கின்றன..நல்ல நல்ல குதிரைகள் இறங்குகின்றனய்யா.. உம்... வணிகம் அதிகம் நடைபெறும் ஊர்தான்.. செல்வம் அதிகம் உள்ள ஊர் போலும்.. பாலும் நெல்லும் எங்கு பார்த்தாலும் அதிகம் தெரிகிறதே..அதோ.. அந்த நெல் வயல் ஒத்தையடிப் பாதையில் வரிசையாக நடந்து வரும் பெண்களைப் பார்.. எத்த்னை நளினமான நடை..ஆஹா.. அவர்களின் ஆடைகளின் பளபளப்பு அவர்களின் அலங்கார நகைகளின் பளபளப்பை ஈடு
செயகிறதய்யா..நல்லது.. நல்லது.. நாடு வளமாக இருந்தால் நல்லதுதான்.."
"கவிஞர்கள் எப்போதும் இப்படி நல்லதையே நினைத்து சொல்வதால்தான் நாடு வளமாக இருக்கிறது.. அதோ அந்தப் பெண்கள் அணிந்த கொன்றை மலர் கூட கண்களுக்கு குளுமையாக காட்சியாக இருக்கிறதே.. அந்தப் பெண்களின் நடையைப் பாருங்களேன்.. கோடை மழையைக் கண்ட மயில்களின் துள்ளல் நடை..பாருங்களேன் அப்படியே துள்ளித் துள்ளி நடந்தாலும் கீழே விழாமல் அவர்கள் நூல் பந்துகளை தூக்கிப் பிடிக்கும் அழகே தனிதான்..ஏன் புலவரே.. அவர்கள் கால் சிலம்பு பொன்னால் செய்யப்பட்டதோ.. கிண்கிண்' என இனிமையாக சலங்கை சத்தம் நம் காதில் விழுகிறதே.."
'"நீ சரியான பெண்பித்தன்.. பேசாமல் நடையைக் கட்டுவாயா.. தங்கம்..அது இது.. என வர்ணிக்கிறாய்?"
"ஓஹோ! புலவர் வறுமையால் வாடுகிறார் போலும்.. சரி..சரி.. உம்மை எதற்கு உசுப்பெற்றவேண்டும்?..இவர்களையும் இந்த வழியில் உள்ள இந்தக் கிராமத்து செல்வங்களையும் பார்த்து கொண்டே போனால் நடை அலுக்காது என்பதற்காக சொன்னேன்.."
"அது என்னவோ உண்மைதான் தம்பி.. இந்த வழித்தடம் கூட நன்றாக இருக்கிறது..பார்.. ஒவ்வொரு ஊரிலும் பாதைகளை எவ்வளவு நேர்த்தியாக செப்பனிட்டு சரியான இடங்களில் மாட மாளிகைகள் எழுப்பி உள்ளார்கள்... அந்த வயல்களில் பாரேன்.. அந்தக் காளை மாடுகள் கூட களையாகத் தெரிந்தாலும் களைப்பில்லாமல் உழவுக்கு உழைக்கின்றதே.. உம்... வரப்புகளில் கூட தண்ணீர் அதிகம் தெரிகின்றது..வரப்புயர மண் உயரும்.. சரியான சொல்தான்.."
"மண் உயர் மன்னன் உயர்வான்.. மன்னன் உயர மாந்தர் உயர்வார்".. "இப்போது புரிகிறதா கவிஞரே.. ஏன் இங்கு செல்வம் கொழிக்கின்றது என்று்?.."
புரிகிறது.. நன்றாகவே புரிகிறது.. ஆஹா! அதோ எதிரே தெரிகின்றதே.. அதுதான் காஞ்சியோ? உன்னோடு பேசிக்கொண்டே வந்ததில் பொழுதே தெரியவில்லை..நடையும் துளியும் அலுக்கவில்லை.. நீ சொல்வது போல 'கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்"...
"அது வெளிப்புறத்து ஊர் புலவரே... காஞ்சியை நீர் சரியாக காணவேண்டும்..நடையை சற்று வேகமாக கட்டும்..சொல்கிறேன்…
……………………………………………

பாணன் பெயர் - 'கடியலூர் உருத்திரங்கண்ணனார்
இடம் - 'நீர்ப்பெயற்று'
அட..,
மாமல்லபுரத்திற்கு 'நீர்ப்பெயற்று'  என்பது. சங்க கால பெயர்.  மேல கண்டது அனைத்தும் நேரில் கண்டு 'பெரும்பாணாற்றுப்படை' யில் 'கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதியதுதான்..
அந்த காலத்தில்  மாமல்லபுரம் எப்படி அழகா இருந்தது தெரியுமா ?
நீர்ப்பெயற்று ஊரில் உண்ணீர் பாய்ந்தோடும் துறைகளில் நீராடும் மகளிர் தம் அணிகலன்களைக் கழற்றிக் கரையில் கழற்றி வைத்திருப்பார்கள்,. அங்கு மேயும் மணிச்சிரல் பறவைகள் அவற்றை இரை எனக் கருதி உண்ண அருகில் செல்லும். அவை இரை அல்லாமை கண்டு கொத்தி எறிந்துவிட்டு அருகிலுள்ள பெண்ணை மரத்தில் உட்காராமல் அந்தணர் வேள்வி செய்ய நட்டிருந்த தூணில் அமரும். மணிச்சிரல் வேள்வித்தூணில் அமர்ந்திருக்கும் காட்சி யவனர் விற்ற ஓதிம விளக்கு போல இருக்கும்.
அங்குள்ள கடலில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருக்கும். வெண்ணிறக் குதிரைகளும் வடநாட்டுச் செல்வங்களும் நாவாயிலிருந்து இறக்குமதி செய்யப்படும். மாடம் மணல் பரப்பில் இருக்கும் மாடி வீடுகளில் அவ்வூர்ப் பரதர் மக்கள் வாழ்ந்தனர். அந்த மாடி வீடுகளைச் சிலதர் என்று குறிப்பிடப்படும் மக்கள் காவல் புரிந்தனர். வளர்ப்பினம் உழும் எருதுகள், கறவை மாடுகள், சண்டையிடும் ஆட்டுக்கடாக்கள், அன்னப்பறவைகள் போன்றவை அங்கு விளையாடும். அங்குள்ள மகளிர் பனிக்காலத்தில் கொன்றை பூத்திருப்பது போல் பொன்னணிகள் அணிந்துகொண்டு சிலம்பிலுள்ள முத்துப் பரல்கள் ஒலிக்க வானளாவிய மாடங்களில் வரிப்பந்து விளையாடுவார்கள்,. அந்த வளையாட்டில் சலிப்புத் தோன்றினால் முத்துப்போல் வெளுத்திருக்கும் மணல் வெளிக்கு வந்து கழங்கு ஆடுவார்களாம். அவர்கள் விளையாடும் கழங்கு பொன்னால் ஆனதாம். அங்குச் சென்றால் பாணர்கள் ஆமைக் கறியுடன் அரிசி உணவு பெறலாம்.
ஏணிப்படியுடன் கூடிய வேயா மாடத்துத் தொங்கவிடப்பட்ட எரியும் ஞெகிழி (தீப்பந்தம்) கப்பல்களுக்கு வழிகாட்டும். இவ்வுரிலுள்ள உழவர்கள் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். மஞ்சள் காயும் அவர்களது முற்றங்களில் பலாவும் வாழையும் பழுத்திருக்கும். அவற்றைத் தின்று திவட்டிவிட்டால் பாணர்கள் சேப்பங்கிழங்குக் குளம்புடன் உணவு பெறலாம்.

செவ்வாய், மார்ச் 05, 2013

பாதல் சர்க்கார்



மே 13ம் தேதி, இரவு எட்டரை மணிக்கு கொல்கொத்தா நகரின் அரசு மருத்துவமனையில் தனது எண்பத்தி ஆறாம் வயதில் நாடகக்கலைஞர் பாதல் சர்க்கார் மரணமடைந்தார்.
ஒரு புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவ பாதிரியாரின் மகனாகப்பிறந்து
எஞசினீயரிங் படித்து முடித்து சிவில் எஞ்சினீயராக சில வருடம்  லண்டனிலும் பிறகு நைஜீரியாவிலும் பணியாற்றி பின்னர் அவற்றையெல்லாம் உதறிவிட்டு, 1970களில் இந்தியாமுழுதும் ஒரு புயல்போலக்கிளம்பி நாடு முழுதும் பயிலரங்குகளை நடத்தி தனது மூன்றாம் அரங்குஎனும் மக்களுக்கான நாடகக் கருத்தாக்கத்தை பரவலாக்கியவர்; வேறெந்த நாடகாசிரியர்களது நாடகங்களையும் விட இந்தியமொழிகள் பல்வற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு நடிக்கப்பட்ட நாடகங்களை எழுதியவர். 2010-ம் ஆண்டு, கேரள சர்வதேச நாடக விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது,1972ம் ஆண்டு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாடெமியின் ஃபெல்லோஷிப் என பற்பல விருதுகளைப்பெற்றவர்.

2010 ம் ஆண்டு அளிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை புறக்கணித்தவர்.
எனினும் தான் பெற்ற விருதுகள்  குறித்து பெருமிதங்களோ புறக்கணித்தது குறித்த அகங்காரமோ ஏதுமில்லாதஎளிய வாழ்க்கை கொண்டவர் பாதல்சர்க்கார். மே 13 அன்று நிகழ்ந்த இவரது மரணம் மறுநாள் காலை கொல்கொத்தாவில் இருந்து வெளியான எந்தவொரு ஆங்கில, வங்க நாளிதழ்களிலும் செய்தியாகவில்லை என்பதுதான் ஓரு வருத்தமளிக்கும் உண்மை.

34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இடதுமுன்னணியின் தேர்தல் தோல்வியும் திரிணமூல் காங்கிரஸின் வெற்றியும்தான் அன்றைய செய்தியாக இருந்தது.
பாதல் சர்க்கார் மரணமடைந்த அன்று மறுநாள் பாதல்சர்க்கார் குறித்து நூலொன்றை எழுதிவரும் தேசிய நாடகப்பள்ளியைச்சேர்ந்த கீர்த்தி ஜெயின்,எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பாதல்சர்க்காரின் பல செயல்பாடுகளைப்போலவே அவரது மரணமும் கவனிக்கப்படாமல் போனதென்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் கொல்கத்தாவாசியான பாதல் சர்க்கார் தன்னை இடது முன்னணியின் ஆதரவாளராகவோ அவற்றின் செயல்பாடுகளோடு அடையாளப்பட்டவராகவோ தன்னைக்காட்டிகொண்டவரில்லை.
தனது கட்சித்தொடர்பு குறித்து கடந்த ஆண்டு கரண்ட்இதழின் இணைய பதிப்பில் நீலாஞ்சன் தத்தா என்பவர்க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நான் எந்த ஒரு ஆளுமையினாலும் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவனில்லை. இந்த சமூகம் மாற்றப்படவேண்டும் என்பதற்காக அதற்கான வழிமுறையையும் சிந்தனையையும் கொண்ட கட்சியில் இணைந்தேன். இன்று நான் கட்சியில் இல்லை என்ற போதும் இந்த சமூகம் மாற்றப்படவேண்டும் என்பதற்காகவே என் நாடகங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறேன். இப்பணி முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. தொடர்ந்துகொண்டுதானிருக்கும். இன்று நான் கட்சிக்கு வெளியில் இருந்தாலும்  ஒரு மார்க்ஸிஸ்ட்டாகவே இருந்து வருகிறேன்.

1960களில் பாதல் சர்க்கார் சில முக்கியமான நாடகங்களையெழுதுகிறார்.அபோங் இந்திரஜித்’ [ஏவம் இந்திரஜித் என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாடகம் தமிழில் ராஜாராம் அவர்களால் பிறிதொரு இந்திரஜித்என மொழிபெயர்க்கப்ட்டிருக்கிறது].  1963ல் எழுதப்பட்ட இந்நாடகம் வாழ்வின் இருப்புகுறித்த எக்ஸிஸ்டென்ஸியலிஸக்கேள்விகளை உள்ளடக்கியது

1972-74 களில் கொல்கொத்தா நகரத்தின் மையமான கர்சன் பார்க்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்துக்கு மேற்பட்ட குழுக்கள் திறந்தவெளியில் நாடகம் நிகழ்த்தும்.இவற்றில் பாதல் சர்க்காரின் சதாப்தி குழுவும் ஒன்று. அது இடதுசாரிகள் மீது சித்தார்த்த சங்கர் ரே அரசு, கொடூரமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருந்த காலம்.

நாடகம் பார்க்கக்கூடியிருந்த பார்வையாளர்கள் மீது போலீஸார் கொடூரமான தடியடி நடத்தியபோது பிரபீர் தத்தா என்பவர் மண்டைஉடைந்து இறந்து போனார். எனினும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இது போன்ற திறந்தவெளி நாடகங்கள் கர்சன் பார்க்கில் நிகழும். 3000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அவற்றைக்காணத்திரள்வர்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் வரை இவை தொடர்ந்தன. உண்மையில் திறந்தவெளியில் நாடகம் நிகழ்த்துவது என்பது பாதல் சர்க்காரின் கண்டுபிடிப்பல்ல. பலர் இதுபோன்ற முயற்சிகளில் அன்று ஈடுபட்டிருந்தனர்.

இச்சூழலில்தான் இவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு மூன்றாம் அரங்கு’ [Third Theatre] என்ற பெயரில் தனது சதாப்தி குழுவின் மூலம் திறந்தவெளியில் நாடகங்களை நடத்த தொடங்கினார்.

ஏற்கனவே இருந்துவந்த மரபான நாடக வகைகளை அதாவது, நம்மூர் தெருக்கூத்து, கேரளத்து கதகளி, கர்நாடகத்து யக்‌ஷ கானா,வங்கத்து ஜாத்ரா போன்ற தொல்கலை வடிவங்களை முதல் வகை அரங்கு எனவும், காலனீய ஆதிக்கத்தில், மேற்கத்திய நாடுகளின் பாதிப்பில் உருவான  தற்போது நாம் காணுகிற மேடை நாடகங்களை அதாவது பிராசீனிய மேடை என்றழைக்கப்படுகிற படச்சட்ட வடிவ மேடை நாடகங்களை இரண்டாம் அரங்கு எனவும், மக்களை தேடிச்சென்று திறந்தவெளியில்,பூங்காக்களில், தெருமுனையில் நிகழ்த்தப்படுகிற நாடகங்களை மூன்றாம் அரங்கு எனவும் அவர் இனம் கண்டார்.

1992 ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியின் அருகிலுள்ள அய்கஃப்[AICUF] ஒழுங்கு செய்திருந்த பயிலரங்கில் நான் அவரை சந்தித்தேன்.சென்னையிலுள்ள நாடகச்செயற்பாட்டாளர்களோடு பாதல் சர்க்கார் கலந்துரையாடுகிற நிகழ்ச்சியை அப்பயிலரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்குப்பிறகு எங்களது நாடகத்தைக்காண சர்க்காரை அழைத்தேன். மறுநாள் லயோலா கல்லூரிக்கருகிலுள்ள குடிசைப்பகுதியில் எங்களது சென்னைக்கலைக்குழுவின் மாநகர், ’உரம்ஜேம்ஸ்பாண்ட்போன்ற நாடகங்களை நிகழ்த்தினோம். அவற்றை பார்வையாளர்களோடு அமர்ந்து பார்த்தார். நாடகம் முடிந்ததும் எங்கள் குழுவினரோடு கலந்துரையாடினார். பாராட்டுதல்களைச்சொன்னார்.

தமிழ்நாட்டில் பாதல் சர்க்கார் சரியாகப்புரிந்து கொள்ளப்படாதவர் மட்டுமல்ல: சரியாக அறிமுகம் செய்யப்படாதவரும் கூட. முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது பிறிதொரு இந்திரஜித்நாடகம். நடுத்தரவர்க்கத்து இளைஞனைப்பற்றியது. 

எல்லாமே அர்த்தமற்றிருக்கும்  சமூகச்சூழலில் அவற்றோடு ஒத்துப்போகமுடியாமல் அடையாளமிழந்து போகும் ஓர் இளைஞனின் தவிப்பும் அவசமுமாக இந்நாடகம் விரியும்.. ஏமாற்றங்கள், இழப்புகள் ,கனவுகள் என்பதாக காட்சிகள் அமைந்திருக்கும் அர்த்தமற்ற இவ்வாழ்விலிருந்து விடுபட அவன் தற்கொலைக்கும் முயல்கிறான். அதிலும் அவன் தோற்றுப்போகிறான். இந்நாடகத்தின் இறுதியில் அர்த்தமற்ற இவ்வாழ்வின் சுமையை அவன் ஏற்றுக்கொள்ளத்தயாராகும் போது ஒரு வசனம் வரும் தீர்த்தஸ்தலங்கள் ஏதுமில்லை; தீர்த்த யாத்திரை தொடர்கிறதுஎன்று.

திடீரென சிலர் காணாமல் போய் விடுவார்கள். சிலதினங்களில் அவரது உயிரற்ற உடல் எங்கிருந்தாவது மீட்கப்படும். இது அன்றைய கொல்கொத்தாவிலும் மேற்குவங்கத்திலும் அன்றாட நிகழ்வாக  இருந்த காலம். இன்றைய காஷ்மீருக்கும் மணிப்பூருக்கும் இலங்கையின் தமிழ்பேசும் பகுதிகளுக்கும் இது பொருந்தலாம்.இப்பின்னணியில்தான் பாஸி காபர்நாடகத்தை அவர் உருவாக்குகிறார். அந்நாடகத்தில் இப்படி கொல்லப்பட்ட ஒருவன் பாத்திரமாக வருவான். பார்வையாளர்கள் மத்தியிலும் நாடகத்தில் வரும் கோரஸ்குழுவினரிடையேயும் இவன் சப்தமின்றி உலவிக்கொண்டிருப்பான். அவனது இருப்பு பலராலும் உணரப்படும். ஆனால் நாடகத்தில் வரும் மைய பாத்திரமான இளைஞனொருவன்  இப்படி கொல்லப்பட்டவனொருவன் இருந்துகொண்டிருப்பதை மறுத்துக்கொண்டேயிருப்பான்.

நாடக முடிவில் பாதல் சர்க்கார் இவ்வாறு எழுதியிருப்பார்.  நாம் ஒவ்வொருவரும் இந்நாடகத்தில் மையப்பாத்திரமாக வரும் இந்த இளைஞனைப்போலத்தான். நம்மிடையே உள்ள கொல்லப்பட்டவர்களைமறுத்துக்கொண்டேயிருக்கிறோம்.அதில் முழுமையாக வெற்றி பெற முடியாமல் தோற்றும் போகிறோம்.” என்று. இதுதான் பாதல் சர்க்கார்.

பலரும் அறியாத மற்றொரு விஷயம் ,பாதல் சர்க்கார் எதிர்காலத்தில் உலகமக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரு பொது மொழிகுறித்து கனவு கண்டவர். போலந்து நாட்டைச்சேர்ந்த எல்.எல். ஸாமென்ஹாஃப் [L.L.Zamenhaf] என்பவர் உலகத்து மொழிகளிருந்தெல்லாம் சீரியவிஷயங்களை எடுத்து ஒரு பொதுமொழி ஒன்றை உருவாக்க முயன்றார். இம்மொழிக்கு எஸ்பெரன்டோஎன்று பெயர்.  இம்மொழியை கற்றுக்கொடுப்பவர்கள் இன்று உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களில் பாதல் சர்க்காரும் ஒருவர்.

பாதல், தனது கடைசி நாட்களில் தனக்கு பரிசாக கிடைத்த தொகையை வைத்துக்கொண்டு உலகம் முழுக்க பயணம் செய்தார். இவர் செல்லுமிடத்திலிலெல்லாம் இவருக்கு தங்குமிடம் தந்து உபசரித்தது இந்த எஸ்பெரன்டோசமூகத்தினர்தாம்.

நாடகவியலாளர் ரிச்சர்ட் ஷீனருக்கு எழுதிய கடிதத்தில் தனது மூன்றாம் அரங்ககோட்பாட்டின் பிரகடனங்களாக செயல் திட்டங்களாக சிலவற்றைச்சொல்கிறார்.

அதில்   
நகரத்திலிருந்து கொண்டு உழைக்கும் மக்களுக்காக உழைக்கும் மக்களைப்பற்றி நாடகம் செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற விவ்சாயிகள், நிலமற்ற விவ்சாயக்கூலிகள் அவர்களுக்கான நாடகத்தை அவர்களே தயாரிக்கவும்  நிகழ்த்தவும் உதவும் விதத்தில் அவர்களை ஆற்றலுள்ளவர்களாக்கவேண்டும். இச்சமூகம் பெரும்பாலான மக்களை உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும்நல்ல கல்விக்கும் சுகாதாரமான வாழ்விற்கும் ஏங்குகிற வறியவர்களாக மட்டுமல்ல அவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக, தன் திறன்மீது சுயமதிப்பற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது. நாம் இப்புனைவுகளை தகர்த்தாக வேண்டும் நாடகக்கலை என்பதும் கலைத்திறமை என்பதும் நடுத்தர படித்த வர்க்கத்தின் ஏக போகமல்ல என்பதை நாம் நிறுவ வேண்டும்.

உண்மையில் உழைக்கும் மக்களின் அணிதிரட்சி விரிவடைகிற போதுதான் இது சாத்தியமாகும். அப்படி நிகழும்போது நான் பரப்பிவரும் இந்த மூன்றாம் அரங்கின்தனித்த செயல்பாடுகள் தேவைப்படாது. அவை உழைக்கும் மக்களால் திருத்தியமைக்கப்பட்ட முதல் அரங்கோடுகலந்துவிடும்

பாதல் சர்க்கார் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான கருத்தியலை ஏற்றுக்கொண்டபோதிலும் சதானந்த் மேனன் கூறியது போல உழைக்கும் வர்க்கம்என்ற சொல்லின் பொருளை அதன் வழக்கமான அடைப்புக்குறிக்குள் வைத்து புரிந்துகொள்ளவில்லை. அடைப்புக்குறிகளை தாண்டி ஏழை ,    எளியவர்கள் , அன்றாடங்காய்ச்சிகள், விளிம்புநிலையினர் என்று எல்லோரையும் சேர்த்துப்பொருள் கொண்டவர்; பொருள்கொண்டதோடு மட்டுமன்றி
அவர்களையெல்லாம் தனது பார்வையாளர்களாக வரித்துக்கொள்ள விரும்பினார். வரித்தும்கொண்டார். அதுவே பாதல் சர்க்காரின் தனிச்சிறப்பு

நன்றி -
புதிய விசை.