செவ்வாய், அக்டோபர் 18, 2011

உன் கழுத்தில் சூட .

உன்
விரல்களும்
விழிகளும்
தேடிக்கொண்டே இருக்கிறது.
முறத்தில் கற்களையும்
முற்றத்தில்
காதலையும் ..

எப்படி சொல்ல ?
வாளேந்தி நிற்கும் பொழுதும்
உன்
தோள் சாய்ந்த நினைவுகளை.
அன்பே !
ஒரு
பொழுது காத்திரு!
இந்த புரவிகளை மீறி
விரைந்தோடி வருகிறேன்,
களத்தில் சூடிய வாகையை
உன் கழுத்தில் சூட .

கருத்துகள் இல்லை: