சனி, மே 28, 2011

கழுமரம் என்பது





"கழுவில் ஏற்றுதல்" என்னும் கொடிய வழக்கம் பண்டைய 
காலத்தில் பல இனங்களில் இருந்தது. கழு சாதாரணமாக மரத்தால் செய்யப்பட்டிருக்கும்.  அதனால்தான் அதனைக் 'கழுமரம்' என்று குறிப்பிட்டனர்.

இரும்புக் கழுவும் இருந்தது. 'வெங்கழு' என்று அதனைக் குறிப்பிட்டனர். 

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழுமுனையில் நிறைய எண்ணெய் தடவி குற்றாவளியை  பிடித்து நிர்வாணமாக்கி, அவன்  கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழு முனையில் வைத்து அப்படியே  செருகி விடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும்  உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக் கொண்டு ஏறும். 

அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுட்டு  செத்து  போவான். இறந்த உடலை பறவைகள் கொத்தி  உண்ணும். இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது


இந்த கொலைக்கருவியால் தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்கிறது  சரித்திர குறிப்புகள்.  கி.ராஜநாராயணன் தனது கதையில் கழுமரத்தை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார். தமிழகத்தில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த  கழுமரம் ஈரோட்டில்  காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாராப்பன் கோவிலில் உள்ளது,  இது பனைமரத்தால் ஆனது.

2 கருத்துகள்:

Saravana சொன்னது…

வணக்கம் ஐயா நான் சவேரியார் குறித்த புத்தகம் தொடர்பாக தென் தமிழகம் மதுரை என்ற இடங்களுக்கு சென்ற போது இந்த கொடுமைகளை சிலையாகவும் பேச்சுக்களாகவும் கேட்க நேர்ந்தது, கொல்லாமை பொய்யாமை, புலால் உண்ணாமை, பிறர்மனை நோக்காமை,கள்ளுன்னாமை எனற பஞ்சசீலங்களை மனதில் கொண்டு மனித இனத்தின் நன்மைக்காக வாழ்ந்த சமனர்களையும், பௌத்தர்களையும் எவ்வளவு கொடுமையாக அழித்தொழித்தார்கள் என்று கேட்கும் போது இவ்வளவு நாட்கள் நான் இந்து தெய்வங்களை வணங்கியது எவ்வளவு முட்டாள் தனமானது என்று புரிந்து கொண்டேன், கொழுக்கம்பி என்ற ஒன்றும் இதில் இருந்தது, பௌத்த துறவிகளை 13 பேராக நிற்க வைத்து காதில் ஒரு புறத்தில் இருந்து மறுபுரம் சொறுதி அந்த கம்பியை கிணறு போன்ற பள்ளம் தோன்றி குறுக்கு நெடுக்காக மாட்டி விடுவார்கள் கிழே நெருப்பு பற்றவைத்து விடுவார்கள், இது ஊர் மக்கள் முன்னிலையில் நடக்குமாம் அதாவது இவர்களின் மதத்தை பின்பற்றினால் உங்களுகும் இதே கதிதான் என்று செய்தியாக இருக்க இப்படி செய்வார்களாம். மேலும் அந்த மதங்களை பின்பற்றியவர்களின் வீடுகளை தீவைத்து கொழுத்தி விடுவார்கள், அவர்கள் உண்ண நெல்கிடைக்காது, பலர் பட்டினியால் மாண்டனர், சிலர் வைதீக மதங்களான(கார்பரேட் ரிலீஸனை) ஏற்றுக்கொண்டார்கள்

Samaran Nagan சொன்னது…

தாவோ மதத்தின் இந்திய கோஆர்டினேட்டராக இருந்து வரும் தாங்கள் தாவோ" குறித்து இங்கு எழுதினால் அனைவருக்கும் பயன்படும்