புதன், ஜனவரி 12, 2011

பணவீக்கம்


ஒரே ஒரு உலகத்தில ஒரே ரு தீவு இருந்தது, (ஹி.. ஹி..)

அந்தத் தீவில மூணு பேரு இருந்தாங்க. மதி??!!!!, பென்ஸ், சிவாஜி..

நம்ம மதிக்கு அந்த தீவில் இருக்கிற நிலம் சொந்தம்.

பென்ஸ் கிட்ட ஒரு 100 ரூபா பணம் இருந்திச்சி

சிவாஜி கிட்ட 100 ரூபா பணம் இருந்திச்சு.

*
அப்ப** **தீவோட** **பணமதிப்பு** 200 **ரூபாய்**.*

சிவாஜி குடும்பஸ்தர்.. சரி சரி சும்மா பணமா வைக்காம நிலம் வாங்கிப் போடலாம்னு100
ரூபாயைக் கொடுத்து மதிகிட்ட இருந்து நிலத்தை எழுதி வாங்கிட்டாரு.

மதியும் சந்தோஷமா வித்துட்டாரு.. விடலைப் பையனாச்சே..

*
அப்ப** **தீவோட** **மதிப்பு** 300 **ரூபாய்** **நில** **மதிப்பையும்** **
சேர்த்து**.*

பென்ஸ் யோசிச்சாரு.. ஆஹா நிலம் மதிப்பு உயருமே அப்படின்னு மதியை தாஜா பண்ணி 100
ரூபா கடன் வாங்கி 200 ரூபா குடுத்து சிவாஜி கிட்ட நிலத்தை வாங்கிட்டாரு.

*
இப்ப** **நிலத்தோட** **விலை** 200 **ரூபா**. **சிவாஜி** **கிட்ட** **இருநூறு**
**
ரூபா** **ஆக** **தீவோட** **மொத்த** **மதிப்பு** 400 **ரூபா** **ஆச்சு**.*
பென்ஸ் மதிக்கு 100ரூபா தரணும்.

மதிக்கு வேற சொந்த இடம் இல்லாததால கல்யாணம் தட்டிப் போயிகிட்டே இருந்ததா, மெல்ல
சிவாஜியை நைஸ் பண்ணி 200 ரூபா கடன் வாங்கினாரு.. பென்ஸ் மொதல்லயே 100 ரூபா
தரணும் இல்லியா? அதோட சேர்த்து 300 ரூபாய்க்கு நிலத்தைப் பேசி முடிச்சாரு..

*
இப்ப** **தீவோட** **மதிப்பு**, **நிலம்** 300 **ரூபா**, **பென்ஸோட** **கையில**200
**
ரூபா** **ஆக** 500 **ரூபா** **ஆயிடுச்சி**..* மதி சிவாஜிக்கு 200 ரூபா தரணும்
.

அடுத்து சிவாஜி மதிகிட்ட இருந்து அந்த நிலத்தை வாங்கினாரு. எப்படி? பென்ஸ்கிட்ட200
ரூபா கடன் வாங்கி, மதி ஏற்கனவே 200 ரூபா தரணுமே அதையும் காட்டி 400 ரூபாய்க்கு
வாங்கிட்டார்.

நிலம் சிவாஜிக்கு 400 ரூபாய் மதி கையில 200 ரூபாய். தீவோட மதிப்பு 600 ரூபா.
சிவாஜி பென்ஸூக்கு 200 ரூபா தரணும்.

இப்படி சிவாஜி, பென்ஸ், மதி மூணு பேரும் மாத்தி மாத்தி ஒருத்தர்கிட்ட ஒருத்தர்
வாங்கி வித்ததினால நிலத்தின் விலை 5000க்கு மேல எகிறிடுச்சி..
ஒருத்தொருக்கொருத்தர் கொடுக்க வேண்டிய கடனும் எகிறிடுச்சி..

*
இன்றைய** **நிலை**. **நிலம்** **சிவாஜி** **வசம்**. **மதிப்பு** 5000 **ரூபாய்
**.
**
சிவாஜி** **பென்ஸூக்கு** **தரவேண்டியது** 200 **ரூபாய்**. **ஆகத்** **தீவின்*
* **
மதிப்பு** 5200 **ரூபாய்**.* மதி கையில 200 ரூபா இருக்கு. பென்ஸூக்கு
சிவாஜி 200 ரூபா தரணும்.


மதிக்கு நிலம் வாங்கற ஆசையே போயிடுச்சி. பென்ஸ் பணம் கேட்டு நெருக்கறாரு.
சிவாஜிக்கோ நிலத்தை விக்க முடியலை. என்ன செய்ய?

கடன் கொடுத்த பென்ஸ் கையில ஒண்ணுமில்லாம பூவாவுக்கு சிங்கியடிக்க
ஆரம்பிச்சிடறார். உடனே சிவாஜி மேல கேஸ் போடறாரு.

சிவாஜி வேற வழியில்லாம நிலத்தை பென்ஸூக்கே எழுதிக் கொடுத்துட்டாரு..

*
இப்போ** **பணமா** **மதிகிட்ட** 200 **ரூபா** **இருக்கு**, **பென்ஸ்** **கிட்ட*
* **
மதிப்பே** **இல்லாத** **நிலம்** **இருக்கு**. **சிவாஜி** **போண்டி** **
ஆயிட்டாரு**. **ஆக** **தீவின்** **பணமதிப்பு** **மறுபடியும்** 200 **ஆயிடுச்சி*
*.*


ஆக,
*
200 **
ரூபா** **வீங்கி** **வீங்கி** 5200 **ஆகி** **திடீர்னு** **வெடிச்சு** **
சுருங்கி** **மறுபடி** 200**ரூபா** **ஆயிடுச்சி**.*

முழிச்சுகிட்ட மதி பொழைச்சுகிட்டான். அவன் தான் இப்பொ தீவோட பணக்காரன். சொத்தை
கடைசியா வாங்கிய சிவாஜி சொத்தையாகிட்டாரு. மாட்டிகிட்டு முழிச்ச பென்ஸ்
பொறம்போக்கு...... நிலத்திற்கு சொந்தக்காரர் மாதிரி ஆயிட்டாரு.

*(**
சிவாஜி**, **பென்ஸ்**, **மதி** **ஆகியவர்களின்** "**தலை**"**விதியைப்** **
பார்த்து** **இந்தக்** **கதை** **உண்மையோ** **என்றுச்** **சந்தேகிப்பதற்கு** **
கதாசிரியர்** **பொறுப்பல்ல**.)*

இந்தக் கதை எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்குங்களா? இதுதானே தினம் தினம்
நடக்கிற பங்குச்சந்தை வியாபாரம், சொத்துவியாபாரம் இப்படி. இதை ஸ்பெகுலேஷன்
மார்க்கெட் அப்படின்னுச் சொல்றாங்க..

இதில இருந்த் தப்பிக்க வழி இருக்கா? இருக்கு மாதிரியும் தெரியுது இல்லாத
மாதிரியும் தெரியுது, ஆனா இந்தப் பணம் சுத்துற சுத்துல தலை சுத்துதுங்களே..
பூமி, சூரியன், நட்சத்திரக் கூட்டங்கள், பேரண்டம் எல்லாம் இதனாலதான்
கிறுகிறுத்துப் போய் சுத்திகிட்டே இருக்குதுங்களாம்.

எதுக்கும் கொஞ்சம் உட்கார்ந்து ஒரு டம்ளர் ஜில்லுன்னு மோர்குடிச்சு
ஆசுவாசப்படுத்திகிட்டுப் போங்க.


நன்றி – மகிபன்

1 கருத்து:

சுபாவள்ளி சொன்னது…

பங்கு சந்தைனா என்னன்னு இந்த கதைய 4 வாட்டி படிச்சா போதும்னு நினைக்கிறேன்... எனக்கே தலைசுத்துது