இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் பல பத்து காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம். ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்குமுறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி. ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன? ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான். இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது. இருக்கட்டும். உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள். அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது. சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 1. கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும். 2. நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடண்டியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது. 3. ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும். 4. 26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை. 5. இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும். 6. கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா! 7. நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் ! 8. இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும். 9. இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும். 10. பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும். *இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !* நன்றி - தந்தை பெரியார் |
செவ்வாய், ஜனவரி 18, 2011
முடியுமா உங்களால் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக