சனி, ஜனவரி 15, 2011

மழை ஜன்னலுக்கு பின்னால்..


தூரத்து பறவைகளின்
கொஞ்சலோடு
‌‍துயில் எழும் விடியல்,

பனித்துளி தொட்டிட
நாணத்தால்
தலை கவிழும் புல்லிஇதழ்,

மொட்டுக்களின் அன்பை
ஆசை ஆசையாய்
சுற்றி வரும் வண்ணத்துபூச்சி,

தன்னை நேசிக்கும்
கூழங்கல்லுக்கு
பதிலேது கூறாது ஓடிடும் நீரோடை,

கரையோரத்து மவுனங்களுக்கு
விடை புரியாது
தடுமாறும் கடலலை,

மழை ஜன்னலுக்கு பின்னால்
எட்டி பார்க்கும்
வானவில் பெண்,

மலை முகட்டில் ஒளிந்த சூரிய காதலனை 
மேகமுக்காட்டை விலக்கி
தேடவருகின்ற நிலா காதலி,

இப்படி..
தூரிகை தொடாத ஓவியங்களாய்
நிறையவே என்னுள்.
மயில் இறகை  பத்திரப்படுத்தும்
ஒரு குழந்தை தனத்தை போலவே

என் நினைவு பக்கங்களில் 
செதுக்கி
எண்ணி மகிழ்கிறேன்!
கூடவே
உங்களுடனான ஒவ்வொரு 
மணித்துளியும்..


    

         

3 கருத்துகள்:

சுபாவள்ளி சொன்னது…

தூரத்து பறவைகளின் கொஞ்சலோடு விடியல்....... அழகான கவிதைகள் உலா வர செய்தால் நலம் உங்கள் விருப்பம்......

சஞ்சயன் சொன்னது…

மிகவும் ரசித்தேன் நண்பரே!

//தன்னை நேசிக்கும்
கூழங்கல்லுக்கு
பதிலேது கூறாது ஓடிடும் நீரோடை//

இந்த வரிகள் கவிதையை வாசித்த பின்பும் மனதில் நிற்கிறது.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
சஞ்சயன்

Samaran Nagan சொன்னது…

நன்றி தோழர்..! உங்கள் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைகிறது மனம்